19 January 2009

புத்தகக் கண்காட்சி - 2009

2007ம் ஆண்டு தான் முதன் முதலில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றேன். முன்பே புதுவையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன் என்ற போதும், வாசிப்பில் கொஞ்சம் ஈடுபாடு வந்தவுடன் சென்றதால் 2007 புத்தகக் கண்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

ப்ரியன் தான் என்னை முதன் முதலில் அங்கே கூட்டிச்சென்றார். நான் விரும்பிய தலைப்புகளில் நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படித்தினார். நிறைய நூல்களை வாங்க ஆலோசனைகள் கூறினார். அடுத்தடுத்து போன ஒவ்வொரு முறையும் அவருடன் தான் சென்றிருக்கிறேன், அல்லது அவரை அங்கு சந்தித்திருக்கிறேன்.


இம்முறையும் புத்தகக் கண்காட்சி தொடங்கியதும் நண்பர்கள் எல்லோருக்கும் கண்காட்சியில் சந்திக்கலாம் என்று குறுந்தகவல் அனுப்பியாயிற்று. சிலர் வர முடியாமல் போக, நான், 'வானவில் வீதி' கார்த்திக், த.அகிலன், எழில்பாரதி மற்றும் ப்ரியன் 11ம் தேதி கண்காட்சியில் சந்திப்பதாய் முடிவு செய்தோம்.

கார்த்திக்கிற்கு இந்த அனுபவம் புதிதாக இருந்தது. கிட்டதட்ட நான் 2007ல் இருந்த மனநிலையில் தான் இருந்தான். கண்காட்சி குறித்த அவன் பதிவிலேயே அது தெரிகிறது. கூட்டி சென்றது நான் எனினும், புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு குறித்தும் அகிலன் தான் அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டிருந்தார்.

மதிய உணவு படு மோசமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் நோக்கத்திற்கு விலையை நிர்ணயித்திருந்தார்கள். அடுத்த முறை நிர்வாகிகள் இதை கொஞ்சம் கண்டு கொண்டால் நன்று

நிறைய கூட்டம் இருந்ததும், நிறைய பேர் இன்னும் வாசிக்கிறார்கள் என்று நினைக்கிற போதும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் பலரும் ஆன்மீகப் புத்தகங்கள், சமையல் கலை, பணம் சம்பாதிப்பது எப்படி போன்ற நூல்களைத்தான் வாங்கிகிறார்கள்

இம்முறை குழந்தைகளுக்கான நூல்கள் விற்கும் அரங்கள் நிறையவே தென்பட்டது நிறைவாய் இருந்தது. ஆனால் பலவும் ஆங்கிலத்திலேயே இருந்தது. தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?

நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம். புத்தகக் கண்காட்சிக்கு செல்வது எத்தனை முறை நடந்தாலும் அலுப்புத்தராத ஒரு அனுபவமாகவே இருக்கிறது. இம்முறை நிறைய நூல்களை வாங்கவில்லை. வாங்கியவையின் பட்டியல்


1. நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா


கொஞ்சம் தாமதமாகத்தான் வாங்கியிருக்கிறேன். அவர் வாழ்வில் கண்ட வலிகளையெல்லாம் படிக்கையில் நம்மையும் உணரச் செய்திருக்கிறார்


2. ஆயிஷா - இரா. நடராசன்


நமது கல்வி முறையை கோளாறுகளை அழகாய் எடுத்துரைக்கும் ஒரு குறுநாவல். விலை ரூ. ஐந்து தான். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று


3. நொண்டிக்காவடி - யுகபாரதி


நேர்நிரையின் கவிதை நூல்களின் அழகே தனி தான். கைக்கு அடக்கமான அதன் வடிவமும், அழகான அட்டையும், உறுத்தாத எழுத்துருக்களும், அந்த நூல்களை வைத்திருப்பதும் படிப்பதுமே ஒரு அலாதியான சுகம் தான்.

'நொண்டிக்காவடி' யுகபாரதியின் சமூகக் கவிதைகளின் தொகுப்பு.


4. தனிமையின் நிழல் குடை - த. அகிலன்


இணையம் மூலம் அறிமுகமான நண்பர் அகிலனின் கவிதை நூலை இப்போது தான் வாங்க நேர்ந்தது. எழுதிய கவிஞரோடு சேர்ந்து போய் அந்த நூலை வாங்கியதிலும் ஒரு தனி மகிழ்ச்சி இருந்தது.

27 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

\\நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா\\

இப்புத்தகத்தை பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள்.

