6 February 2008

கவிஞர் தபூ சங்கருக்கு திருமண வாழ்த்துக்கள்

காதல் கவிஞர் தபூ சங்கருக்கும் செல்வி.ஜெயலட்சுமிக்கும் வரும் 10ம் தேதி (பிப்ரவரி 10, 2008) சேத்தியாதோப்பில் திருமணம் நடைபெறுகிறது. காதல் கவிஞர் காதல் மாதமான பிப்ரவரிலேயே திருமணம் செய்துக் கொள்வது சிறப்பு. திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.

காதல் கவிதைகள் எழுதவதில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டவர் தபூ சங்கர். எளிய நடையில், அழகுத்தமிழில் காதலை மட்டுமே மையமாகக் கொண்ட கவிதை தொகுப்புகளின் சொந்தக்காரர். வலைப்பூவுலகம் சார்பாக தபூ சங்கருக்கு திருமண வாழ்த்துக்கள். அவரின் திருமண வாழ்வு சிறப்பாக அமையவும் அவர் காதல் கவிதைகள் மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்

தபூ சங்கரின் சில படைப்புகள்:
தேவதைகளின் தேவதை
விழியீர்ப்பு விசை
இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்! காதல் பிறந்திருக்கிறது
எனது கறுப்புப் பெட்டி
அடுத்த பெண்கள் கல்லூரி 5 கி.மீ
நெஞ்சவர்ணக்கிளி
திமிருக்கும் அழகென்று பெயர்
பார்த்தால்சிணுங்கி
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
மழையானவள்
சேலையோரப்பூங்கா

10 க‌ருத்துக்க‌ள்:

இராம்/Raam said...

கல்யாணத்துக்கு அப்புறமும் காதல் கவிதைகள் எழுதுவாரா???? :)

ச.பிரேம்குமார் said...

SINGLEஆ இருக்கும் போதே காதல் கவிதை எழுதுனவரு MINGLE ஆனதுக்கு அப்புறம் எழுதமாட்டாரா என்ன? ;-)

கோபிநாத் said...

காதல் கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

Anonymous said...

//திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்///

காதல் கவிஞருக்கு இந்த வறண்ட நிலை ஏனோ ?????

ச.பிரேம்குமார் said...

//காதல் கவிஞருக்கு இந்த வறண்ட நிலை ஏனோ ?????//

நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது ரவி.

காதல் கவிதை எழுதுபவர்கள்
எழுதிக்கொண்டே தான் இருக்கிறார்கள்;
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியவான்கள் தான் காதலிக்கிறார்கள்!

:)

ஜே கே | J K said...

கவிஞருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.

"சேலையோரப்பூங்கா" அவரது படைப்பு.

ச.பிரேம்குமார் said...

நன்றி JK. அதையும் சேர்த்துக் கொள்கிறேன் :)

Anonymous said...

காதலிப்பதை குற்றமாகச்சொல்லும் இந்திய சமூகச்சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))

வாழ்க வளமுடன்...!!!!!!!!!!

ச.பிரேம்குமார் said...

//காதலிப்பதை குற்றமாகச்சொல்லும் இந்திய சமூகச்சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம் :)))//

சரி சரி, ஃபீல் பண்ணாதீங்க தல! நமக்கு அடுத்த தலைமுறைக்கு இந்தப் மாதிரி பிரச்சனைகள் இல்லாமல் இருக்க காதல்தேவதை ஆசீர்வதிக்கட்டும் ;-)

Anonymous said...

கல்யாண வாழ்த்துக்கள் :))
காதல் வளரட்டும்

நா. முத்துக்குமார் உண்மையத்தான் சொல்லி இருப்பார் போல :)