15 November 2007

கணிணித்துறையினரைக் கட்டி வைத்து அடிக்கவேண்டும்

இந்த ஐ.டிக்காரர்கள் தொல்லை இருக்கே.... தாங்க முடியல. இவனுங்களால தான் வீட்டு வாடகை உயர்ந்துப் போச்சு. ஆட்டோ விலை எல்லாம் கண்ணாபின்னான்னு ஏறிப்போச்சு, கலாச்சாரம் சீரழிஞ்சுப் போச்சு...

இப்படி சொல்றது இப்போ ஒரு ட்ரண்டாவே ஆயிடுச்சு

இப்படி புகையும் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளும் ஒரு விசயம். ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க? பேசாம, எல்லோரும் அரசுக்கு ஒரு மடல் எழுதுங்க. இனி இந்தியாவில் ஐ.டி தொழிலே இருக்கக்கூடாது. சுத்தமா ஒழிச்சுக்கட்டனும்னு எழுதுங்க

யாரும் ஐ.டி மாப்பிள்ளைக்கு பொண்ணு குடுக்காதீங்க

யாரும் ஐ.டிக்காரனுக்கு வீடு குடுக்காதீங்க

அட, யாரும் உங்க வீட்டுப் பிள்ளைகளை கணிப்பொறியியல் படிக்க வைக்காதீங்கய்யா

அத விட்டுட்டு ஆட்டோக்காரன் காசு அதிகமா கேக்குறான்.... அதுக்கு ஐ.டிக்காரன் தான் காரணம் அப்படின்னு ஆரம்பிச்சு காக்கா என் மேல எச்சம் போட்டுருச்சு... அதுக்கும் ஐ.டிக்காரன் தான் காரணம்னு வெட்டிக்கதை பேசிக்கிட்டு இருக்காதீங்க

ஒரு சிலர் மட்டும் செய்யும் தவறுகளை வைத்து ஒரு பிரிவினரையே சாடுவாது எவ்வகையில் பார்த்தாலும் அறிவீனம் தான்

இது போன்று வீண் வம்பு பேசும் மக்களை புறக்கணித்து விட்டு வேலையில் மூழ்கிக்கிடக்கும் கணிணித்துறைக்காரர்களை கண்டிப்பாக கட்டி வைத்துதான் அடிக்க வேண்டும்!

12 க‌ருத்துக்க‌ள்:

ஜே கே | J K said...

அந்த பக்கம் கொடுத்துட்டு வந்து இந்த பக்கம் போஸ்ட் போட்டிடுவோம்ல...

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by the author.
Raghavan alias Saravanan M said...

பிரேம்,

நல்லதொரு சூடான பதிவு தான். பெரும்பாலானோர்க்கு இருக்கும் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்..

எனக்கும் இந்த எண்ணங்கள் உள்ளன.

ஆனால் என்ன 'ஐ.டி காரனுக்குப் பொண்ணு குடுக்காதீங்க?' ..

ஏன்யா உமக்குக் கல்யாணம் ஆயிருச்சு! அப்புறம் என்ற கதி?

(உடனே என்ற கதி ஒன்ற கதின்னு தெனாலி டயலாக் உடக்கூடாது ஆமா!:))

தமிழ்பித்தன் said...

நானும் ஏதோ உண்மையில் கும்முறியளாக்கம் என்று வந்தால் கடைசியில் இப்படி சொதப்பீட்டியளே?

வெங்கட்ராமன் said...

தல கொஞ்சம் கோபப் படாம யோசிச்சு பாருங்க.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்னு சொல்லுவாங்க.

திருவான்மியூர்ல ஒரு சிங்கில் பெட் ரூம் வீட்டு வாடகை எவ்வளது தெரியுமா.

பிரச்சனைக்கு ஐ.டி காரனுக காரணமில்ல அவங்ககிட்ட பிஸினஸ் பண்றவங்க தான் காரணம்.

ஐ.டி காரண்கிட்ட இருக்கு குடுக்குறான்
பிஸினஸ் பண்றவன் புடுங்குறான்.

cheena (சீனா) said...

இதுதான் நிந்தாஸ்துதி - வஞ்சப்புகழ்ச்சி என்பதா ?? மொக்கக்கு வாழ்த்துகள்

சீனு said...

//இது போன்று வீண் வம்பு பேசும் மக்களை புறக்கணித்து விட்டு வேலையில் மூழ்கிக்கிடக்கும் கணிணித்துறைக்காரர்களை கண்டிப்பாக கட்டி வைத்துதான் அடிக்க வேண்டும்!//

ம்ஹூம்...நம்மாளுங்க ஸ்பெஷாலிட்டியே இப்படி அமைதியா விட்டுடுறது தான். அவங்க சொல்லுறதுல உண்மை இருந்தாலும் அது கொஞ்சம் தான் உண்மை. "பொதுவாழ்க்கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தான்..." என்ன நாஞ்சொல்றது?

சீனு said...

நீங்களாச்சு சப்போட்டுக்கு இருக்கீங்களே!!! அத நெனச்சு நெனச்சு அழுகாச்சி வருது. ஆ...வ்...

ச.பிரேம்குமார் said...

//தல கொஞ்சம் கோபப் படாம யோசிச்சு பாருங்க.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்னு சொல்லுவாங்க.

திருவான்மியூர்ல ஒரு சிங்கில் பெட் ரூம் வீட்டு வாடகை எவ்வளது தெரியுமா.

பிரச்சனைக்கு ஐ.டி காரனுக காரணமில்ல அவங்ககிட்ட பிஸினஸ் பண்றவங்க தான் காரணம்.

ஐ.டி காரண்கிட்ட இருக்கு குடுக்குறான்
பிஸினஸ் பண்றவன் புடுங்குறான்.///


அதே தான் தல நானும் சொல்றேன். ஒரு டபுள் பெட்ரூம் 10000 ரூபான்னா எப்படியும் அங்க 6 முதல் 8 பேர் வரை இருப்பாங்க. அதுனால அவுங்களுக்கு அது பெரிய விசயமா தெரியாது தானே.....

இன்னொன்னு அங்க இருக்குற அனைவருமே வெளியூர்க்காரன் இல்ல வெளிமாநிலத்துக்காரன்.

அவனுக்கு வீடு கிடைக்கிறதே பெரிசு. அதுவும் ஆபீஸ் பக்கத்திலேயே தான் பாக்கனும். இதையெல்லாம் தெரிஞ்சுக்குற ஆளுங்க அவுங்க கிட்ட இருந்து காசையும் புடுங்கிகிட்டு அப்புறம் விலை ஏத்திட்டான்னு பழியும் போட்டுடுவாங்க

K.R.அதியமான் said...

விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

ச.பிரேம்குமார் said...

வாங்க அதியமான், பின்னூட்டம்ங்குற பேருல ஒரு பதிவே போட்டுட்டீங்களே :))

Karthik said...

Angry Young Man!
:)