சிண்டை பிய்த்துக்கொள்ளவைத்த
சிக்கலான புதிரின் விடை
சிக்கிவிட்ட சந்தோசம்
சுட்டெரித்தாலும்
முகத்திலரையும் சுத்தமான காற்று
வம்பலைகளை துரத்தும் காதோர
பண்பலை
மடியிலாடி காற்றிலாடி கருத்திலாடி
படபடக்கும் கவிதைத் தொகுப்பு
நாள் முடியும் வேலையிலும்
அக்கணந்தான் கூடுடைத்த பட்டாம்பூச்சிகளாய்
தெருவிலாடும் சிறார்கூட்டம்
அலுவல் சுமைகளின்
அலுப்பை காட்டாது
வாசலில் காத்திருக்கும் தாய்
புரண்டு படுத்தாலும் அருகில்வர
முரண்டு பிடிக்கும் தூக்கம்
அவசரமாய் எட்டிப்பார்க்கும்
அதீத சுகம்
ஏதோவொன்று மறக்கடித்துவிடும்
வீட்டிற்கு திரும்பும் வலிகொண்ட பிரயாணத்தை
ஒவ்வொரு நாளும்
18 May 2007
தினந்தோறும்...
எழுத்து வகை: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
6 கருத்துக்கள்:
ஆஃபிஸ் வீட்ல இருந்து ரொம்ப தூரமோ?? இந்த ட்ராஃபிக் ஜாமா மிஸ் பண்ணிட்டீங்களே.. :))
test
one more test
namathu, then, naam santhikum manitharkal etc. etc.
prathipalippa..
bas..
அதே தானுங்க......
இது என்ன ஆஃபிஸ்ல இருந்த பஸ்ல வர்ரப்ப யோசிச்சதா??
அழகா இருக்கு.
Post a Comment