3 December 2008

அழகான நாட்கள்

அப்போது தான் நிதிலாவுக்கும் முருகனுக்கும் திருமணம் முடிந்திருந்தது. புகுந்த வீட்டிற்கு கிளம்பும் முன் மகிழ்ச்சியும் கண்ணீரும் கலந்த கண்களோடு அம்மாவை வந்து கட்டிக் கொண்டாள் நிதிலா. அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையில் ஒரு வங்கிக் கணக்கு புத்தகத்தை தந்தார் அம்மா.

'உன்னோட கல்யாண வாழ்க்கை பற்றிய குறிப்பா இருக்கட்டும் இந்த வங்கிக்கணக்கு. இப்போ உன் கல்யாணம் நடந்த இந்த மகிழ்ச்சியான நேரத்துல இதுல ஆயிரம் ரூபாய் போட்டு ஆரம்பிச்சுருக்கேன். ஒவ்வொரு மகிழ்ச்சியான தருணத்தின் போது நீ இதுல கொஞ்சம் பணம் போடு. கூடவே அந்த நிகழ்ச்சி பத்தியும் ஒரு குறிப்பு எழுதி வச்சுக்கோ' என்றார் அம்மா

நிதிலா இதை பற்றி முருகனிடம் கூறிய போது அவனுக்கும் அந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அடுத்த மகிழ்ச்சியான தருணம் எப்போது வரும் என காத்திருந்தார்கள்.

சிறிது காலத்திற்கு பிறகு அவர்கள் வங்கிக்கணக்கு புத்தகத்தில் கீழ்கண்ட குறிப்புகள் இருந்தன :

28 செப்டம்பர், 1997 - 500 ரூ - முதல் சுற்றுலா
15 அக்டோபர், 1997 - 1000 ரூ - முருகனுக்கு பதவி உயர்வு கிடைத்தது
05 நவம்பர், 1997 - நிதிலாவின் பிறந்த நாள் கொண்டாட்டம்
17 ஜனவரி, 1998 - 1000 ரூ - நிதிலா கருவுற்றாள்
18 செப்டம்பர் 1998 - 2000 ரூ - அன்புச்செல்வன் பிறந்தான்

இவ்வாறு நீண்டு கொண்டே போனது குறிப்புகள்.

சில காலத்திற்கு பிறகு வழக்கமான ஊடல்களும், சண்டைகளும் சற்று பெரிதாக துவங்கின. தொடங்கும் வேகத்திலே முடியும் சண்டைகள் நாட்கணக்கில் நீளத் துவங்கின. நிறைய நாட்கள் பேசாமல் இயந்திரத்தண்மையுடன் கழிந்தன.

இனி பயனில்லை என்று முடிவு செய்த ஒரு மாலைப் பொழுதில் தன் அம்மாவிற்கு தொலைபேசினாள் நிதிலா. 'அம்மா, இனியும் என்னால பொறுத்துக்க மூடியாதும்மா. இப்படிப்பட்ட மனுஷன் கூட வாழ்க்கை நடத்துறதே கொடுமை. விவாகரத்து செய்திடலாம் என்று முடிவு செய்துட்டேன்' என கூறினாள்.

'நீ சொல்றது சரிதான் கண்ணா. விவாகரத்துக்கு ஏற்பாடு செய்திடலாம். ஆனால் ஒரு விசயம். உன் கல்யாணத்தின் போது நான் கொடுத்து வங்கிக்கணக்கு நினைவு இருக்கா? அதுல இருக்க பணத்தை எல்லாம் எடுத்து செலவு பண்ணிடு. இந்த திருமணத்தின் நினைவா அது எதுக்கு இருக்கனும்?'

நிதிலாவுக்கு அது சரியெனவே பட்டது. அந்த கணக்கை மூடுவதற்கு வங்கிக்கு செல்லத் தயாரானாள். எதேச்சையாக அந்த புத்தகத்தை புரட்டிய போது அதில் இருந்த குறிப்புகள் கண்ணில்பட அவற்றை படிக்க துவங்கினாள். மீண்டும் மீண்டும் படித்தாள். தாங்கள் வாழ்ந்த அழகான நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. கண்ணீர் பெருக்கெடுத்தது.

