13 December 2007

இந்தியா ஏழை நாடா ? இந்தக் கோவிலை பாத்துட்டு சொல்லுங்க...

(படம் சரியா தெரியலைனா கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்க)http://picasaweb.google.com/prem.kavithaigal/VelloreGoldenTemple/photo#5143303261545000658

இந்தியா ஏழை நாடுன்னு யாருங்க சொன்னா? இங்க பாருங்க, எவ்வளவு தங்கங்கத்தை வாரி தெளிச்சிருக்காங்கன்னு...

மேலே இருப்பது வேலூர் ஸ்ரீபுரம் மகாலட்சுமி ஆலயம்

அந்தக் காலத்தில் மன்னர்களிடம் நிறைய காசு இருந்தது. நிறைய கோவில் கட்டினாங்க. மேலும் கலை நணுக்கங்கள் நிறைந்த கோவில்கள் கட்டி கலையையும், பக்தியையும் வளர்த்தாங்க.

ஆனா இப்போ அடிப்படை தேவையே பூர்த்தியாகாம பல மக்கள் இருக்கும்போது, புதுப்புது கோவில்களும், இத்தனை தங்கப் பூச்சுகளும் தேவைதானா?

சரி, அவ்வளவு பக்தி இருக்குதுன்னா பாழடைந்த நிலையில் எத்தனையோ பழைய கோவில்கள் இருக்கு. அதையெல்லாம் புதுப்பிக்கலாமே.

கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் பக்தி இருக்க வேண்டிய இடத்தில் பகட்டு இருக்க வேண்டுமா?

15 க‌ருத்துக்க‌ள்:

துளசி கோபால் said...

இதைத்தான் நானும் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.

காதில் செல்ஃபோன் வச்சுப் பேசிக்கிட்டேத் தெருவோரத்தில் '1'போற ஆளுகளை........

எது முக்கியமுன்னு இன்னும் தெரியலை(-:

Anonymous said...

ஆண்ட/ஆள்கின்றவர்களால் ஏழையாக ஆக்கப்பட்ட/டுகின்ற நாடு.

வேறு விதமாகவும் பார்க்கலாம், தான் உயர்ந்தது, மதிப்பு வாய்ந்தது என்று நினைக்கும் ஒன்றை மனிதன் கடவுளுக்காக சமர்ப்பிக்கிறான்.

ஆனாலும், இதில் செலவிடப்பட்ட கோடிகளில் பாழடைந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு புதுவாழ்வு கொடுத்திருக்கலாம்.

துளசி மேடம், தெருவோரத்தில் 1 போற ஆட்களுக்கு எங்கள் physics professor சொன்ன வைத்தியம்தான் சரி. கம்பில (அல்லது any easy good conductor-ல) 5-10 V DC current பாய்ச்சி தெருவோரங்கள்ள வைக்கவேண்டியதுதான். (தண்ணி தேங்கின இடம்னா ரொம்ப வசதி)

அப்புறம் ஒரு பய வீட்ட விட்டு வெளீல 1 போவான்றிங்க ?

அன்புடன்
முத்து

பாச மலர் / Paasa Malar said...

நம்ம பொற்கோவில் தோற்றுவிடும் போலிருக்கிறது..சரியான கேள்விதான்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

யாராவது போறபோக்கில் ஒரு புண்ணியவான்" அவனட்ட இருக்கு அவன் கொடுக்கிறான், நீயே தடுக்கிற"
என தத்துவமழை பொழியப் போறார்.
பைத்தியக் கூட்டம்...இனி இதைச் சுரண்டி விற்காமல் கோடிக்கணக்கில் செலவு செய்து ஏ கே 47 உடன் காவல் போட்டு ; கோவிலா?? இராணுவத் தளமா? என்று வித்யாசமில்லாமல் செய்யப் போகிறார்கள்.
திருந்தவே திருந்தாது...இந்தத் தி(தெ)ருக் கூட்டம்.
பக்தி,இறை என்பதை உணராத செம்மலிகள்...

