15 September 2009

எண்ணங்கள்

உணவின் அருமை வீட்டிலிருக்கும் வரை புரிவதில்லை. வீட்டை கடந்து வாழும் நிமிடங்களில் மறுத்த உணவின் ஒவ்வொரு பிடியும் கைதட்டி சிரிக்கிறது. வீட்டு உணவிலேயே உய்வதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. வெளிச்சாப்பாட்டை நீங்கள் ஒத்துக்கொள்ளவும், அந்த சாப்பாடு உங்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்ளவும் நேரமெடுக்கலாம்.

ஒழுங்கான உணவு முறையை கடைப்பிடிக்கையில் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும், குறைந்தபட்ச உடலுழைப்பு இருந்தாலே போதுமானதாய் இருக்கிறது. ஆனால் உணவு சரியில்லாமல் போனால், தன்னை நிராகரித்த நாட்களில் சேர்த்து வைத்த வஞ்சத்தையும் எல்லாம் ஒட்டுமொத்தமாய் காட்டிவிடுறது உடல். உடற்பயிற்சியின் அவசியத்தை உணர இப்போதும் காலம் தவறிவிடவில்லை என்ற போதும் அதை பழக்கமாக்கிக் கொள்ள முடியாதபடி செய்யும் இந்த சோம்பேறித்தனத்தை எப்படி எதிர்கொள்வது?

நட்பு என்பது கட்டாயம் மனிதனுக்கு ஆசீர்வாதம் தான். மீண்டும் மீண்டும் என் வாழ்வில் காலம் அதை அழுந்த உணர்த்திக்கொண்டேயிருக்கிறது. முக்கியமாக தலை சாயும் நேரமெல்லாம் தன்னையறியாமல் தாங்கும் அவர்கள் தோள்களுக்கு ஈடாய் வேறெதுவும் இருக்கப்போவதில்லை. முக்கியமாக சுயநலத்தின் மொத்த உருவகமாக உலாவரும் மனிதர்களுடன் இருக்க நேரும் போதெல்லாம் சகமனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை எரிந்து கருகும் போது அதை பீனிக்ஸ் பறவையாய் உயிர்ப்பிப்பது நண்பர்கள் தான்.

ரொம்ப புலம்பியாச்சு. இனி ஒரு மகிழ்வான செய்தி.

செப்டம்பர் 13 தேதியிட்ட கல்கி இதழில் என் காலயந்திரம் கவிதை 'எழுதப்படாத குறிப்புகள்' என்ற தலைப்பில் வெளியாகிருக்கிறது. பெரிதும் ஊக்கமாய் இருந்த தோழி கார்த்திகாவுக்கும், என் கவிதையை சட்டென அடையாளம் கண்டுகொண்ட கார்த்திகை பாண்டியனுக்கும், இதுக்காவது பதிவு எழுதுங்க! வர வர நீங்க வலைப்பதிவு வச்சிருக்கீங்கங்குறதே மறந்து போகுது என்று மிரட்டிய செல்லத்தம்பி கார்த்திக்கும் மிக்க நன்றி (அட! எல்லாரும் கார்த்தி தானா? :))

கடும் பணிச்சூழலுலிருந்து விடுபடும் காலம் வந்துவிடும் போலிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் இயல்பு மீண்டு(ம்) வரவேண்டும்

13 க‌ருத்துக்க‌ள்:

வினோத் கெளதம் said...

Congrats Prem..:)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் மாப்பி...;))

சீக்கிரம் வாய்யா..

DHANS said...

vaanga vaanga

Karthik said...

யப்பா, என்னவெல்லாம் நடக்க வேண்டியிருக்கு, நீங்க ஒரு நாலு வரி எழுத!

குடந்தை அன்புமணி said...

கல்கியில் கவிதை... வாழ்த்துகள்.

இங்கு உணவு என்பதை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம். நல்ல இடுகை நண்பா...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் பிரேம்! என்ன? வெகுநாட்களாக ஆளையே காணோம்?

-ப்ரியமுடன்
சேரல்

KARTHIK said...

வாழ்துக்கள் தல

சேன்வெஜ்ம் பர்க்கரும் இப்போ கசக்குதா தல :-))

KARTHIK said...

// இங்கு உணவு என்பதை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம்.//

:-))

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாப்பி ;)

http://sangamwishes.blogspot.com/2009/09/18-09-09.html

இங்கிட்டு போயி பாரு ;)

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை... வாழ்த்துகள்..:-)))

பிறந்தநாள் வாழ்த்துகள் too.:-)))

Unknown said...

நாண்ட நாள் கழித்து இங்கு வருகிறேன் பிரேம். கல்கி இதழில் உங்கள் படைப்பு வந்ததில் மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள்.

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் அண்ணா..
சீக்கிரம் வந்து நிறைய பதிவு (கவிதை) போடுங்க..

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள்