17 March 2008

கண்ணதாசன் காரைக்குடி


கண்ணதாசன் காரைக்குடி

பேரச்சொல்லி ஊத்திக்குடி

குன்னக்குடி மச்சானப்போல்

பாடப் போறேன் டா

 

கண்ணாடி கோப்பையில கண்ணமூடி நீச்சலடி

ஊறுகாயத் தொட்டுக்கிட்டா ஓடிப்போகும் காய்ச்சலடி

போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்துக் குடிச்சா அது ஒரு சோஷலிஸம் தான்

 

பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க

இல்லா இடம் இந்த இடம் தானே

இந்த இடம் இல்லயின்னா சாமி மடம் தானே

மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே

இயக்குனர் ஆரு அங்க பாரு பொலம்புறாரு

நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையே

நூறத் தாண்டுனா நடக்க பாதை இல்லையே

 

(கண்ணதாசன் காரக்குடி)

 

அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்கே வந்தா

டப்பாங்குத்து தானே

ஓவரா ஆச்சுத்துன்னா வெட்டுக்குத்து தானே

எங்களுக்கு தண்ணியில கண்டம் இல்ல

எங்களுக்குள் ஜாதி மதம் இரண்டும் இல்ல

கட்சிக்கார மச்சி என்ன ஆச்சு

வேட்டி அவுந்துப் போச்சு

ரோட்டுக் கடையில் மனுஷன் ஜாலியப் பாரு

சேட்டுக் கடையில் மனைவி தாலியப் பாரு

 

(கண்ணதாசன் காரக்குடி)


Technorati Tags    

3 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்சேர்ந்துக் குடிச்சா அது ஒரு சோஷலிஸம்\\

\நூறு மில்லிய அடிச்சா போதை இல்லையேநூறத் தாண்டுனா நடக்க பாதை இல்லையே\\

கலக்கல் வரி மாப்பி...சூப்பர் பாட்டு ;)))

ஸ்ரீ said...

எனக்கென்னவோ இந்த வரிகள் சூப்பர் மாதிரி தெரியுது.

"மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே

சித்தாளு பொண்ண நினைச்சு இடிக்கிறாரே"

கத்தால பாட்டு போட்டதுக்கு ஏதாவது சொல்லப்போறாங்களோன்னு இந்த பாட்டு போட்டுட்டீங்களா? :D

கோபால் said...

போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்

சேர்ந்துக் குடிச்சா அது ஒரு சோஷலிஸம் தான்

அருமையான வரிகள்

என்ன ஒரே கானா பாட்டா இருக்கு???