புரட்சி தமிழன் said...

எத்தனை ஏழைகள் ஏமாற்றப்பட்டிருந்தால் சுரண்டப்பட்டிருந்தால் இவளவு பணம் வெள்ளியாகவும் தங்கமாகவும் கொள்ளை காரர்களால் பாவாத்திற்க்கு பரிகாரமாய் வீனாக்கப்படுகிறது என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது. எந்த நாட்டில் பெரிய பணக்காரர்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த நாட்டில் தான் அதிக ஏழைகளும் இருப்பார்கள்.

Anonymous said...

vaandhi varugiradhu.

i saw the swami narayan temple in canada. I thought 'that' was extravagant. This is worse.

if u watch dinamalar, they display temple monkeys and garudans in golden dress.
-aathirai

கோபிநாத் said...

எனக்கும் தோன்றிய கேள்விதான்...ஆனால் ஒன்னும் சொல்ல முடியாது...;(

SurveySan said...

If you approach any problem, 'emotionally' nothing would make sense ;)

I initially thought its a 'wasted' effort.

but, in a way, this is good. We do need new great things to 'showcase' in our land.

this is a good piece and will certainly attract newcomers and indirectly help improve the lives of people around it.

வெங்கட்ராமன் said...

இந்தியா ஏழை நாடு இல்ல. . .
ஏழைகள் இருக்கும் நாடு.
- ப.சிதம்பரம்

இல்லாதவன் கூட கடன் வாங்கி திருப்பதிக்கும், சபரி மலைக்கும் போறத நினைக்கும் போது இதை விட கஷ்டமாத்தான் இருக்கு.

SurveySan said...

inspired by you :)

Check this out

மாசிலா said...

//இந்தியா ஏழை நாடு இல்ல. . .
ஏழைகள் இருக்கும் நாடு.
- ப.சிதம்பரம்//

"இந்தியா ஏழை நாடு இல்லை,
ஏழைகளை உருவாக்கும் நாடு!"

இப்படி திருத்தி படித்தால் சரி என தோன்றுகிறது.

துளசி கோபால் said...

பதிவை முதலில் படிச்சப்பக் கோவில் படங்கள் தெரியலை. இப்போ மறுபடி வந்தால் அடடா.......யானைகள் அட்டகாசம்.

ஆனாலும், அடிப்படை வசதிகள் இல்லாத நாட்டுக்கு இது கொஞ்சம் ஜாஸ்திதான்.

இதே அழகைச் சிற்பங்கள் மூலமாநம்ம அக்ஷர்தாம்லே இருப்பதுபோல் செஞ்சிருக்கலாமோ.


அவ்வளவு தங்கம் .......?

திருடங்க கிட்டே இருந்து காப்பாத்தணும் இல்லே? அதுக்கு வேலைக்குக் காவலாளிகள் நிறைய வேணும். வேலை வாய்ப்பு உருவாகுதுன்னு சந்தோஷப்பட்டுக்கணுமா?

Anonymous said...

Ethu Senchalum silar nonna kandup idikkarathula romba ketti karankalai rrukkanga

Unknown said...

First of all As Indians we should not say this is a waste of time and money or not requied for Poor country like india,
we should think that it would create tourism and lot of people will get life therafter for 1000 of years because of this temple.
Our goverments are spending crores and crores for lot of useless projects, but temples or projects like this will showcase Our Country and our culture.just think if they are not lot of gold/money for this temple then poeple will not speak or visit this temple, it would be just another one of the 1000temples in our place.
Jaihind

ச.பிரேம்குமார் said...

சுரேஷ், நீங்கள் சொல்வதிலும் தவறில்லை.. ஆனால் இந்தக் கோவிலைப் பற்றி கேள்விப்பட்டதும் முதலில் நினைவுக்கு வந்தது

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி"

அதனால் தான் இந்தப்பதிவு