முருகன் வந்தவுடன் அந்த கணக்குப் புத்தகத்தை அவனிடம் கொடுத்து அந்த கணக்கில் இருக்கும் பணத்தை எல்லாம் விவாகரத்திற்கு முன் செலவு செய்ய சொன்னாள்.

அடுத்த நாள் நிதிலாவிடம் முருகன் அந்த புத்தகத்தை நீட்டிய போது அதில் புதிதாய் ஐந்தாயிரம் ரூபாய் சேர்ந்திருந்தது. 'நாம் எத்தனை மகிழ்ச்சியாய் நம் வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம் என்று இன்று உணர்ந்துக் கொண்டேன். நீ எத்தனை மகிழ்ச்சியை என் வாழ்வில் சேர்த்திருக்கிறாய். நான் இனி எப்போதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன்' என்று ஒரு குறிப்பும், இல்லை காதல் கடிதமும் இருந்தது.

இருவரும் கட்டித் தழுவிக்கொண்டு அழத்துவங்கினார்கள்.

முருகன் ஓய்வு பெறும் வரை அந்த கணக்கில் எத்தனை ரூபாய் சேர்ந்திருந்தது தெரியுமா? அது கிடக்கட்டும்... நமக்கெதற்கு?

'ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும், எங்கே விழுகிறோம் என்று பார்க்காமல், எங்கிருந்து தவறினோம் என்று ஆராயத் தொடங்கினால் வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்'

பி.கு. : மடலில் வந்த ஒரு ஆங்கிலக்கதையின் தமிழாக்கம்

46 க‌ருத்துக்க‌ள்:

கோவி.கண்ணன் said...

கதை அருமையாக இருக்கு !

Anonymous said...

வாவ், அருமையான கதை. வாழ்க்கைத்துணையிடம் என்ன நல்ல குணங்கள் இருக்குன்னு தெரியாம நிறைய பேர் இப்படித்தான் சட்டுன்னு முடிவெடுத்தர்றாங்க

தாரணி பிரியா said...

:) நல்லா இருக்குங்கங்க.

//'ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும், எங்கே விழுகிறோம் என்று பார்க்காமல், எங்கிருந்து தவறினோம் என்று ஆராயத் தொடங்கினால் வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்'//

ஆனா நாம இன்னும் யோசிக்கமாதானே சண்டையை ஆரம்பிக்கிறோம்.

சண்டை போடறதுக்கு முன்னால இல்லாட்டி பின்னாடி கூட கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்க ஆரம்பிச்சா விவாகரத்து எல்லாம் காணாம போயிடும் :)

நவநீதன் said...

எனக்கும் அந்த மின் அஞ்சல் வந்தது....
உங்களுக்கு மொழியும் (பெயர்ப்பு) வசப்பட்டிருக்கிறது...

Karthik said...

ம்ம்ம்...கதை நல்லா இருக்கு. மைண்டில் வெச்சுக்கிறேன்.
:)

சந்தனமுல்லை said...

:-) நல்ல அருமையான கதை..அதைவிட அருமையான மொழிப்பெயர்ப்பு!!

அமுதா said...

அருமையாக உள்ளது.

ஸ்ரீமதி said...

Super anna :)

கோபிநாத் said...

அருமையான முயற்சி மாப்பி ;))

இதை போலவே ஆவியில ஒரு சிறுகதை படித்த ஞாபகம்..;)

பிரேம்குமார் said...

//கோவி.கண்ணன் said...
கதை அருமையாக இருக்கு !
//

ஆகா, கோவி.கண்ணன் ஐயாவ கூட இழுத்துட்டு வந்திருச்சே இந்தப் பதிவு :)

வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

பிரேம்குமார் said...

//சின்ன அம்மிணி said...
வாவ், அருமையான கதை.
//

வாங்க சின்ன அம்மிணி.... இந்த காலத்துல சகிப்புதண்மை கொஞ்சம் கம்மியா தான் ஆகிடுச்சு மக்கள்கிட்ட

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பிரேம்குமார் said...

