கலைஞர் தொலைக்காட்சியில் 'மானாட மயிலாட' அப்படின்னு ஒரு நடன நிகழ்ச்சி. அட இதுவும் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்து இப்போது பல தமிழ் தொலைக்காட்சிகளில் வருவது போன்ற ஒரு நடனப்போட்டி தான். அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் கலைஞர் தொலைக்காட்சிகளின் விளம்பரப் பலகைகளிலேயே 'நமீதா வழங்கும் மானாட மயிலாட' என்று குறிப்பிடுகிறார்கள். முன்பு நடுவர் குழுவில் சிம்ரன் இருந்தபோது 'சிம்ரன் வழங்கும்' என குறிப்பிட்டு இருந்ததாய் நினைவில்லை.
'மானாட மயிலாட' என்ற தலைப்பை திரு.கருணாநிதி அவர்களே தேர்வு செய்ததாய் செய்திகள் வந்தன. அப்படி இருக்க இந்த நிகழ்ச்சியில் நமீதா இருப்பதுப் பற்றிக்கூட கருணாநிதி அவர்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புவோம்
அட, நமீதா அந்த நிகழ்ச்சியில் இருந்தால் என்ன என்கிறீர்களா? அட நமீதா நடுவரா இருந்தால் என்ன இல்லை நமீதாவின் பாட்டி இருந்தால் நமக்கு என்ன?
கொடுமை அவர் பேசும் தமிழ் தான். இரண்டு வயது பிள்ளைக்கூட இதைவிட சிறப்பாக பேசும். அட, கோர்வையாகக் கூட பேச வேண்டாம். ஒரு சில வார்த்தைகள் பேசவே தடுமாறுகிறார். கேட்கவே காது கூசுகிறது. இது ஒன்றும் நேரலை இல்லையே. பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி தானே? அப்படி இருக்க நிகழ்ச்சியின் இயக்குனருக்கோ நிர்வாகத்துக்கோ இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை. நிகழ்ச்சித் தலைப்பு மட்டும் அழகுத்தமிழில் இருந்தால் போதுமா? உள்ளே நடக்கும் தமிழ்க்கொலைகள் பற்றி கவலையில்லையா?
'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியானது 2004 ஆண்டில். தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியுமா ஒரு நடிகை தமிழ் கற்றுக்கொள்ளாமல் இருப்பார்? அவ்வளவு தூரமா அக்கறையில்லாமல் இருப்பார்கள்? அது சரி, தமிழ்நாட்டில் பிறந்த நாயகிகள் மட்டும் தமிழிலேயேவா பேசித்தொலைக்கிறார்கள்... 'கொடும கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடும் ஜிங்ஜிங்குன்னு ஆடுச்சாம்' என்ற கதை தான்
தமிழுக்கென்று கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் வருவதாய் தெரியவில்லை. அது கிடக்கட்டும், குறைந்தப்பட்சம் தமிழை கொலை செய்யாமல் இருந்தாலே போதுமென்று தோன்றுகிறது.
பி.கு : நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்துப் பார்ப்பது எல்லாம் இல்லை. நேற்று வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் புண்ணியத்தால் (கிர்ர்ர்ர்) இதைப் பார்க்க நேர்ந்தது.
19 November 2007
கலைஞர் தொலைக்காட்சியும் நமீதாவும்
எழுத்து வகை: எண்ணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துக்கள்:
தமிழ்நாட்டில் உள்ள நடிகைகள், தமிழில் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நடிகைகள் தமிழ் கொலை செய்வது, தமிழ் தெரியாதது போல ஆங்கிலத்தில் பேசுவதை விட , தமிழ் தெரியாத நமீதா தமிழ் பேச முயற்சிப்பது எவ்வளவோ
பரவாயில்லை எனப்படுகிறது . விரைவில் சுமாராக பேச கற்றுககொள்வார் என்று நம்புவோம்
ஹாஹா.. பிரேம் ரொம்ப நொந்து போய் எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன்.
