4 April 2009

காதல் சாலை



வாரம் சீக்கிரமாக ஓடி வெள்ளிக்கிழமை வந்துவிட்டது. புதுவைக்கு கிளம்ப வேண்டும். நாவலூரில் வேலை செய்வதால் கோயம்பேடு பேருந்து நிலையம் போக தேவையில்லை. அங்கு போகும் நேரத்திற்கு புதுவைக்கே போய்விடலாம். இங்கிருந்து கோவளம் போய்விட்டால் எப்படியும் ஒரு பேருந்தை பிடித்துவிடலாம். ஒவ்வொரு வாரமும் இப்படி பயணம் செய்வது சில சமயம் அலுப்பை தருகிறது. ஆனாலும் என்ன செய்வது? நீயல்லாத சென்னையில் வாரயிறுதிகளை கழிப்பதில் சுத்தமாக எனக்கு விருப்பமில்லை

அதோ, புதுவை போக்குவரத்து கழகப் பேருந்து வந்துவிட்டது. வழக்கம் போல பேருந்து நிரம்பியிருக்கிறது. மறுயோசனையின்றி படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன். படிக்கட்டில பயணம் செய்வது ஆபத்தானது. தூங்க முடியாத சிக்கலும் இருக்கிறது. இருப்பினும் ஏனோ அது மிகவும் பிடித்திருக்கிறது. அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் என்று சொல்கிறார்கள். ஆனாலும் காதலுக்காக எதையும் செய்ய துணிபவர்கள் தான் அதிகம்.

ரொம்ப நேரம் காலை மடக்கி உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. உள்ளம் சொல்வதையெல்லாம் உடம்பு கேட்க மறுக்க ஆரம்பித்திவிட்டது. உடற்பயிற்சி செய்தால் தானே? கல்லூரியில் சேர்ந்ததும் தான் உடற்பயிற்சி செய்யவே ஆரம்பித்தேன். காதலின் கரங்களில் சேர்ந்ததும் அதை விட்டாயிற்று. காதலி கிடைக்கும் வரை தான் உடல் அழகாக இருக்கவேண்டும். காதலி கிடைத்ததும் உள்ளம் அழகாக இருந்தாலே போதும். அப்படித்தானே முகில் என்று அப்போது கேட்டு சிரித்தார் மாமா. அப்போது உடலை பற்றி கவலைப்படாத உள்ளம் இப்போது அதை நொந்து என்ன பயன்?

இரண்டரை மணி நேரப் பயணம் தான், எனினும் பேச்சுத்துணை இல்லாமலோ அல்லது தூங்காமலோ பயணம் செய்வது எனக்கு விருப்பமில்லாது ஒன்று. உனக்கு பிறகு பேச்சுத்துணையாக யாரும் தேவைப்படவில்லை. அல்லது மனம் ஒப்பவில்லை. இப்போது தான் நினைவுக்கு வந்தது. இசைப்பேழையில் இருக்கும் பாட்டுகளை கேட்கலாம். எல்லாம் எனக்கு மிக மிக விருப்பமானவை. ரகுமான் இசையமைத்த பாடல்கள்.

இல்லை. அவை என் விருப்பப் பாடல்கள் மட்டுமன்று. நமக்கு மிகவும் பிடித்தமானவை. ஒவ்வொரு பாடலிலும் உன் நினைவும் சேர்ந்திருக்கும். ஒவ்வொரு பாடலை பற்றியும் எவ்வளவு பேசியிருப்போம். எத்தனை முறை அந்த இசையுடன் பயணித்திருப்போம். வேண்டாம், இப்போது கல்யாணியில் அமைந்த பாடல் கூட எனக்கு முகாரியாக கேட்கும்.

