7 January 2008

சென்னை புத்தகக் கண்காட்சி '08 - நிறைகளும் குறைகளும்

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சனிக்கிழமை (5 ஜனவரி, 2008) செல்ல நேர்ந்தது. விடுமுறை நாட்களில் 11 மணிக்கே கண்காட்சி தொடங்கிவிடும் எனும்போது 12 மணிக்கு சென்றபோதுக்கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை

1 மணி வாக்கில் நண்பர்கள் அருட்பெருங்கோ,அ.பிரபாகரன் மற்றும் நித்தியானந்தம் ஆகியோர் சேர்ந்துக்கொள்ள கண்காட்சியில் சுற்ற ஆரம்பித்தோம்

* இந்த முறை கவிதை புத்தகங்கள் அதிகமாக தென்படவில்லை. சுற்றிச்சுற்றி வைரமுத்து, தபூ சங்கர் கவிதைகள் தான் கண்ணில் பட்டன. இளம் பெண்கள் அதிகமாக தபூ சங்கரின் காதல் கவிதைகளை வாங்கிச் சென்றனர். தபூ சங்கரின் சமீபத்தியப் புத்தகம் 'நெஞ்சவர்ணக் கிளி'. நினைவுகளை மட்டுமே மையமாகக் கொண்ட நல்லதொரு கவிதைத் தொகுப்பு

* நிலாரசிகனின் 'மயிலிறகாய் ஒரு காதல்' புத்தகம் கண்காட்சியில் விற்பனைக்கு கிடைத்தது. அதுவும் நல்லதொரு காதல் தொகுப்பு. புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதென்றும் கேள்வி. நிலாவுக்கு வாழ்த்துக்கள்

வலைப்பதிவுலக காதல் கவிஞர்கள் எல்லாம் அடுத்த கண்காட்சிக்குள்ளாவது புத்தகம் போட முடிவெடுக்கலாம்.

* இளைஞர்கள் பலர் புரட்சிகரமான சிந்தனைகள் கொண்ட புத்தகங்களை தேடிப் பிடித்து வாங்குவது மகிழ்ச்சி தரும்படியாக இருந்தது

மதியத்திற்கு மேல் நண்பர்கள் ப்ரியன், கென், அனிதா, எழில், த.அகிலன் ஆகியோர் சேர்ந்துக் கொள்ள கண்காட்சிக்கு சென்றது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததாய் ஆயிற்று. மாலை நெருங்ககையில் மக்கள் கூட்டம் அலைகடலென கண்காட்சியில் திரண்டிருந்தது பார்க்கவே பரவசத்தை தந்தது.

சில குறைகள்

சனிக்கிழமை கண்காட்சி தொடங்கி இரண்டாவது நாள் என்ற போதும், நிறைய புத்தகங்கள் வந்திருக்கவில்லை. சில அரங்குகளை அப்போது தான் சரி செய்துக் கொண்டிருந்தார்கள்.

உணவு ஏற்பாடு மிக மிக மோசம். எரிச்சல் மூட்டும் விதமாகவே இருந்தது. சென்ற முறை வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். இந்த முறை இந்த குறைபாடுகள் ஏன்?

5 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

ம்ம்ம்...மூணு வருஷம் ஆச்சு..இதை எல்லாம் பார்த்து..;(

நீங்க என்னென்ன புத்தகம் வாங்கினிங்ன்னு சொல்லுங்க மாப்பி ;)

Raghavan alias Saravanan M said...

கலக்கிப்புட்டீக.. :)

//நீங்க என்னென்ன புத்தகம் வாங்கினிங்ன்னு சொல்லுங்க மாப்பி ;)
//

ரிப்பீட்டேய்ய்ய்....

Karthik said...

ஜனவரிலதான் புத்தக கண்காட்சியா? அடுத்த முறை நானும் வர்றேன்.

ஆமா, நீங்க என்னென்ன புக் வாங்கினீங்க?

[கொஞ்சம் லேட்டா வந்திருக்கேனோ?]

ச.பிரேம்குமார் said...

கண்டிப்பா கார்த்திக், அடுத்த முறை சேர்ந்தே போவோம் :)

ச.பிரேம்குமார் said...

கோபி, ராக்ஸ்

நான் வாங்கினது கல்கியின் 4 புத்தகங்கள் கொண்ட pack :)

மற்றபடி இம்முறை நிறைய வாங்கவில்லை