14 March 2008

கத்தாழக் கண்ணால...


மிதமான BEAT உடன், ஆபாசமில்லாத வரிகளுடன், இதயத்தையும் கால்களையும் ஆட்டுவிக்கும் சுகமானப் பாடல். திரையிலும் அழகாய் நடனமாடுகிறார் ஸ்நிகிதா. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு குத்துப்பாட்டு :-)

 

படம்         : அஞ்சாதே

வரிகள்     : கபிலன்

 

தகிட தகிட தகிட.........தா

தகிட தகிட தகிட.........தா

 

கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை

இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

கூந்தல் போர்வையில் குடிசயப் போட்டு

கண்கள் ஜன்னலில் கதவினைப்பூட்டு

கண்ணே தலையாட்டு

காதல் விளையாட்டு

 

கலகலவென ஆடும் லோலாக்கு நீ

பளபளவென பூத்த மேலாக்கு நீ

தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ

வளவளவென பேசும் புல்லாக்கு நீ

 

அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க

அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க

வெண்ணிலா சொந்தக்காரிங்க.......

 

(கத்தாழக் கண்ணால)

 

கருகருவென கூந்தல் கைவீசுதே

துருதுருவென கண்கள் வாய்பேசுதே

பளபளவென பற்கள் பல்கூசுதே

பகலிரவுகள் என்னை பந்தாடுதே

 

உன்னோடு கண்ஜாடை இலவச மின்சாரம்

ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்

உன் மூச்சு காதல் ரீங்காரம்

 

(கத்தாழக் கண்ணால)

 


Technorati Tags    

6 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

மாப்பி நம்ம ஏரியாவுல இந்த பாட்டு தான் சுப்பிரபாதம் ;))

கலக்கல் பாட்டு..;)

ஸ்ரீ said...

ஆண்ட்ரியா அழகாய் நடனமாடுகிறாரோ?

இருக்கட்டும் இருக்கட்டும்.

ச.பிரேம்குமார் said...

ஆமா மாப்பி, கலக்கல்ஸ் தான் :)

ச.பிரேம்குமார் said...

ஸ்ரீ, ஆண்ட்ரியான்னு சொல்லி ஒரு வரலாற்றுப் பிழை செய்துட்டேன். அது ஏதோ புதுப்பொண்ணாம்... பேரு ஸ்நிகிதான்னு நினைக்கிறேன் :)

Naresh Kumar said...

//ஸ்ரீ, ஆண்ட்ரியான்னு சொல்லி ஒரு வரலாற்றுப் பிழை செய்துட்டேன். அது ஏதோ புதுப்பொண்ணாம்... பேரு ஸ்நிகிதான்னு நினைக்கிறேன் :)//

அது மட்டுமில்ல, மிஷ்கின்னோட நந்தலாலா படத்தில் இந்த பொண்ணூதான் ஹீரோயின்னு கேள்விப்பட்டேன்.

கோபால் said...

முக்கியம்மா மாராப்ப சரியா பயண்படுத்தி இருக்கங்க :)))