உன்னை காண்கையில்
கண்களில் ஒரு
மின்னல்.
முத்தமிடுகையில்
இதழ்களில் நல்ல
அமிழ்தத்தின் சுவை.
நினைக்கையில்
புத்தியில் சிறு
பரபரப்பு.
உன் மொழி கேட்டாலே
உச்சி முதல்
உள்ளங்கால் வரை
ஒரு சிலிர்ப்பு.
எனக்கு மட்டும் சக்தியிருந்தால்
புலன்களை எல்லாம் பெருக்கிக்கொள்வேன்
காதுகள் பெரிதாகி போகட்டும்;
உனது மொழி மட்டுமே கேட்கட்டும்.
கண்கள் நான்காய் பெருகட்டும்;
எங்கெங்கும் உன் காட்சியே தெரியட்டும்.
நினைவின் ஆற்றல் இன்னும் விரியட்டும்;
நினைவுகள் யாவும் உனதாகவே இருக்கட்டும்.
தமிழே
அன்றும் இன்றும் என்றென்றும்
என்னிதயம் உன்னையே காதலிக்கும்;
நீயல்லாது போனால்
என்றன் புத்தி பேதலிக்கும்!
-பிரேம்குமார்
21 December 2006
புலன்களின் ஏக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
5 கருத்துக்கள்:
அடேங்கப்பா... காதலிக்காக இவ்வளவு பெரிய குரலா?
ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்... எல்லாம் பிப்ரவரி பித்து :))
ஜி, இதென்ன வம்பு? இங்கே காதலியாக போற்றபடுவது தமிழ் மொழி தானய்யா...
நானும் அதானே சொன்னேன்... அந்தப் பக்கத்து வீட்டுப் பொண்ணு தமிழரசிதானே....
வேண்டாஞ்சாமி வம்பு :-)
பிரேம்,
உங்க தங்கமணி எப்போ "தமிழ்"னு பேர மாத்தினாங்க? ;)
Post a Comment