//சண்டை போடறதுக்கு முன்னால இல்லாட்டி பின்னாடி கூட கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்க ஆரம்பிச்சா விவாகரத்து எல்லாம் காணாம போயிடும் :)//

சரியா சொன்னீங்க தாரணி. பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்பது எதுவுமே இல்லை. ஆனால் சிலர் பேசுவதே பிரச்சனையாய் இருக்கக்கூடும், அப்போ ஒன்னும் செய்ய முடியாது ;)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பிரேம்குமார் said...

// நவநீதன் said...
எனக்கும் அந்த மின் அஞ்சல் வந்தது....
உங்களுக்கு மொழியும் (பெயர்ப்பு) வசப்பட்டிருக்கிறது...
//

ஆகா, நவநீதன்... இது வாழ்த்து எனக்கு கொஞ்சம் அதிகம் தான் :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பிரேம்குமார் said...

//Karthik said...
ம்ம்ம்...கதை நல்லா இருக்கு. மைண்டில் வெச்சுக்கிறேன்.
:)
//

கார்த்திக், நீ தானே காதல் கதை கேட்டே...

This is specially Dedicated to you :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

கதைகளில் வருவது போல (இதுவும் கதைதானே )கடைசியில் எல்லாம் சுபம்.. :)

பிரேம்குமார் said...

//:-) நல்ல அருமையான கதை..அதைவிட அருமையான மொழிப்பெயர்ப்பு!!//

மிக்க நன்றி முல்லை. நெசமாத்தான் சொல்றீங்களா?? :)

பிரேம்குமார் said...

//அமுதா said...
அருமையாக உள்ளது.
//

மிக்க நன்றி அமுதா :)

பிரேம்குமார் said...

//ஸ்ரீமதி said...
Super anna :)
//

ரொம்ப நன்றி தங்கச்சி :)

பிரேம்குமார் said...

//அருமையான முயற்சி மாப்பி ;))

இதை போலவே ஆவியில ஒரு சிறுகதை படித்த ஞாபகம்..;)//

நன்றி மாப்பி :)

எனக்கு முன்னாடியே யாரோ மொழிபெயர்த்துட்டாங்க போல இருக்கே :)

Saravana Kumar MSK said...

டச் பண்ணிட்டீங்க..

ஸ்ரீதர்கண்ணன் said...

Good one..

பிரேம்குமார் said...

// Saravana Kumar MSK said...
டச் பண்ணிட்டீங்க..//

நன்றி சரவணா :)
என்னையும் டச் பண்ணியது (?!!!) அந்தக் கதை. அதனால் தான் மொழிபெயர்க்க முயச்சித்து இருக்கிறேன் :)

பிரேம்குமார் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
Good one..
//

மிக்க நன்றி ஸ்ரீதர் :)

தங்கராசா ஜீவராஜ் said...

அருமையான முயற்சி தொடருங்கள்....

அதிரை ஜமால் said...

\\
'ஒவ்வொரு முறை நாம் வீழும் போதும், எங்கே விழுகிறோம் என்று பார்க்காமல், எங்கிருந்து தவறினோம் என்று ஆராயத் தொடங்கினால் வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்'\\

அருமையான - ஆழமான வரிகள்.

ராம்.CM said...

பிரேம் குமார்.மன்னிக்கவும்.டிசம்பர் 6 முன்னிட்டு வரமுடியவில்லை.மேலும் விளக்கம் அடுத்ததில்...

பிரேம்குமார் said...

//தங்கராசா ஜீவராஜ் said...
அருமையான முயற்சி தொடருங்கள்....
//

மிக்க நன்றி ஜீவன் :)

பிரேம்குமார் said...

//அருமையான - ஆழமான வரிகள்.//

நன்றி ஜமால் :)
எழுதிய மூலவருக்கும் நன்றி

பிரேம்குமார் said...

//ராம்.CM said...
பிரேம் குமார்.மன்னிக்கவும்.டிசம்பர் 6 முன்னிட்டு வரமுடியவில்லை.மேலும் விளக்கம் அடுத்ததில்...
//

ஓ! நீங்க RPFல இருக்கீங்க தானே... உங்கள் சிறப்பான பணிக்கு வாழ்த்துக்கள் ராம் :)

மிக்க நன்றி வந்தமைக்கும் கருத்துக்கும் :)

ராம்.CM said...

