7 August 2007

நட்புக்காலம் - 1

பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்

***

நம்மைப் பற்றிய‌
ஆசிரியர்களின்
அய்யங்களுக்குத்
துணையாய்
நூல்களை
படபடக்கச் சொல்லிவிட்டு
இயல்பாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்

***

அடிவானத்தை மீறிய‌
உலகின் அழகு என்பது
பயங்களற்ற இரண்டு
மிகச்சிறிய இதயங்களின்
நட்பில் இருக்கிறது

-
பாவலர் அறிவுமதி
(கவிதை தொகுப்பு : நட்புக்காலங்கள்)

5 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

the first two, good observation by the poet-
vij

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய்

காட்டாறு said...

நீங்க எழுதலையா???

Unknown said...

/ பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்/

பார்த்து விட்டு வந்து கவிதை எழுதுபவர்கள் கவிஞர்கள் ;)

Anonymous said...

சூப்பரான கவிதைகள்.

நான் ஏற்கெனவே சிலவற்றை என் பதிவில் இட்டிருக்கிறேன் பிரேம்.

http://kavithaikealungal.blogspot.com/2007/04/1.html

இருப்பினும் திரும்ப ஒரு முறை படித்துப் பார்க்க வைத்ததற்கு நன்றி!!