13 June 2007

'ஜி'யை க‌லாய்ப்போர் ச‌ங்க‌ம்

வாங்க‌ ம‌க்கா,

நாங்க‌ எல்லாம் சும்மா ஏதாவ‌து கிறுக்கிக்கொண்டிருக்கையில் ' க‌விஞ‌ர்க‌ளாம்' என் சொல்லி எங்க‌ளை ஓட்டிவிட்டு இப்போது அவ‌ர் ம‌ட்டும் க‌விதைப்போட்டியில் ப‌ங்க‌ப்பெற்று பாராட்டு பெற்றிருக்கும் ஜி'யை நாங்க‌ வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிறோம்

இப்ப‌டிக்கு
'ஜி'யை கலாய்ப்போர் ச‌ங்க‌ம்

அட‌, நாங்க‌ நாங்க‌ன்னு சொன்னாலும் இப்போதைக்கு ச‌ங்க‌த்தில‌ நான் ம‌ட்டும் தான் த‌னியா சோபா போட்டு உக்காந்திருக்கேன். இந்த‌ ப‌திவு மூல‌மா நிறைய‌ பேர் சேருவாங்கன்னு எதிர்ப்பார்ப்போம் ;)

அன்புட‌ன் க‌விதைப் போட்டியில் பரிசும் பாராட்டும் பெற்ற‌ வ‌லையுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள்

அருட்பெருங்கோ
ஜி
ந‌வீன் பிர‌காஷ்

ஆகியோருக்கு வாழ்த்துக்க‌ள்

25 க‌ருத்துக்க‌ள்:

ஜி said...

தல.. ஏன் இந்த கொலவெறி??

என்னதான் நடுவர் பாராட்டு பெற்றாலும் உங்க அளவுக்கெல்லாம் என்னால வர முடியாது :))

ச.பிரேம்குமார் said...

ம்ம்ம், இப்படி தண்ணடகத்தோட பேசினா மட்டும் நாங்க சமாதானம் ஆயிடுவோமா?

ச.பிரேம்குமார் said...

அப்புறம் இந்த உள்குத்துக்கு மட்டும் ஒன்னியும் கொறச்சல் இல்லை

Anonymous said...

//
நாங்க‌ எல்லாம் சும்மா ஏதாவ‌து கிறுக்கிக்கொண்டிருக்கையில் ' க‌விஞ‌ர்க‌ளாம்' என் சொல்லி எங்க‌ளை ஓட்டிவிட்டு இப்போது அவ‌ர் ம‌ட்டும் க‌விதைப்போட்டியில் ப‌ங்க‌ப்பெற்று பாராட்டு பெற்றிருக்கும் ஜி'யை நாங்க‌ வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிறோம்
//

இதை நாங்களும் வழி மொழிகிறோம்!


ஜி கலாய்ப்போர் ச‌ங்க‌ம்
சென்னை திருமங்கலம் கிளை
சென்னை மேற்கு!

ச.பிரேம்குமார் said...

அட, என்ன ஒரு ஆச்சரியம்..... நானும் திருமங்கலம் ஏரியா தாங்க. இன்னைக்கே நம்ம ஏரியாவுல் சங்கத்துக்கு ஒரு ஆபீஸ் பிடிச்சுட வேண்டியது தான் ;-)

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தல...

நம்ம ஜிய நம்பாத...
அவரு ஏற்கனவே கோடம்பாக்கத்துல துண்டு போட்டவரு...
இப்போ பெரிய போர்வைக்கு தயாராகிட்டு இருக்கார் போல... :)

ச.பிரேம்குமார் said...

வாய்யா அருட்பெருங்கோ,

சரியா தான் சொல்லியிருக்கே நண்பா....ஜிய நம்ப கூடாது போல!
இந்த பயலுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்கு பாரேன் ;)

இந்த வாரம் பெங்களூரு போலாம்னு இருக்கேன் ட்ரீட் வாங்க... நீயும் வர்றீயா, பெங்களூரு மார்க்கமா ஹைதிராபாத் போகலாம்

ச.பிரேம்குமார் said...