முருகனைப்போல எத்தனையோபேர் தன் மனைவியை காலங்கடந்து தெரிந்து கொள்கிறார்கள்....... என் நிலை; வருந்துகிறேன்... பிரேம்..பணி நிமித்தமாக வாரம் ஒருமுறைதான் சந்திக்கமுடியும்.நீங்கள் கூறிய தேவதை உலகிற்கு வந்து 8 மாதம் அல்ல... என் மனைவியின் கருவறைக்கு வந்து 8 மாதம் ஆகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில்...

Saravana Kumar MSK said...

Wen will be the next post ........................................................................................................................................................................................................................??????????????????????????????????????????????????????????????????????????

ராம்.CM said...

என்ன ராம்? என் பதிவுகளை எட்டி பார்த்தீர்களா? இல்லை.. பின்னூட்டம் போட முடியாத அளவுக்கு என் பதிவு உள்ளதா?..சொன்னாதானே வேற ஏதாவது எழுதமுடியும்....

PoornimaSaran said...

கருத்துக் கதை அருமை:)

பிரேம்குமார் said...

ராம், பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டம் போட்டாச்சு :)

ரீடரில் போட்டுருந்தேன்.... ஹி ஹி ஹி ரீடரை திறக்க தான் தாமதம் ஆயிடுச்சு :)

சுபாஷினி said...

அருமையான கருத்து.

Anonymous said...

ரொம்பவே அழகான நாட்கள்தான் இவை

Anonymous said...

ரொம்பவே அழகான நாட்கள்தான்

தாமிரா said...

ஜ‌ஸ்ட் மிஸ்.! நிஜ‌மாக‌வே ச‌ர்ப்ரைஸ்.! இந்த‌க்க‌தையை இர‌ண்டு நாட்க‌ளாக‌ நான் எழுத‌ ம‌ன‌திற்குள் பிரிப்பேர் செய்துகொண்டிருந்தேன். ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கிற‌து. உங்க‌ள் ப‌திவுக்கும் ரெகுல‌ராக‌ வ‌ரும் வ‌ழ‌க்க‌மும் இல்லை. இன்று த‌ற்செய‌லாக‌ பார்க்கிறேன். ந‌ல்ல‌ க‌தை, ந‌ன்கு ப‌ண்ணியுள்ளீர்க‌ள். நான் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் யோசித்து வைத்திருந்தேன். முடிவில் இன்னும் சில‌ ந‌காசு வேலைக‌ள் செய்திருந்தால் அற்புத‌மாக‌ வ‌ந்திருக்கும். வாழ்த்துக‌ள்.!

பிரேம்குமார் said...

நன்றி பூர்ணிமா, வந்தமைக்கும் கருத்துக்கும் :)

பிரேம்குமார் said...

நன்றி சுபாஷிணி. கருத்து சொன்ன கதைக்கு நன்றி :)

பிரேம்குமார் said...

//கவின் said...
ரொம்பவே அழகான நாட்கள்தான் இவை
//

மிக்க நன்றி கவின் கருத்துக்கு :)

உங்கள் பெயர் மிக அழகாக இருக்கிறது. அழகான, stylishஆன, சுத்தமான தமிழ் பெயர் :)

பிரேம்குமார் said...

//தாமிரா said...
ஜ‌ஸ்ட் மிஸ்.! நிஜ‌மாக‌வே ச‌ர்ப்ரைஸ்.!
//

வாங்க தாமிரா வாங்க :)
நீங்கள் எழுதியிருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு அந்த மடல் மிகவும் பிடித்திருந்ததால் என்னவோ மொழிபெயர்த்து பதிவிட வேண்டும் என்று தோன்றியது. அதான் :)

A N A N T H E N said...

:)

Thamizhmaangani said...

கதை படு ஷோக்கா இருந்துச்சுப்பா!:)

பிரேம்குமார் said...

வருகைக்கும் சிரிப்புக்கும் மிக்க நன்றி ஆனந்தன் :)

பிரேம்குமார் said...

//Thamizhmaangani said...
கதை படு ஷோக்கா இருந்துச்சுப்பா!:)
//

கிகிகி... நன்றி தமிழ் :)