இன்னும் படிக்கவில்லை, இங்கே கிடைக்கிறதா என பார்க்கனும்.

Karthik said...

ஆஹா, எழுதியாச்சா?!

//2007 புத்தகக் கண்காட்சியை என்னால் மறக்கவே முடியாது.

என்னாலும் 2009 புத்தக கண்காட்சியை மறக்க முடியாது.
:)

Karthik said...

//வாசிப்பு குறித்தும் அகிலன் தான் அவனுக்கு நிறைய சொல்லிக்கொண்டிருந்தார்

புக் படிப்பது தானே நமக்கு தெரியும். அவர்தான் 'வாசிப்பது' என்று சொன்னார். :)

Karthik said...

//ஆன்மீகப் புத்தகங்கள், சமையல் கலை, பணம் சம்பாதிப்பது எப்படி

நான் பிக்சன் தான் படிப்பாங்க போல?!
:)

Karthik said...

//தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?

நிறைய பேர் ப்ளாக்ல் எழுதுவதே புக்கில் போடும் அளவுக்கு இருக்கிறது. பப்ளிகேஷன் கிடைக்கனும் இல்லை?

Karthik said...

//நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம்.

குடும்பத்தோடு. கரெக்டா?
:)

கார்த்திக் said...

//நேற்று மீண்டுமொரு முறை கண்காட்சிக்கு சென்று வந்தோம் //

எத்தனைமுறை சென்று வந்தாலும் அலுக்காது.
அப்படியே புத்தகத்தை எல்லாம் படிசிட்டு ஒரு பதிவையும் போடுங்க தல.

// இன்னும் படிக்கவில்லை, இங்கே கிடைக்கிறதா என பார்க்கனும்.//

ஜமால் இது கிழக்குபதிப்பக வெளியீடுங்க.அவங்க ஸ்டால்ல பாருங்க கண்டிப்பா கெடைக்கும்.

thevanmayam said...

புத்தகக்கண்காட்சி
பார்க்க
கொடுத்து
வைத்தவர்
நீங்கள்!!

வணக்கம்!
கவித்தேநீர்
அருந்த வலைப்பக்கம்
வருக!!
தேவா..

கோபிநாத் said...

ம்ம்ம்....நல்லது ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேம்,
தாமதமாக சொல்கிறேன். இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். நீங்கள் புத்தக கண்காட்சி சென்று வந்தது குறித்து மகிழ்ச்சி. என்னால் போக இயலாவிட்டாலும் நண்பர்களிடம் சொல்லி நிறைய புத்தகங்கள் வாங்கி உள்ளேன். புத்தகங்களை படித்து விட்டு அவற்றை பற்றியும் எழுதுங்கள்.

பிரேம்குமார் said...

//நட்புடன் ஜமால் said...
நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யாஇன்னும் படிக்கவில்லை, இங்கே கிடைக்கிறதா என பார்க்கனும்.
//

எழுத முயல்கிறேன் ஜமால். இணையத்திலேயே வாங்கலாம் என்று நினைக்கிறேன்

பிரேம்குமார் said...

//புக் படிப்பது தானே நமக்கு தெரியும். அவர்தான் 'வாசிப்பது' என்று சொன்னார். :)//

ஹி ஹி ஹி.....
நாம தான் க்ரீன் டமிலியன்ஸ் ஆச்சே ;-)

பிரேம்குமார் said...

//நான் பிக்சன் தான் படிப்பாங்க போல?!
:)//

ROFL :-)

பிரேம்குமார் said...

//எத்தனைமுறை சென்று வந்தாலும் அலுக்காது.
அப்படியே புத்தகத்தை எல்லாம் படிசிட்டு ஒரு பதிவையும் போடுங்க தல.//

கண்டிப்பா கார்த்திக். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பிரேம்குமார் said...

//புத்தகக்கண்காட்சி
பார்க்க
கொடுத்து
வைத்தவர்
நீங்கள்!!//

அடுத்த கண்காட்சி நடக்கும் போது நீங்களும் சென்னைக்கு வருகை புரியுங்கள் தேவன் :)

பிரேம்குமார் said...

//ம்ம்ம்....நல்லது ;))//

என்னய்யா மாப்பி நல்லது????? ஒரு ரேஞ்சா தான் கமெண்ட் போடுற போ :)

பிரேம்குமார் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
என்னால் போக இயலாவிட்டாலும் நண்பர்களிடம் சொல்லி நிறைய புத்தகங்கள் வாங்கி உள்ளேன்
//

உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் பாண்டியன். நீங்களும் நிறைய நூல்கள் வாங்கியது மகிழ்ச்சி. சீக்கிரம் வாசித்த நூல்களை பற்றி எழுதுகிறேன்

Saravana Kumar MSK said...