ஒரு வேளை மக்களுக்கு இது கும்மி பதிவுன்னு தெரியாம போச்சோ?
;-)

Anonymous said...

அன்புள்ள பிரேம் குமார் அண்ணா!!

இத்தனை நாள் என்னவரை நீங்கள் கலாய்த்தது என்னை வைத்து தான். நீங்கள் அதிகம் கலாய்த்ததால் என்னிடம் பேச மறுக்கிறார். பேசி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. என் வளையலை ஒட்டியானாம் என்ற அளவில் துரும்பாகிவிட்டேன்.

என்னடா மூன்றாம் வகுப்பு படித்தவள் இப்படி அழகாக தமிழ் எழுதுகிறேன் என்று நீங்கள் பார்க்கலாம். அவர் மட்டும் கவிதை எழுதி அதை படிக்க கூட என்னால் முடியாமல் போனால் அது அவருக்கு அவமானம் என்று கருதி நான் சுயமாக தமிழ் பயின்றேன்.

கவிதை கூட எழுதுவேன்

வலையில் விழுந்த மானென
நான்
வலைஞனாய் நீ
வலையை விட்டு துரத்த நினைக்கிறாய்
விழுந்த வலையே சுகமென்று
ஓடாமல் உன்னையே தொடர்கிறேன்
அன்று கண்ணசைவை கண்டு
காலமெலாம் உயிர்த்திருப்பேன்
என்று சொன்னாய் நீ
இன்று கண்ணெதிரே வாராதே
என்று சொல்வதும் நீ
அடர்கானகத்தில் அலையும்
திருட்டுப் புலியின்
பசியாற்ற புள்ளி மானாய்
நானிருந்தும்
ஏறெடுத்தும் பாராமல்
எட்டி எட்டி செல்கிறாய்
என் இறுதி நாளிதுவென்று
நான் முடிவெடுக்குமுன்னே
நம் முதல் நாள் எதுவென்று
நீ முடிவெடு
அது நாள் வரைக் காத்திருக்கும்
உன் இதய சங்"கீதா"

-- இந்த கவிதையாவது அவருக்கு காட்டுங்கள் அண்ணா. உங்களுக்கு புண்ணியமாய் போகும்.

சேதுக்கரசி said...

நான் பல மாதங்களாக பா.க.ச. உறுப்பினர். இப்போது ஜி.க.ச. உறுப்பினர் ஆக என்ன செய்யவேண்டும்? ;-)

சேதுக்கரசி said...

நடுவரின் (ஆசிப் அண்ணாச்சி தானே?) பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜி :-)

பாலராஜன்கீதா said...

//அடர்கானகத்தில் அலையும்
திருட்டுப் புலியின்//

இனிமேல் யார் கவுஜ எழுதினாலும் அதில் அடர் கானகம், புலி இரண்டும் வரவேண்டுமாம்
:-)

ச.பிரேம்குமார் said...

சேது, நீங்க எல்லாம் சங்கத்துல இருக்கீங்க. அமெரிக்கா பகுதி தலைவியா உங்கள் நியமணம் செய்யலாம்னு சங்கத்துல ஒரு மனதா முடிவு செஞ்சிருக்கோம் :-)

ச.பிரேம்குமார் said...

கீதா, அழாதேம்மா, மச்சான என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன். உன் கவிதைக்கே அவரு சாஞ்சிறமாட்டாராம்மா???

ச.பிரேம்குமார் said...

வாங்க பாலராஜன்கீதா, ஆமா கவனிச்சேன்... ஒரே புலி, கானகம்ன்னு. ஒரு வேளை போன மாசம் கர்நாடக வனப்பகுதிக்கெல்லாம் ஒரு விசிட் அடிச்சாரே... அதோட தாக்கமா இருக்குமோ?

