11 August 2008

போட்டி மனப்பான்மையும் ஒரு தற்கொலையும்

IIT alumnus jumps to death from office
8 Aug 2008, 0454 hrs IST,TNN

PUNE: Unable to cope with the work pressure in the software world, an IIT alumnus committed suicide on Wednesday night by jumping from the terrace of the seven-floor building where he was working.

Sandeep Appasaheb Shelke (25) of Kakade city in Karvenagar was a software professional at Persistent Systems. According to Prakash Limaye, security officer and advisor to the company, Shelke jumped from the company terrace around 9.45 pm on Wednesday. Shelke was rushed to Sassoon Hospital, where he was declared dead around 11.00 pm.

Shelke’s suicide note, recovered by the Deccan police, mentions that no one is responsible for his act. “I am unable to do my work well and very depressed because of it. I tried my best to meet the work expectations but still unable to do it. I feel sorry for my loved ones but it’s just become unavoidable for me now,’’ the note says.

Before taking the extreme step, Shelke had SMSed his brother Yuvraj about his decision to end life. Yuvraj tried to call Shelke to stop him. His also went to the Karvenagar police chowki to inform the police.

However, Shelke had already killed himself. The family hails from Vasunde village in Ahmednagar district. The brothers (Sandepp and Yuvraj) stayed with their mother. Shelke’s brother also works with a software firm. His father is the sarpanch of Vasunde village. The family was looking for a bride for Shelke.

Shelke’s cousin Sujit Zhavare-Patil said he was quite emotional and was always engrossed in studies.

மிகவும் வருந்தத்தக்க இச்செய்தியை சமீபத்தில் பண்புடனில் நண்பர் அகமது சுபைர் இட்ட போது கவனித்தேன். சமீப காலங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவே தோன்றுகிறது. என்னவோ இது ஐ.டி. துறையினால வருவது தான் என்பது போல் சித்தரிக்கப்படுகிறது.

அண்ணன் அறிவுமதியிடம் ஒரு சமயம் கலந்துரையாடிக் கொண்டிருக்கும்போது கூட அவர் இது போன்று சம்பவத்தை குறிப்பிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையால் தான் இது நிகழ்வது போலே கூறினார்

ஆனால் உண்மை.....???

சமீப காலங்களாக தொலைக்காட்சியில் வரும் நேரலை போட்டி நிகழ்ச்சிகளை கண்டாலே பதில் கிடைத்துவிடும். இக்கால குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தோல்வி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. வட இந்தியாவில் ஒரு இளம்பெண் ஒரு தொலைக்காட்சி போட்டியில் கலந்துக்கொண்டு தோல்வி கண்டதால் அவருக்கு நேர்ந்த பாதிப்புகளை நாம் அறிவுவோம். எல்லாரும் "தான்" தான் முதலில் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். படிப்பிலோ, போட்டிகளிலோ, வேலையிலோ தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றால் துவ‌ண்டு போகிறார்க‌ள்.

"போட்டி ம‌ன‌ப்பான்மை" என்ப‌து இக்கால‌க்க‌ட்ட‌த்திற்கு தேவையான‌ ஒன்றுதான். எல்லோருமே திற‌மைசாலிக‌ளாக‌ இருப்ப‌தால் ந‌ம் இருப்பை நிலைநாட்டிக்கொள்வ‌து இன்றியமையாத‌ ஒன்றாக‌ தான் இருக்கிற‌து. ஆனால் எவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ளவு நாம் 'வெற்றி'யை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோமோ அதே அளவு தோல்வியை ஒத்துக்கொள்ள‌வும், அடுத்த‌வ‌ர் வெற்றியை ம‌கிழ்ச்சியோடு வ‌ர‌வேற்க‌வும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.

