18 January 2008

வாடகைக்கு வீடு தேவை - மொக்கைத் தொடர்

மாப்பி கோபி இந்த மொக்கை விளையாட்டுக்கு கூப்பிட்டு இருந்தார். ஆனா நமக்கு தான் மொக்கை வராதே, என்னத்த எழுதுறதுன்னு ஒரே சோகமா இருந்தேன். அப்புறம் தான் டேய், நீ சீரியஸா எழுத நினைக்கிறதேயே மக்கள் மொக்கயாத்தாண்டா பாக்குறாங்கன்னு மனசாட்சி சொல்லுச்சு. சரி, வழக்கம் போல ஒரு (மொக்க) பதிவப் போட்டுட்டு கோபிக்கு சமர்ப்பணம் செஞ்சிடலாம்னு முடிவு பண்ணி களத்தில் குதிச்சாச்சு

*********************************************************************

வீட்டுக்கும் அலுவலகத்தும் தூரம் ரொம்ப இருக்குறதால வீடு மாத்தலாம்னு தேட ஆரம்பிச்சா, மக்கள் சரிமாரியா மொக்க போடுறாங்க. வாலிபர்களுக்கு சென்னையில் வீடு தர மாட்டார்கள் என்ற காலம் போய், இப்போதெல்லாம் வேலை செய்யும் இளைஞர்கள்/மகளிர் போன்றவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வாடகை எல்லாம் சும்மா கும்முன்னு ஏறிப்போச்சு. வேளச்சேரி பக்கம் எல்லாம் 'வீடு வாடகைக்கு விடப்படும்' எனும் பலகையே வைப்பதில்லை. தரகரிடம் சென்று நமது பட்ஜெட்டை சொன்னால், 'சார், 10 ஆயிரத்துக்கு குறைஞ்சு எல்லாம் வீடே பாக்க முடியாது'ன்னு சொல்லி கேவலமா பாக்குறாரு. அவருக்கு வர வேண்டிய கமிஷனில் குறியாய் இருக்கிறார் அவர்.

ஐ.டிக்காரர்கள் வந்து தான் விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுன்னு சொல்கிறவர்களில் எவறேனும் அவர்கள் வீட்டை குறைந்த வாடகைக்கு விடுவார்களா? ;-)

*********************************************************************

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் தங்கர் பச்சானின் பேட்டி பார்க்க நேர்ந்தது. உணர்ச்சி பொங்க தலைவர் சொல்வது என்னவெனில் 'சிரிக்க வைப்பது கூட சுலபம் தாங்க. ஒரு படத்த பார்த்து மக்கள அழ வைக்கிறது தான் கடினம்'. நகைச்சுவை படம் எடுப்பவர்களோ 'சிரிக்க வைப்பது தான் இருக்குறதிலேயே கஷ்டமான விசயம்' அப்படீங்குறாங்க....
என்னமோ போங்க, ஒன்னுமே புரியலை

அது சரி தங்கர், அழகி படத்துல (a-b)^2 = (a+b)(a-b) அப்படின்னு கணக்கு பக்குவமா சொன்னது நீங்க தானே. இந்த குளறுபடிகள வச்சிக்கிட்டு தமிழ் சினிமாவுல நான் மட்டும் தான் சரியான படம் எடுக்குறேன்னு எப்படி சொல்ல முடியுது உங்களால?!

*********************************************************************

துபாய் பதிவர்கள் எல்லாம் கிழிகிழின்னு கிழிச்ச இளையராசாவின் நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. சாதனா சர்க்கத்தின் தமிழ் உச்சரிப்பை ராஜா குறை சொன்னார்னு யாரோ எழுதியிருந்தாங்க. அது சரி, ஆனா நிகழ்ச்சியில பாடுனவுங்க பட்டியல பாத்தா யாருமே தமிழ் பேசுறவுங்க இல்லையே. சித்ரா, பாலசுப்ரமணியம், மனோ, மஞ்சரி, ஸ்ரேயா, சாதனா, விஜய் யேசுதாஸ், அப்படின்னு பாடின எல்லோருமே பிறமொழி கலைஞர்கள் தானே.... ஏன், தமிழ்நாட்டுல பாட தெரிஞ்சவுங்க யாருமே இல்லையா என்ன?

