14 October 2007

உரக்க சொன்னதில்லை நீ

பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்

வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்

நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்......

காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்

8 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

என்ன பிரேம் ஆளையே காணோம்...?

\\உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்\\

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு ;)

Anonymous said...

ரொம்ப அழகான நினைவுகள்...சாதாரணமாக நடக்கும் சம்பவங்களை கவிதையாக்கியது அருமை

ச.பிரேம்குமார் said...

வாங்க கோபிநாத்,

//என்ன பிரேம் ஆளையே காணோம்...?//

கொஞ்சம் வேலைப் பளு அதிகம் ஆயிடுச்சுங்க. அதான்

//இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு ;)//

ரொம்ப நன்றி கோபிநாத் :)

தயா said...

//உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்//

எனக்கும் அழகான வரிகள்

நிஜமா நல்லவன் said...

எல்லோருக்கும் பிடித்த வரிகளே எனக்கும் பிடித்ததாய்.

cheena (சீனா) said...

பிரேம்

உணர்வுகளை என்றுமே உரத்துச் சொன்னவனில்லை நான். மகிழ்வின் போதும், வருந்தும் போதும்.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

\உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்\

நல்வாழ்த்துகள்

Vetrivel said...

மிகவும் அருமை

பழைய நினைவுகளை பதம் பார்க்கிறது

வாழ்த்துக்கள்

வெற்றிவேல்.ச‌

ச.பிரேம்குமார் said...

சீனா, வெற்றிவேல்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி