27 November 2008

இரண்டு ஆண்டுகள், நூறு பதிவுகள் மற்றும் உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளிவந்த என் கவிதையொன்று

அவளும் நாய்க்குட்டியும்



பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது
ஒரு நாய்க்குட்டி பொம்மை
கண்டதுமே அலறியவளை
புரியவைத்து சமாதானப்படுத்தியதும்
மெல்லப் புன்னகைக்கிறாள்
கூடவே சிரிக்கிறது நாய்க்குட்டியும்
பிடித்திழுத்து காதுகளைத் திருகி
மூக்கினைக் கடித்து
மேல் ஏறி அமர்ந்த போது
அது முழுதாய் வசமாகியிருந்தது


தெருவில் போகும் நாய் ஒன்றினை
வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறாள்

நன்றி : உயிரோசை

***

மொழியோடு பயணம் செய்ய ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வலைப்பதிவு ஆரம்பித்து சில காலம் பதிவுகள் எழுதிக்கொண்டு மட்டும் இருந்தேன். பின்பு மெல்ல அடுத்தவர்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொய்வடைந்தது பயணம் :)

இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.இதோ, இது நூறாவது பதிவு


இந்த வலைப்பதிவும், பதிவுலகமும் என்னுள் நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. நிறைய படிக்க துவங்கியிருக்கிறேன், நிறைய நண்பர்களை பெற்றிருக்கிறேன், இன்னும் நிறைய 'நிறைய'

பதிவுலகத்தின் மூலமாக கிடைத்த அனைத்து நண்பர்களுக்கு இக்கணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

33 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

வாழ்த்துக்கள் பிரேம்!!!

ட்ரீட் எங்க?

நரேஷ்
www.nareshin.wordpress.com

Subbu said...

வாழ்த்துக்கள் பிரேம்...

துளசி கோபால் said...

அட! ரெண்டு வருசம் முடிஞ்சுருச்சா?

இனிய வாழ்த்து(க்)கள் !!

மூணாம் வருடம் இன்னும் நிறைய எழுதுங்க.

Karthik said...

டிராவிட் மாதிரி Classic Game ஆடியிருக்கீங்க. வாழ்த்துக்கள் பிரேம்.
:)

மூணு மேட்டருக்கும் தனித்தனியா ட்ரீட் வெச்சுக்குவோம். உங்க விருப்பப்படி.

Karthik said...

//இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆஹா, இதுவே ஒரு ட்ரீட் மாதிரி இருக்கே??
:)

MSK / Saravana said...

இரண்டு வருஷம்.. நூறாவது பதிவு.. உயிரோசையில் கவிதை..

கலக்க்றீங்க்னா.. :)

MSK / Saravana said...

கவிதை அழகு.. :)

MSK / Saravana said...

//இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன//

அடிச்சி ஆடுங்க.. ;))

நந்தா said...

அப்போ நீ (மு)மூத்த பதிவர் தானே...

வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி கிரி வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ச.பிரேம்குமார் said...

நன்றி நரேஷ்.... ட்ரீட் தானே வச்சிருவோம் :)

சந்தனமுல்லை said...

வாழ்த்துக்கள் பிரேம்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்.. :)

நாடோடி இலக்கியன் said...

நூறுக்கு வாழ்த்துகள் பிரேம்.
//இனி தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன//
இனிதான் கச்சேரி ஆரம்பமா?
கலக்குங்க,நிறைய காதலை எதிர்பார்த்து நாடோடி இலக்கியன்.

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சுப்பு வருகைக்கும் வாழ்த்துக்கும் :)

ச.பிரேம்குமார் said...

//அட! ரெண்டு வருசம் முடிஞ்சுருச்சா?

இனிய வாழ்த்து(க்)கள் !!

மூணாம் வருடம் இன்னும் நிறைய எழுதுங்க.

//
ஆமாங்க அக்கா, இரண்டு வருசம் ஓடிப்போச்சு. தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு நன்றி :)

நீங்க சொன்ன மாதிரி இந்த வருடம் நிறைய எழுத முயற்சி செய்யுறேன்

ச.பிரேம்குமார் said...

//மூணு மேட்டருக்கும் தனித்தனியா ட்ரீட் வெச்சுக்குவோம். உங்க விருப்பப்படி.//

கண்டிப்பா கார்த்திக். நமக்குள்ள ஏகப்பட்ட ட்ரீட்கள் பாக்கி இருக்கே :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மாப்பி ;)))

நவநீதன் said...

சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்...!

நல்ல அற்புதமான கவிதை....

ச.பிரேம்குமார் said...

//கலக்க்றீங்க்னா.. :)//

நன்றிங்கண்ணா :)

ச.பிரேம்குமார் said...

சரவணா, உன் தொடர் ஆதரவுக்கு நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//அப்போ நீ (மு)மூத்த பதிவர் தானே...
//

யோவ், முத்தப் பதிவர்னா அது நீ தான்பா... அதுக்காக நான் மூத்தப் பதிவர் அப்படின்னும் சொல்ல முடியாது ;)

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி சந்தனமுல்லை :)

ச.பிரேம்குமார் said...

நன்றிகள் பல முத்துலட்சுமி அக்கா :)

ச.பிரேம்குமார் said...

//இனிதான் கச்சேரி ஆரம்பமா?
கலக்குங்க,நிறைய காதலை எதிர்பார்த்து நாடோடி இலக்கியன்.//

ரொம்ப நாளாச்சுங்க காதல் கவிதை எழுதி. பார்ப்போம், ஏதாவது கவிதை தேறுதான்னு? :)

ச.பிரேம்குமார் said...

//வாழ்த்துக்கள் மாப்பி ;)))//

மிக்க நன்றி மாப்பி.... ஆக்சுவலி உனக்கு சிறப்பு நன்றிகள் சொல்லனும் ;)

geevanathy said...

நல்ல கவிதை
பாராட்டுக்கள்

///உயிரோசை இதழில் வெளிவந்த என் கவிதையொன்று......நூறாவது பதிவு.. ///

வாழ்த்துக்கள்

ச.பிரேம்குமார் said...

//சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்...!//

மிக்க நன்றி நவநீதன் வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும்

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி ஜீவன் வந்தமைக்கும் வாழ்த்துக்களுக்கும் :)

பாண்டித்துரை said...

வாழ்த்துகள் ப்ரேம்

கோபால் said...

Congrats Prem Kumar Sir :)

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி பாண்டித்துரை :)

ச.பிரேம்குமார் said...

நன்றி கோபால் :)