மகாபலிபுரத்தை தாண்டியாயிற்று. இன்னும் ஒன்றரை மணி நேரம்தான். கிழக்கு கடற்கரை சாலையின் அழகை மீறி ஏதோவொரு சலிப்பு இருந்துகொண்டேயிருக்கிறது. சாலையின் ஓரத்தில் இருக்கும் மஞ்சள் கோட்டை இப்போது தான் கவனித்தேன். பேருந்தின் வேகத்திற்கேற்ப அதுவும் மூச்சிரைக்க ஓடிவருவது போல் தோன்றுகிறது. பேருந்து நகர நகர அந்த மஞ்சள் கோடு பேருந்து சக்கரங்களோடு ஒட்டுவதும் விலகுவதுமாய் இருந்தது. ஒவ்வொரு முறை விலகும்போது மீண்டும் அதே வேகத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது. பல சமயங்களில் சக்கரங்களோடு ஒன்றிணைந்து கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுகிறது. நம் காதல் காலங்களின் ஊடல் பொழுதுகளையும் அதன்பின்னேயான கூடல் கணங்களையும் நினைத்து கொள்கிறேன்.

காதல் கணங்கள் மட்டுமில்லை, அதன் நினைவுகளோடு உறவாடும் தருணங்களும் கூட காலத்தை மறக்கடிக்க செய்யும் சக்திபடைத்தவை போலும். பேருந்து மதுராந்தகம் தாண்டி புதுவைக்குள் நுழைந்துக்கொண்டிருப்பதை நான் உணரவேயில்லை. முத்தியால்பேட்டையில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் தயாராக இருக்கும்படி நடத்துனர் சொல்லும் போது இயல்புக்கு திரும்பினேன்.

பையை தேடியெடுத்து முத்தியால்பேட்டை சந்திப்பில் இறங்கியபோது தான் நினைவுக்கு வந்தது. பேருந்தோடு பயணித்துக்கொண்டிருந்த மஞ்சள் கோட்டை காணவில்லை. எந்த இடத்தோடு நின்றுபோனதென தெரியவில்லை. அதிகாலை பனி கொட்டும் மார்கழி மாதத்திலொரு நாள் திடீரென்று நீ காற்றோடு கலந்து போனதை நினைத்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை!

அணு அணுவாய் சாவதாய் முடிவெடுத்தப்பின் காதல் சரியான வழி தான் - பாவலர் அறிவுமதி
படம் உபயம் : கூகுள்

29 க‌ருத்துக்க‌ள்:

Raju said...

எப்புடிண்ணே..இப்படியெல்லாம் எழுதுறீங்க!
சூப்பரு தல..ஒன்னுமே இல்லாத மேட்டரக் கூட இவ்ளோ அழகா எழுத முடியுமா?
கலக்கிட்டீங்கண்ணே...

வேத்தியன் said...

நல்லா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துகள்...

ச.பிரேம்குமார் said...

டக்ளஸ் அண்ணே, ரொம்ப நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//ஒன்னுமே இல்லாத மேட்டரக் கூட //

டக்ளஸ் அண்ணே, காதல் ஒன்னுமே இல்லாத மேட்டரா? :)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வேத்தியன் :)

கதிரவன் said...

என்ன பிரேம், சொந்த அனுபவமா ? ;-)

இனிய காதல்கதைன்னு நினைச்சுப்படிச்சேன்..இப்டி சோகமா முடிஞ்சிடுச்சே?

Karthik said...

ஆஹா, சூப்பர்ப் பிரேம்..!

மௌன ராகத்தில் க்ளைமேக்ஸ்ல ரயில் தண்டவாளம் ஒன்னு சேரும் ஞாபகம் இருக்கா?

அதை விட அழகா இருக்கு உங்க மஞ்சள் கோடு பத்தின வரிகள். பின்றீங்க..!

Karthik said...

ஆமா, அந்த அக்கா பேரு என்ன சொன்னீங்க? ப்ச், மறந்து போச்சு..! ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாள் கழிச்சு பிரேம் கிட்ட இருந்து காதல் மொழி.. கலக்கல்..

ச.பிரேம்குமார் said...

ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க கதிரவன் :)
வலையுலகிற்கு மீண்டும் வருக!

அப்புறம் ஏனிந்த கொலவெறி.... :)
இது ஒரு புனைவுங்க தல

ச.பிரேம்குமார் said...

