10 December 2009

கவின்மிகு கலிபோர்னியா

சான் பிரான்சிஸ்கோவின் தங்கப் பாலம் (The Golden Gate) 1937ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அக்காலக்கட்டத்தில் அதுவே உலகின் மிக நீளமான தொங்குப்பாலமாக இருந்தது. அந்த இடத்தை தக்க வைத்து கொள்ளவில்லையென்ற போதும் இப்போதும் ஒரு மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் சான் பிரான்ஸிஸ்கோவின் அடையாளமாகவும் திகழ்கிறது



அதன் பிரமாண்ட தோற்றமே அதன் சிறப்பு. அத்தனை பெரிய பாலம் நிற்பது வெறும் இரண்டே தூண்களில். அதை வடிவமைத்தவரை பாராட்ட வேண்டும். மேலும் அந்த பாலத்திற்கு எதற்கு இளஞ்சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த இளஞ்சிவப்பு நிறம் மாலை வெயிலில் காண வெகு அற்புதமாய் இருக்கும்.

இரவில் அதிக விளக்கு அலங்காரங்கள் கிடையாது. ஆனால் குறைந்த விளக்குகளிலும் அந்த இளஞ்சிவப்பு நிறம் மிக அழகாய், ரம்மியமாய் இருக்கும்.




தென் கலிபோர்னியாவின் வானிலை எப்போதும் மிதமானதாய் இருக்குமென்ற போதும், சான் பிரான்ஸிஸ்கோ ஒரு சின்ன குன்று என்பதால் அங்கே குளிர்ச்சி அதிகமாகவே இருக்கும். இருபுறமும் தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பாலத்தில் குளிர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்

பாலத்தை சுற்றி நிறைய ‘Vista Point' உள்ளன. ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு விதமாய் அழகாய் தெரியும் அப்பாலம்.

பாலத்தின் எதிரே ஒரு சின்ன மலை உண்டு. அங்கிருந்து பாலத்தையும் அதன் போக்குவரத்தையும் ரசிக்கலாம். மேலிருந்து பார்க்க மேலும் அழகாய் தோன்றும் பாலம். இந்த கோணத்தை தமிழர்கள் அனேகம் பேர் பார்த்திருப்பார்கள். ஆம், ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சமீரா சூர்யாவிடம் தன் காதலை சொல்லும் போது பின்புலத்தில் இருப்பது தான் சான் பிரான்ஸிஸ்கோவின் தங்கப்பாலம்



Photo Courtesy : Girish Karunagaran

11 க‌ருத்துக்க‌ள்:

DHANS said...

hmmm welcome back

paalam ellam palama irukku??? enna sameera mathiri yaarayathu paarthuteengala??

Raju said...

ஃபோட்டோஸ் பார்க்கும் போதே, அங்க வரணும்ன்னு தோணுது பிரேம் அண்ணே.

Karthik said...

nalla irukku. title mattum 5th tamil bookla irunthu thirudina maathiri irukku. lol. :D :D

கோபிநாத் said...

ம்ம்ம்..நல்லாயிருக்கு மாப்பி..ஆனா ஒரு டவுட்டு இது கலிபோர்னியாவுக்கா இல்லை சமீராவுக்கா!?? ;)

Jackiesekar said...

தலைவா இன்னம் நிறைய மேட்டர் எதிர்பார்த்தேன்....

கார்த்திகைப் பாண்டியன் said...

உள்ளே தூங்கிக்கிட்டு இருக்குற கவிஞர கொஞ்சம் வெளிய கூப்பிட்டு வாங்க தல

Anonymous said...

I think the bridge in the mentioned scene is not "Golden Bridge" but Oakland Bay Bridge. You will find Golden Bridge in Adiye Kolluthe song.

Anonymous said...

Carefully watch the scene once again and you will see vehicles moving in the lower deck of the bridge. It is "Bay Bridge".

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா

MSK / Saravana said...

Welcome back bro..

கதிரவன் said...

உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய விசயங்களை எதிர்பார்த்தேன் பிரேம்:-)