24 November 2009

அம்மா,அப்பா, வீடு நாய்குட்டி....

அம்மா அப்பா, வீடு நாய்குட்டி..... இதையெல்லாம் விட்டுட்டு வர முடியாது”. கொஞ்சம் நாட்களுக்கு முன்பு இது தான் என் ஜிடாக்’கில் Status messageஆக இருந்தது. நண்பன் ஒருவன் ‘என்னடா இது? என்ன உன் கணக்கு’ என்று கேட்டான். ‘என்ன கொடும சார் இது? அலைபாயுதே வசனம். ஷாலினி சொல்ற இந்த வசனத்தை எப்படி மறந்த’ என்று கேட்டேன். பிறகு சிறிது நேரத்திற்கு ‘அலைபாயுதே’ வில் அப்படி என்ன தானிருக்கிறது என்பதை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இந்த படத்தை பார்த்துவிட்டு சொல், இது தான் பக்கா ரொமாண்டிட்க் படம் என்று ‘Before Sunrise' என்ற படத்தை பார்க்க சொன்னான்.

கதை என்று பெரிதாக ஒன்று இருப்பதாக கூட தோன்றவில்லை. ஒரு சம்பவம் தான். அமெரிக்க நாயகனும் ஐரோப்பா நாயகியும் தொடர்வண்டியில் சந்திக்கிறார்கள். நாயகன் நிறுத்தத்தில் இறங்கும் போது நாயகியையும் இறங்க சொல்லி கேட்கிறான். அன்றைக்கு முழுவதும் ஊர் சுற்றுகிறார்கள், கொஞ்சமாய் காதலிக்கிறார்கள்....இல்லை இல்லை ரொமான்ஸ் செய்கிறார்கள்

இந்த படத்தில் ஒரு காட்சியில் நாயகி நாயகனை தன் தோழியாக பாவித்து, எதிரதிரே அமர்ந்து கொண்டே தொலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்து, நாயகனை பற்றி தான் என்ன நினைக்கிறாள் என்பதை சொல்கிறாள்.

அதே...அதே வாலி படத்தில் அஜீத்தும் ஜோதிகாவும் ஊட்டியில் பேசுவார்களே. அதே போல் தான். ஹி ஹி ஹி

ஆனால் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அதிலிருக்கும் இயல்புதன்மை தான். அவர்கள் உடல்மொழி, வசனங்கள் எல்லாமே அத்தனை இயல்பானவை.

முழு படமும் யூட்யூப்பில் காண கிடைக்கிறது:
http://www.youtube.com/watch?v=LNk4tRlco7Y

Before Sunset

கதை நடந்து 9 வருடங்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பது தான் இந்த sequel. உண்மையிலும் Before Sunrise எடுக்கப்பட்டது 1995ல். 9 ஆண்டுகள் கழித்து 2004ல் தான் Before Sunset வெளிவந்தது.

முதல் பாகம் நிறையவே romantic என்றால் இரண்டாம் பாகம் உளவியல்ரீதியாக நிறைய பேசும்.

படத்தை பார்க்க : http://www.youtube.com/watch?v=djmkher5G_I

விக்கிபீடியாவில் இத்திரைப்படங்கள் பற்றிய நிறைய சுவையான தகவல்கள் இருக்கின்றன
http://en.wikipedia.org/wiki/Before_Sunrise
http://en.wikipedia.org/wiki/Before_Sunset

8 க‌ருத்துக்க‌ள்:

DHANS said...

thorai cinema laam paakuthu??

(just kidding) you have time for movies?? and also blogging??

Rajalakshmi Pakkirisamy said...

ok... will see

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஏரியாப்பக்கம் வந்திருக்கீங்க.. வாங்கப்பு..:-)))

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பரே,.. பகிர்வுக்கு நன்றிபா

திருநாவுக்கரசு பழனிசாமி said...

இரண்டாம் பாகம் பாக்கல, இணைப்புக்கு நன்றி...

கோபிநாத் said...

ரைட்டு ஏற்கனவே இருக்கு பார்த்துடுறேன் ;)

கதிரவன் said...

ம்ம்..தனியா இருக்கறோமேன்னு நொந்துபோயிருக்கறவங்களை வெறுப்பேத்தவே இந்தப்பதிவா ?? நல்லாவே இருமய்யா ;-)

KARTHIK said...

இந்த மாசம் வாங்கி பாத்திருவோம் :-))