பாடின ஒரே தமிழ்க்குரல் இளையராளுக்கு தமிழ் தெரியுது, இளையராசா பொண்ணுங்குற தகுதி இருக்கு....ஆனா மேடையில் கணீர்னு பாட வரல. கொஞ்சம் தடுமாறவே செய்யுறாங்க

*********************************************************************

மக்கள் தொலைக்காட்சியில் சாதாரணமாகவே நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லாவே வந்துக்கிட்டு இருக்கு. அதிலும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பு. கஷ்டப்பட்டு தமிழ் பேசாம, இலக்கிய நடையில் பேசாமல், சரளமா உரையாடும் தொகுப்பாளர்களை பாக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இவர்கள் பேசப்பேச கூட உரையாடும் பொதுமக்களும் தமிழிலேயே உரையாட முயல்வது வரவேற்கத்தக்க ஒன்று. வாழ்க மக்கள் தொலைக்காட்சி! வளர்க அவர்கள் பணி!

ரொம்ப சிந்திக்காம மத்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை நகலெடுக்கும் தொலைக்காட்சியின் கண்களுக்கு 'மக்கள் தொலைக்காட்சி' மட்டும் கண்ணுக்கே தெரிவதில்லையா என்ன?

*********************************************************************

இன்னும் இது போல மொக்கைகள் நிறைய போட நினைத்தாலும், சில மொக்கை ஆணிகள் இருப்பதால், ஐ ம் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

ஓ மறந்தே போயிட்டேன், மொக்கை போட மூன்று பேரை அழைக்கனுமாமே..... நான் அழைக்க நினைப்பவர்கள்

1. 'காதல் முரசு' அருட்பெருங்கோ
2. 'அண்ணாச்சி' ஆசிப் மீரான்
3. 'ஜொள்ளுலக பேரரசு' ஜொள்ளுப்பாண்டி

7 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\ஆனா நமக்கு தான் மொக்கை வராதே,\\

மாப்பி இதுக்கவே இன்னொரு மொக்கை போடானும் நீ ;)))

சும்மா சொல்லக்கூடாது நல்லவே போடுற ராசா மொக்கையை ;))

ச.பிரேம்குமார் said...

//மாப்பி இதுக்கவே இன்னொரு மொக்கை போடானும் நீ ;)))//

இதையே மக்கள்ஸ் படிக்கல போல... இதுல இன்னோன்னா?? வேணாம் மாப்பி

//சும்மா சொல்லக்கூடாது நல்லவே போடுற ராசா மொக்கையை ;))//

எல்லாம் உன் ஆசீர்வாதம் மாப்பி :)

Unknown said...

இன்னும் வீடு கிடைக்கலையா?

அதுக்குதான் சின்ன வீடா பாருங்கன்னு சொன்னேன்!

பல சமூக, அரசியல், தளங்களில் இந்த பதிவு பேசுவதால் இது மொக்கை வகையில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டாது.

ஸ்ரீ said...

அதுக்குதான் சின்ன வீடா பாருங்கன்னு சொன்னேன்!

பல சமூக, அரசியல், தளங்களில் இந்த பதிவு பேசுவதால் இது மொக்கை வகையில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டாது.


ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

ச.பிரேம்குமார் said...

//பல சமூக, அரசியல், தளங்களில் இந்த பதிவு பேசுவதால் இது மொக்கை வகையில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டாது.//

தல, என்ன இப்படி சொல்லிட்டீங்க???? ஆஹா, மொக்க போடக்கூட ஒரு தனித்திறமை வேணும் போல இருக்கே :(

ச.பிரேம்குமார் said...

//ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்//

ம்கும். இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.

ச.பிரேம்குமார் said...

//ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்//

ம்கும். இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.