நமிதா " ஏய் மச்சான், நீ சூப்பரா ஆடுது" அப்படினு ஏதோ ஆடு மாடுகளை கூப்பிடுவதுபோல் பேசினாராம். கொடுமை தான் நீங்க சொன்ன மாதிரி!!
நேற்றுத்தான் முதன் முதலாக அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். சகிக்கவில்லை நமீதா பேசியது.நமீதாவுக்கு நடக்கவே ஒழுங்காக தெரியாது என ஒரு படத்தை பார்த்து அதான் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிப்பாரே அதை பார்த்து தெரிந்துக்கொண்டேன். இதில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராம். கொடுமையடா சாமி. கலைஞர் டிவி என பெயர்வைத்துவிட்டு இவர்கள் செய்யும் கொடுமை.....தாங்கமுடியவில்லை.
// தமிழ்நாட்டில் உள்ள நடிகைகள், தமிழில் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நடிகைகள் தமிழ் கொலை செய்வது, தமிழ் தெரியாதது போல ஆங்கிலத்தில் பேசுவதை விட , தமிழ் தெரியாத நமீதா தமிழ் பேச முயற்சிப்பது எவ்வளவோ
பரவாயில்லை எனப்படுகிறது . விரைவில் சுமாராக பேச கற்றுககொள்வார் என்று நம்புவோம் //
நிச்சயமாக அவர் பரவாயில்லை . . .
ரேனுகா & மாயா,
அப்படி நடந்தால் சந்தோசமே.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராசா :)
//கலைஞர் டிவி என பெயர்வைத்துவிட்டு இவர்கள் செய்யும் கொடுமை.....தாங்கமுடியவில்லை.//
கலைஞர் டி.வி எனும்போதே தெரியவில்லையா அவர்கள் தமிழ்ப்பற்று
பிரேம் நீங்க இன்னும் அந்த நிகழ்ச்சியை எல்லாம் பார்க்கறீங்களா?????
ஜோடி நம்பர் ஒன்னையே மெகா சீரியலே பரவாயில்லைடாங்கற ரேஞ்சுக்கு ஆனதால் அதை விட்டாச்சு.
இதை எல்லாம் ஒரு நிகழ்ச்சியாகவே கருதக் கூட என்னால் முடிய வில்லை.
//ஹாஹா.. பிரேம் ரொம்ப நொந்து போய் எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன்.
நமிதா " ஏய் மச்சான், நீ சூப்பரா ஆடுது" அப்படினு ஏதோ ஆடு மாடுகளை கூப்பிடுவதுபோல் பேசினாராம். கொடுமை தான் நீங்க சொன்ன மாதிரி!!//
தமிழ், சரியா சொன்னீங்க... ரொம்ப நொந்துட்டேன் :)
மானாட மயிலாட நிகழ்சியை நமிதா பேசுர தமிழுக்காக பாக்குறீங்களா அதாவது அவங்க தமிழ் பேசலையின்னு குறை பட்டுக் கொள்கிறீர்களே? அவ்வளவு அப்பாவியா நீங்க ? :))
சங்கர், அதுக்காக ஒரு தமிழ் தொலைக்காட்சியில் அவுங்க தமிழப் போட்டுத் துன்புறுத்துறத பொறுத்துக்க சொல்றீங்களா?
அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? அட நமீதாவுக்காக பார்க்கறீங்களா? அட போங்க நீங்க.. அடச்சே!
உங்க பதிவை படிச்சி முடிச்சதும் அட அடவென வருது :-(
போன வாரம் விகடன்ல சிம்பு, நமீதா பேட்டி படிச்சீங்களா?
பேட்டியெடுத்து எழுதிய நிருபர் எவ்வளவு பாவம்னு யோசிச்சுப் பாருங்க ;-)
தமிழ் திரைப்படம் என பெயர் மட்டும் தமிழில் வைத்து வரி விலக்கு வாங்குகிறார்களே அது போலத்தான் பெயர் மட்டும் தமிழில் வைத்துள்ளார்கள்.
வர வர டிவி பார்ப்பதே குறைவு.எல்லாம் டிவியும் இப்படி "கொடுமையான" நிகழ்ச்சிகளைப் போட்டு சாகடிகின்றார்கள்.