//மௌன ராகத்தில் க்ளைமேக்ஸ்ல ரயில் தண்டவாளம் ஒன்னு சேரும் ஞாபகம் இருக்கா//

இல்லையே... youtubeல் தேடி பாக்கனும் :)

ச.பிரேம்குமார் said...

//ஆமா, அந்த அக்கா பேரு என்ன சொன்னீங்க? ப்ச், மறந்து போச்சு..! ;)//

யாருக்கு தெரியும்? முகில தான் கேக்கனும் :)

anbudan vaalu said...

:))

ராம்.CM said...

காதல் வழியில் சாலைக்கோடு..அருமை.

ச.பிரேம்குமார் said...

//ரொம்ப நாள் கழிச்சு பிரேம் கிட்ட இருந்து காதல் மொழி.. கலக்கல்..//

என்ன செய்யுறது பாண்டியன், காதல் பதிவு எழுதினா மக்கள் பின்னூட்டங்களில் செம கலக்கு கலக்குடுறாங்களே :)

ச.பிரேம்குமார் said...

உங்கள் புன்னகைக்கு நன்றி வாலு :)

ச.பிரேம்குமார் said...

//ராம்.CM said...
காதல் வழியில் சாலைக்கோடு..அருமை.
//

நன்றி ராம் :)

Naresh Kumar said...

பிரேம்,

பதிவு அருமை!

முக்கியமாக, அந்தக் கோட்டையும், காதலையும் வர்ணித்தது மிக அருமை!!!

எனக்கு ஒரு சந்தேகம், மனைவியை வுட்டு பிரிஞ்சு இருக்கறப்ப, அவங்களைப் பத்தி கூட பதிவு போடாம, வேற யாரையோ பத்தி போட்டுருக்கீங்களே, அப்படீன்னா.......????

Raju said...

\\டக்ளஸ் அண்ணே, காதல் ஒன்னுமே இல்லாத மேட்டரா? :)\\

நாங்க இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலிய! :(

ச.பிரேம்குமார் said...

நரேஷ் அண்ணே, உங்களுக்கு ஏனிந்த கொலவெறி????????

ச.பிரேம்குமார் said...

டக்ளஸ் அண்ணே, அந்த ‘நாங்க’ அப்படீங்கிறது யாரு? நீங்களும் உங்க காதலியுமா???

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நடை பாராட்டுகள்...

மஞ்சூர் ராசா said...

கச்சிதமாக அமைந்துள்ளது.

வாழ்த்துகள்.

Karthik said...

//இல்லையே... youtubeல் தேடி பாக்கனும் :)

ஓ, அலைபாயுதே ஞாபகம் இருக்குமே! ;)

//யாருக்கு தெரியும்? முகில தான் கேக்கனும் :)

வெயிட் பண்ணுங்க. உங்களுக்கு ஆப்ஸ் ரெடியாகிட்டிருக்கு. ;)

Anonymous said...

அட! பிரமாதம்பா கட்டுரை.. உன்னோடு நானும் பயணித்த உணர்வு!

ஜியா said...

////ஒன்னுமே இல்லாத மேட்டரக் கூட //

டக்ளஸ் அண்ணே, காதல் ஒன்னுமே இல்லாத மேட்டரா? :)//

Naanum athaiyethaan solla vanthen :))

ஜியா said...

kathai nalla irunthathu... ithe maathiri oru payanathodaiye kathai methuvaa nagarumpothe guess pannen.. kadaisila bomb irukkunnu :)) aana nallathoru comparison.. and ezuththu..

//அட! பிரமாதம்பா கட்டுரை//

oh!! appo.. ithu kathai illaiyaa?? ;))

கார்த்திகா said...

மென்மையா இருந்தது.

பின்னூட்டங்கள் படிச்ச பிறகு, கதையா கட்டுரையான்னு கொஞ்சம் குழப்பமாகிப் போச்சு. :) புனைவுன்னு சொன்னீங்க. அது இருக்கட்டும். அவங்க யாருன்னு மட்டும் சொல்லி இருக்கலாம். எத்தனை பேர் கேக்கறாங்க?! :)

Unknown said...

நல்லா இருக்குங்க.