குழந்தைகளுக்கு போட்டி மனப்பான்மையை கற்றுக் கொடுக்கும் நாம் தானே தோல்வியை ஒப்புக்கொள்ளவும் கற்றுக்கொடுக்க வேண்டும். தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் வர முடியவில்லையென்றால் படிப்பதே வீண் என்பது போன்ற உணர்வுடன் பிள்ளைகளை வளர்த்துவிட்டால், பின்னால் பள்ளியை விட பன்மடங்கு பெரிதான இந்த உலகில் ஏதோ ஒரு இடத்தில் தோல்வியை தழுவிவிட்டால், வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்

"வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் வைய‌த்தில் உண்டு"

19 க‌ருத்துக்க‌ள்:

ச.பிரேம்குமார் said...
This comment has been removed by the author.
ச.பிரேம்குமார் said...

:(

MSK / Saravana said...

இங்கு தோற்பவனுக்கு எதுமே சொந்தமில்லை..

ஜெயித்தே ஆக வேண்டும்.. அதுதான் பிரச்சனை..

MSK / Saravana said...

தோற்ப்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறுதல் சொல்ல கூட ஒருவரும் அருகில் இருக்க மாட்டார்கள்..

வெற்றி பெற்றவனை சுற்றி ஒரு பெருங் கூட்டமே இருக்கும்..

ச.பிரேம்குமார் said...

சரவணா, வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நிலையான ஒன்றல்ல.

//வெற்றி பெற்றவனை சுற்றி ஒரு பெருங் கூட்டமே இருக்கும்..
//
வெற்றி பெற்றவரை சுற்றியிருக்கும் கூட்டத்திற்கு மதிப்பேதுமில்லை.
அவர்கள் திடீரென்று எப்படி முளைத்தார்களோ அது போலவே திடீரென்று காணாமலும் போய்விடுவார்கள்

கோபிநாத் said...

\\சமீப காலங்களாக தொலைக்காட்சியில் வரும் நேரலை போட்டி நிகழ்ச்சிகளை கண்டாலே பதில் கிடைத்துவிடும்.\\


100 % உண்மை மாப்பி...எந்த சேனலை பார்த்தாலும் இதே இழவு தான்..இப்ப எல்லாம் போட்டியில எப்படி எல்லாம் கலந்துக்கறாங்க என்பதையே ஒரு நிகழ்ச்சியாக நடத்துராங்க..அப்படி வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்னாமே பெரிய நட்சத்திரங்கள் மாதிரி ஆக்கிடுறாங்க. ;(

கோபிநாத் said...

ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்...அதுல ஒரு பிரபல பாடகர் சொல்றாரு ஒரு பெண்ணை பார்த்து.."பாடகி அவதற்க்கு உனக்கு இந்த தகுதி இல்லைன்னு"...அந்த வார்த்தைகளை தாங்க முடியமால் அந்த பெண்ணு அந்த இடத்துலியே அழுறாங்க....

இந்த மாதிரி போட்டியில வரும் போது தோல்விகள் எல்லாம் சகஜம் அதை எல்லாம் எப்படி தாங்கானும் கூட மனநிலையில் இல்லமால் இருக்காங்க..

இதுல இன்னொரு நிகழ்ச்சி...அதுல கிமு காலத்துல கேட்ட கேள்வி...உங்க வீட்டு பெண்கள் வேலைக்கு போவது சரியா தவறாங்க மாதிரி...லூசா டா நீங்க...இன்னும் எத்தனை வருஷம் தான் இதே கேள்வியை கேட்பிங்க...அவுங்க அவுங்க வீட்டு விஷயம் டா அது.

எல்லா சேனலையும் இந்த நோய் ஓவராக இருக்கு...

Karthik said...

//இக்கால குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தோல்வி என்ற வார்த்தையே பிடிப்பதில்லை.

Yeah, I hate that.

PPattian said...

தீர்வு கிடைக்குமோ இல்லையோ பிரச்சினைகளை யாரிடமாவது சொல்ல நம் குழந்தைகளை, இளைஞர்களை பழக்க வேண்டும்.

"Counseling" நாம்தான் தேடிப் போய் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த இளைஞர், தன் பிரச்சினையை தன் சக ஊழியரிடமோ, மேலாளரிடமோ அல்லது தன் அண்ணணிடமோ கூட ஆலோசித்தாரா எனத் தெரியவில்லை.