Hi Prem, First sorry for typing in English. Its is the fate of Tamil Multimedia that one channel copies from other and in this year itself around 5 programs are copied(e.g KPY3, JN1, Lollu sabha etc) and if u see this the originals are doing well . E.g The judges in JN1 are professional dancers(Simbhu, Rasigha/Sangeetha, Master) but the channels that are copying theses things don care abt the judges. And in particular how the hell theses people selected Nameetha as a judge.. She doesn't know what a dance is.. Anyway its a reasonable work by you.. Ans sorry for ur fate of watching that program he he he
சக தமிழன் என்ற முறையில் நானும் இதை வழிமொழிகிறேன்.
//நிகழ்ச்சித் தலைப்பு மட்டும் அழகுத்தமிழில் இருந்தால் போதுமா? உள்ளே நடக்கும் தமிழ்க்கொலைகள் பற்றி கவலையில்லையா?//
நச்! சாட்டையடி!
//பி.கு : நான் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்துப் பார்ப்பது எல்லாம் இல்லை. நேற்று வீட்டுக்கு வந்த விருந்தாளிகளின் புண்ணியத்தால் (கிர்ர்ர்ர்) இதைப் பார்க்க நேர்ந்தது.//
சரி நம்புறோம்..:P கிகிகி
ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பயன்படுத்தும் ஆங்கிலம் கலந்த “தமிங்கலம்” தாங்க முடியாத தலைவலியாக உருவெடுத்து வருகிறது. அண்மையில் “விஜய்” தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு அறிவிப்பு வரும் பாருங்கள்..காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்குத் தமிழ்மொழி சிதைக்கப்படுகிறது. நமது மொழியை உருக்குலைத்து அந்த அறிவிப்பாளர் பெண்மணி இப்படித்தான் விளம்பரம் செய்வார்.
“பாக்லாம், கேக்லாம்...கேக் வெட்டிக் கொண்டாலாம்...பிறந்தநாள் வாத்துகள்! இந்த வாரம் உங்க பர்த்துடே பேபி யார்ருன்னு கண்டுபுடிங்கோ....பாக்லாம்...”
இப்படி வாழ்த்துகள் “வாத்துகளாக” மாறி நம்மை வந்து தாக்குகின்றன. இப்படிப்பட்ட தமிழ்க்கொலை அறிவிப்புகளை ஊடகங்கள் வெளியிடும்போது நமது இரத்தம் கொதிக்கின்றது. காலில் கிடப்பதைக் கழற்றி அடிக்க வேண்டும் போல் ஒரு ஆவேசம் நமக்குள் எழுகின்றது. அவர்கள் எதையாவது பேசிவிட்டுப் போகட்டுமே.. விருப்பம் இருந்தால் கேட்க வேண்டியது...இல்லாவிட்டால் அத்தொலைக்காட்சியைப் பார்க்காமல் இருக்கலாமே என்று சிலர் நினைக்கலாம். நாம் பார்க்கின்றோமா இல்லையா என்பது இங்குப் பிரச்சினை இல்லை. இந்நிகழ்ச்சியைக் காணும் எண்ணற்ற தமிழ்க்குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படும் நஞ்சாக அல்லவா இவை அமைகின்றன! எதையும் பார்த்து அதைபோலவே செய்யும் இயல்பு குழந்தைகளுக்கு ஏன் மனித இனத்திற்கே உண்டு. இப்படிப்பட்ட மொழிச் சிதைவால் எதிர்கால தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட மொழிச்சிதைவு அறிவிப்புகளை தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பொதுமக்கள் இம்மாதிரியான அறிவிப்புகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள், சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பொது இடங்களில் கண்டால் அவர்கள் முகத்தில் காரி உமிழும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைத் தமிழ்மொழி ஆர்வலர்களும், தமிழ் அமைப்புகளும் முன்னின்று நடத்திட முன் வர வேண்டும்.
-அக்னிபுத்திரன்
agniputhiran-agniputhiran.blogspot.com
Post a Comment