20 February 2007

இது காத‌ல் கால‌ம் - 9

மல்லியப்பூ முடியயில‌
மனச‌யும் முடிஞ்சுபுட்டே
சிக்கில்லா சடயோட‌
சிக்கிருச்சே மனசு

சீலயக் கட்டயிலே
சீவனயுங் கட்டிப்புட்டே
க‌லையாத‌ சீல‌க்க‌ட்டில்
க‌லையுதே ம‌ன‌சு

வ‌ள‌வி சிணுங்க‌யில
வ‌ய‌சும் சிணுங்குது
மாட்டுற‌ வ‌ள‌வியூட‌
மாட்டுதே ம‌ன‌சு

சிக்குன மனச
சீராக்கி சேப்பியோ?
கலஞ்ச மனசோட‌
க‌ல‌வ‌ர‌ஞ் செய்வியோ?

மல்லுக்கு நிக்காம
சொல்லொன்னு சொல்லு
ஊரே கேக்க உரக்கவோ இல்ல‌
பக்கமா வந்து பய்யவோ.

9 க‌ருத்துக்க‌ள்:

Unknown said...

ஆகா பிரேம்...

காதல் காலத்திலேயே நான் ரொம்ப ரசிச்சது இதுதாம்ப்பா...

நம்ம ஊரு பாட்டுன்னா சும்மாவா? ;-)

ச.பிரேம்குமார் said...

ம்ம்ம், ச‌ரியா சொன்னீக அப்பு :-)

ஜி said...

aaha... krama pura kavithaiyila asathitteenga saare...

kaathal kaalam mudiya pohuthunga... mudinja enna... ungalukkuthaan varudam muzusum kaathal kaalamaatche....

ஜி said...

sari.. unga blog thamizmanmla inaikalaiyaa?? atha thamizmanmla serunga.. ithu maathiri nalla padaipikalellaam pala perukku poi seranum :))))

ச.பிரேம்குமார் said...

Test comment

SubhaPrem said...

Romba supera iruku..... Kaathal Kaalam 10days thana? :( Feb la arambichathu Feb la mudiya kudaathu continue panungalen...!

Anonymous said...

aaka prem super aaka irunthathu - kramathu mettu pottu pada therinthal nantaga irukkum - really it come from you - thamizhe padikavillai entu ippadi kavithai eluthalama -aana

ச.பிரேம்குமார் said...

நன்றி அனானி,

ஆமாம், கிராமத்துச் சாயலில் பாட்டெழினாலே அதுல தானா ஒரு மெட்டு வந்து விழுந்துடுது. முடிஞ்சா என்றைக்காவது இதை பாடலாக்கி பாக்கலாம்

அது சரி, ஏன் அனானியாவே பின்னூட்டம் போடுறீங்க? உங்க பேரு என்ன? அண்ணாவா?????

Karthik said...

'Open Sesame'ன்னு சொல்லி எதோ புதையலுக்குள் வந்த மாதிரி இருக்கு போங்க.

சூப்ப்ப்பர்ப்..!