தோல்வி என்பது தற்காலிகம் என்பது இன்னும் வலுவாக நம் சமூகத்தினர் மீது ஏற்றப்பட வேண்டும்.

ஜியா said...

:((

ஸ்ரீ said...

//ஜி said...
:((//

யய்யா ஜி என்ன குசும்பா? எம்புட்டு குஷ்டப்பட்டு பதிவு போட்டா என்ன சின்ன புள்ள தனமா அழுவுற? சித்து புதுசா டெம்ப்ளேட் மாத்திட்ட போல தளம் அழகா இருக்குப்பா.

ச.பிரேம்குமார் said...

//தோல்வி என்பது தற்காலிகம் என்பது இன்னும் வலுவாக நம் சமூகத்தினர் மீது ஏற்றப்பட வேண்டும்//

தெளிவா சொன்னீங்க புபட்டியன். தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு அப்படின்னு ஒரு பழமொழி இருப்பதே நம்மாட்களுக்கு மறந்து போச்சு போல‌

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி

ச.பிரேம்குமார் said...

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி ஜி. உங்க கடும் பணிக்கு நடுவுலயும் (கிர்ர்ர்ர்ர்) வந்து ஒரு ஸ்மைலி போட்டதற்கு நன்றிங்கண்ணா

ச.பிரேம்குமார் said...

//Yeah, I hate that.//

அடப்பாவீ ராசா.....

ச.பிரேம்குமார் said...

// சித்து புதுசா டெம்ப்ளேட் மாத்திட்ட போல தளம் அழகா இருக்குப்பா.
//

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி ஸ்ரீ. டெம்ப்ளேட் மாத்தினது எல்லாம் ஒரு டகால்ட்டி தான் :)

ச.பிரேம்குமார் said...

//100 % உண்மை மாப்பி...எந்த சேனலை பார்த்தாலும் இதே இழவு தான்..இப்ப எல்லாம் போட்டியில எப்படி எல்லாம் கலந்துக்கறாங்க என்பதையே ஒரு நிகழ்ச்சியாக நடத்துராங்க..அப்படி வெற்றி பெற்றவர்கள் எல்லாம் என்னாமே பெரிய நட்சத்திரங்கள் மாதிரி ஆக்கிடுறாங்க. ;(
//

வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி மாப்பி. எல்லாம் காலக்கொடுமை.
ஊருக்கு வந்ததுக்கு நல்லா தொலைக்காட்சியில் மூழ்கி கிடக்குற போல‌ ;)

priyamudanprabu said...

////////
"வ‌ல்ல‌வ‌னுக்கு வ‌ல்ல‌வ‌ன் வைய‌த்தில் உண்டு"//////////////////
எதார்த்தமான் உண்மை

ச.பிரேம்குமார் said...

பிரபு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

ராமலக்ஷ்மி said...

வருந்தத் தக்க சம்பவம். அது குறித்த உங்கள் அத்தனை கருத்துகளையும் நானும் வழிமொழிகிறேன். எனது பதிவின் http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post_20.html ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டிருந்த சம்பவம்தான் என்னை அது பற்றி ரொம்ப சிந்திக்க வைத்தது.

//ஆனால் எவ்வ‌ள‌வுக்கு எவ்வ‌ளவு நாம் 'வெற்றி'யை நோக்கி ப‌ய‌ண‌ப்ப‌டுகிறோமோ அதே அளவு தோல்வியை ஒத்துக்கொள்ள‌வும், அடுத்த‌வ‌ர் வெற்றியை ம‌கிழ்ச்சியோடு வ‌ர‌வேற்க‌வும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்.//

இந்தப் புரிதல் இல்லாததால் வரும் இன்னல்கள்தான் அத்தனையும்.
உங்கள் வருகைக்கும் சுட்டியைத் தந்து இப்பதிவினைப் படிக்கும் வாய்ப்பைத் தந்தமைக்கும் நன்றி பிரேம்குமார்.