நந்தா said...

என்ன நடக்குது இங்க. ஜி.கீதா வேற பாவம் ரொம்ப ஃபீல் பண்ணி பேசிட்டு போகுது.

ஜி said...

//அருட்பெருங்கோ said...
வாழ்த்துக்களுக்கு நன்றி தல...

நம்ம ஜிய நம்பாத...
அவரு ஏற்கனவே கோடம்பாக்கத்துல துண்டு போட்டவரு...
இப்போ பெரிய போர்வைக்கு தயாராகிட்டு இருக்கார் போல... :) //

ஆஹா அருட்.. யூ டூ??

ஜி said...

//ஜி.கீதா said...
அன்புள்ள பிரேம் குமார் அண்ணா!!//

ஆஹா கீதா.. அதே கவிதை கட் காப்பி பேஸ்ட் பண்ணிட்டு திரியிறியா?? எது சொல்றதா இருந்தாலும் நேர்ல வந்து சொல்லு கண்ணு :@@

ஜி said...

//சேதுக்கரசி said...
நான் பல மாதங்களாக பா.க.ச. உறுப்பினர். இப்போது ஜி.க.ச. உறுப்பினர் ஆக என்ன செய்யவேண்டும்? ;-) //

சேதுக்கா... இதெல்லாம் நம்பாதீங்க. இது சும்மா... :))

//நடுவரின் (ஆசிப் அண்ணாச்சி தானே?) பாராட்டைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஜி :-) //

நன்றி சேதுக்கா...

கோபிநாத் said...

\\அருட்பெருங்கோ
ஜி
ந‌வீன் பிர‌காஷ்\\

வாழ்த்துக்கள் ;))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாராட்டு பெற்றோருக்கு பாராட்டுக்கள்.

சங்கம் ஆரம்பித்தவருக்கும் பாராட்டுக்கள்.

ச.பிரேம்குமார் said...

கும்மியில் க‌ல‌ந்து கொண்ட‌த‌ற்கு ந‌ன்றிக‌ள் கோபிநாத் & முத்துல‌ட்சுமி :-)

ச.பிரேம்குமார் said...

//வலையில் விழுந்த மானென
நான்
வலைஞனாய் நீ
வலையை விட்டு துரத்த நினைக்கிறாய்
விழுந்த வலையே சுகமென்று
ஓடாமல் உன்னையே தொடர்கிறேன்
அன்று கண்ணசைவை கண்டு
காலமெலாம் உயிர்த்திருப்பேன்
என்று சொன்னாய் நீ
இன்று கண்ணெதிரே வாராதே
என்று சொல்வதும் நீ
அடர்கானகத்தில் அலையும்
திருட்டுப் புலியின்
பசியாற்ற புள்ளி மானாய்
நானிருந்தும்
ஏறெடுத்தும் பாராமல்
எட்டி எட்டி செல்கிறாய்
என் இறுதி நாளிதுவென்று
நான் முடிவெடுக்குமுன்னே
நம் முதல் நாள் எதுவென்று
நீ முடிவெடு
அது நாள் வரைக் காத்திருக்கும்
உன் இதய சங்"கீதா"//

கீதா, இன்னிக்கு தான் இதை முழுசா படிச்சேன். என்னமா உருகி எழுதியிருக்கே? சே... என் மனசே கேக்கல :(

மாப்ள ஜி, என்ன நடந்திருந்தாலும் தங்கச்சிய மனமுவந்து ஏத்துங்கோங்க... பாருங்க, புள்ள உங்களுக்காக தமிழெல்லாம் கத்துக்கிட்டு இருக்கு

சேதுக்கரசி said...

பிரேம், இதென்ன, ஜி கலாய்த்தல் சங்கமா இல்ல ஜி இணைத்தல் சங்கமா? ;)

ச.பிரேம்குமார் said...

என்ன சேது, நீங்களே இப்படி கேக்கலாமா?