எப்போதாவது மட்டும்தான் பதிவு எழுதுவது என்று முடிவோடு இருக்கும் பிரேம் அண்ணாவுக்கு, Hi..

Saravana Kumar MSK said...

அடடா.. மிஸ் பண்ணிட்டேனே.. ஞாயிற்று கிழமையே வந்து இருக்கலாம் போல..

Saravana Kumar MSK said...

முக்கியாமான புத்தகங்கள் மட்டும்தான் குறிப்பிட்டு இருக்கீங்களா..
நீங்க நிறைய புத்தகங்கள் வாங்கி இருப்பீங்க என்று நினைக்கிறேன்..

//தனிமையின் நிழல் குடை - த. அகிலன்//
வாங்க வேண்டுமென்று நினைத்தேன்.. அதற்குள் பர்ஸ் தீர்ந்துவிட்டது.. :(

ராம்.CM said...

ஹாய் ப்ரேம்! என் நண்பருடன் நானும் 2009 புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.(ப்ளாக்கிற்கு வந்தபிறகுதான் புத்தக கண்காட்சிக்கு செல்லும் ஆர்வமே வந்தது.) நான் செல்லும் முதல் புத்தக கண்காட்சி இதுதான். மிகவும் வித்தியாசமான அனுபவம்.ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இனி புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுவர எண்ணி முதன்முதலாக புத்தகம் ஒன்றை வாங்கினேன்.
"இமய தியாகம்"_சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு.

பிரேம்குமார் said...

// ராம்.CM said...
ஹாய் ப்ரேம்! என் நண்பருடன் நானும் 2009 புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.(
//

ஆகா! தெரிஞ்சிருந்தா சந்திச்சிருக்கலாமே

பிரேம்குமார் said...

வா சரவணா,

//முக்கியாமான புத்தகங்கள் மட்டும்தான் குறிப்பிட்டு இருக்கீங்களா..
நீங்க நிறைய புத்தகங்கள் வாங்கி இருப்பீங்க என்று நினைக்கிறேன்.. //

இல்லப்பா, இம்முறை வெகு சில நூல்களே வாங்கினேன்.

நரேஷ் said...

இந்த தடவை நம்ம லிஸ்ட்டுல புத்தக எண்ணிக்கை ரொம்பவே ஓவராயிடுச்சி...

//மதிய உணவு படு மோசமாக இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் மட்டுமே உணவை வழங்கிக்கொண்டிருந்ததால் அவர்கள் நோக்கத்திற்கு விலையை நிர்ணயித்திருந்தார்கள். அடுத்த முறை நிர்வாகிகள் இதை கொஞ்சம் கண்டு கொண்டால் நன்று//

ஆமா பிரேம், எனக்கும் அதே எண்ணம்தான், நந்து கூட நான் ரொம்ப ஃபீல் பண்ணதா சொல்லியிருப்பான்

//தமிழில் குழந்தைகளுக்கான நூல்கள் அதிகம் இல்லையா?//

நண்பருக்கு குழந்தை பிறந்திருக்கிறதென்று நாங்கள் ஒரு புத்தகம் வாங்கியுள்ளோம். குழந்தை வளர்ச்சி - Doctor NDTV குழுவால் கொணரப் பட்டது. கொஞ்சம்தான் படித்துள்ளேன், படித்த வரை நன்றக இருக்கிறது. வெவ்வேறு வயதிலுள்ள குழந்தையின் பழக்க வழக்கங்கள் எப்படி இருக்கும், மனநிலை என்ன என பல விஷயங்களை சொல்லியுள்ளனர்...

பாண்டித்துரை said...

///நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா///

இரண்டு தினங்களுக்கு முன்புதான் படித்து முடித்தேன்.

பாண்டித்துரை said...

///நட்புடன் ஜமால் said...
\\நான் வித்யா - லிவிங்ஸ்மைல் வித்யா\\

இப்புத்தகத்தை பற்றி இன்னும் விரிவாக எழுதுங்கள்.

இன்னும் படிக்கவில்லை, இங்கே கிடைக்கிறதா என பார்க்கனும்.

///

சிங்கப்பூர் நூலகத்தில் இருக்கிறது. பூன்லே கிளையில் எடுத்தேன்.

online casino neteller said...

The important and duly answer