30 January 2008

ப்ளாக்கருக்கு ப்ரேக் பிடிக்கல

மக்கள் எல்லாம் அழகா கவிதையும் எழுதி அத அழகான படங்களிலும் இணைத்து போட்டுடுறாங்க. நமக்கோ கவிதையும் ஒழுங்கா எழுத வரல, படங்களிலும் சரியா இணைக்க தெரியலை, சரி குறைந்தப்பட்சம் கவிதை பக்கத்தில நல்ல படங்கள் போட்டாவாவது ஒரு 'ஸ்பெஷல் எபெக்டு' கிடைக்குதான்னு பாக்க, அப்படி ஒரு முயற்சி செய்ய ஆரம்பித்தேன்.

முயற்சி செய்த பதிவு : காதல் கார்த்திகை

Bloggerல் HTML TABLE வசதி இல்லாததால், நாமளே தான் நிரல் எழுத வேண்டியிருக்கிறது. TABLE போட்டு ஒரு பக்கம் கவிதையும் ஒரு பக்கம் படங்களும் போடலாம் என்று முடிவு செய்து நிரலை முடித்தாயிற்று. ஆனால் பதிவை இட்டுப் பார்த்தால் தலைப்பு புதுவையிலும் பதிவு சென்னையில் இருந்துக்கொண்டு பல் இளித்தது. என்ன என்னவோ செஞ்சு பாத்து, இருக்குற கொஞ்ச நஞ்ச மூளையையும் பிச்சு பிறாண்டினாலும் ஒன்னும் புரியல.

கடைசியில் கூகுளாண்டவர் காலில் விழுந்த போது தான் புரிந்தது, "ப்ளாகருக்கு ப்ரேக்
பிடிக்காதாம்". அதனால் தான் ப்ரேக் பிடிக்காத வண்டி போல் பதிவு தலைப்பை விட்டு வெகு தூரம் போய் நின்றிருந்தது.

முதலில் TABLE பயன்படுத்த எழுதவேண்டிய நிரல் :

<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>


ஆனால் இந்த நிரலை அப்படியே போட்டு, இன்னும் வரிகளை (ROWS) அதிகரித்துக்கொண்டே போனால் அப்புறம் பல்லிளிப்பு தான்

ஒரு சுலபமான வழி, இந்த நிரலை இட்டு நடுவில் உள்ள வெற்றிடங்களை நாமே களைந்து விடுவது

<table border="1"><tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr><tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr></tbody></table>

ஆனால் நிரலின் அளவு பெரியதாக இருந்தால் இந்த முறை பெண்டை நிமித்திவிடும். அதுக்கு இன்னொரு எளிய வழி CSS உடன் நிரலை பயன்படுத்துவது


<style type="text/css">.nobr br { display: none }</style>
<div class="nobr">
<table border="1">
<tbody><tr><td>தை</td><td>மாசி</td></tr>
<tr><td>பங்குனி</td><td>சித்திரை</td></tr>
</tbody></table>
<div>

இனி நீங்களும் பதிவுல கட்டம் கட்டி கலாசலாம் :)

4 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

பயனுள்ள பதிவு. நன்றி

ஸ்ரீ said...

சித்து ஐ லைக் யூ. நேத்து கேட்டபோதே அழகா சொல்லிட்ட :D. நானே ராத்திரி உக்காந்து நிரல் எழுதினேன். நீங்க இந்த பதிவை போடுவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா 10 நிமிஷம் யூஸ்புல்லா யாரு கூடயாவது கடலை போட்டிருப்பேன். வாட் டு டூ நாம ஒன்னு நெனக்க காட்ஸ் வேற ஒன்னு நெனைக்குறாங்களே......

கோபிநாத் said...

ஆஹா...மாப்பி கலக்குறப்பா..

பதிவுக்கு ஒரு நன்றி ;)

ச.பிரேம்குமார் said...

நன்றி ஸ்ரீ & கோபி

ஒரு வேளை யாருமில்லாத கடைக்கு டீ ஆத்திட்டேனோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ;-)

நல்ல வேளையா வந்தீங்க ராசா :)