11 December 2007

நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு போகிறீர்களா? - உஷார் !

சில நாட்களுக்கு முன் சென்னை நங்கநல்லூரில் உள்ள இராஜராஜேஸ்வரி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. சில காலங்களாகவே கோவில்களில் மக்களும் நிர்வாகமும் அடிக்கும் லூட்டிகளால் பெரிய கோவில்களுக்கு எதுக்கும் செல்லாமல் இருந்தேன். அப்படியிருக்க இந்த கோவிலுக்கு சென்றுவந்த பின் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என்றாலே சும்மா அதிருது!!கோவிலில் நுழையும் போதே எல்லோரும் கோவிலுக்குள் இருக்கும் கடையில் அர்ச்சனை பொருட்கள் மற்றும் குங்குமம் வாங்க வலியுறுத்துப்படுகிறார்கள். ஒரே குடும்பமாக இருந்தாலும் எல்லோரும் தனித்தனியே அர்ச்சனை செய்ய வேண்டுமாம்.ஒரே அர்ச்சனைத் தட்டுக்கு நிறைய பேர்கள் சொல்லப்போனால், 'செல்லாது, செல்லாது' என்கிறார்கள்.இந்தக் கோவிலுக்குள் கட்டாயம் போகத்தான் வேண்டுமா என்று வீட்டில கேட்க, இவ்வளவு தூரம் வந்துவிட்டு தரிசனம் செய்யாமல் போகலாமா என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நானும் சரி என்னதான் நடக்கிறது என்று பார்க்க கோவிலுக்குள் நழைந்தேன். ஆண்கள் உள்ளே செல்லும்போதே சட்டையை கழற்றிவிட்டு தான் செல்ல வேண்டுமாம் (என்ன ஒரு உவமானம். கொஞ்சம் ஏமாந்தா எல்லாத்தையும் உருவிட்டுத்தான் விடுவாங்க போல)இராஜராஜேஸ்வரியின் சன்னிதி உயரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது படிகளுக்கு மேல் ஏறிப்போனால் தான் சாமியை பார்க்க முடியும். ஆனால் குறைந்தப்பட்சம் அர்ச்சனையோ, அல்லது குங்குமப்பொட்டலமோ இருந்தால் தான் சன்னிதிப் படிகள் ஏறவே அனுமதிப்படுவீர்கள்.குங்குமப் பொட்டலமும் கோவிலில் தான் வாங்கப்பட வேண்டுமாம். ஒரு சின்ன குங்குமப்பொட்டலத்தின் விலை ரூ.10. வாங்கிக்கொண்டு சன்னிதிக்கு போகுமுன் அதை பிரிக்காமலேயே உண்டியலில் போட வேண்டுமாம்

(மறுசுழற்சி முறையை எவ்வளவு அழகாக விளக்குகிறார்கள் பாருங்கள்)இதில் 'வெளிக்குங்குமம் போட்டால் குடும்பத்திற்கு கேடு' என்று அறிவிப்புப் பலகை வேறு.என்னடா இது ? கோவிலா இல்லை வியாபாரத்தளமா என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான் இன்னொரு அறிவிப்புப் பலகையும் கண்ணில் பட்டது. 'இது தனியார் கோவில். நிர்வாகத்தின் முடிவே இறுதியானது'என்னத்த சொல்ல????

22 க‌ருத்துக்க‌ள்:

Anonymous said...

இங்கேயெல்லாம் பொது நல வழக்கு செல்லுபடியாகாதோ ?

பொதுமக்களே புறக்கணித்தால்தான் உண்டு போல.

அன்புடன்
முத்து

பிரேம்குமார் said...

தனியார் கோவில் என்பதால் செல்லுப்படியாகுமா என்பது தெரியவில்லை...

நீங்க சொல்வது போல் பொதுமக்களே புறக்கணித்தால் தான் உண்டு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து

Anonymous said...

//தனியார் கோவில் //

முதல் போட்டவா யாரோ..!? ஆண்டு நிகர வருமானம் எத்தனையோ..!?

ஸ்ரீ said...

என்னாது 'செல்லாது, செல்லாது' அப்டினு சொல்றாங்களா???
ஒரு வேளை ரிடையர்ட் நாட்டாமையா இருப்பாரோ? :D

துளசி கோபால் said...

நெசமாத்தான் சொல்றீங்களா?

ஆத்தா said...

நான் ஆத்தா வந்திருக்கேன்டா...என்னை வச்சி காமடியா பண்ணுறே...இரத்தம் கக்க வச்சு சாகடிப்பேன்டா...ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...ஊஊஊஊஊ

பிரேம்குமார் said...

துளசி டீச்சர்,

என்னங்க இது 'தமிழ் எம்.ஏ' கதாநாயகி மாதிரி கேக்குறீங்க....?!

அந்த 'நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி' மேல ஆணையா தாங்க சொல்றேன்

பிரேம்குமார் said...

ஆத்தா,

அங்க நடக்குற அட்டகாசத்த கேக்காம இங்க வந்து ஆஆஆ...ஊஊஊ ன்னா என்ன ஆத்தா அர்த்தம் ?

கொஞ்சம் அவுங்களையும் தட்டிக் கேளேன்!

வவ்வால் said...

நன்றாக சொல்லி இருக்கிங்க , கோயில் இருக்க கூடாது என்று சொல்லவில்லை அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாதுனு சொன்னவர் தான் ஆட்சிசெய்கிறார் இங்கே, ஆனாலும் இப்படித்தான் இருக்கு!

தனியார் கோவில் என்றாலும் வழக்கு போடலாம். ஆனால் பெரும்பாலோர் கடவுள் கண்ணைக்குத்திவிடும் என்று வழக்கு போடுவதில்லை.

நான் அந்த பக்கம் சென்றதில்லை.அந்த கோவிலில் உண்டியல் வைத்துள்ளார்களா, அப்படி இருந்தால் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முடியும். உண்டியல் வசூல் ஆண்டுக்கு இவ்வளவு ரூபாய்க்கு மேல் போனால் அக்கோயிலை இந்து சமய அறநிலையத்தார் எடுத்துக்கொள்வார்கள்.

ஒரு வேளை உண்டியல் வைத்து கலெக்ஷன் பார்த்தால் மாட்டிக்கொள்வோம் என்று இப்படி குங்குமம் 10 ரூபாய்னு போன்று பொருட்களை விக்குறாங்க போல.

ஏழைகள் அக்கோவிலுக்கு போகமுடியாது போல இருக்கே, ஏழைகளுக்கு அருள் பாலிக்காத கடவுள், நமக்கு மட்டும் எப்படி அருள் பாலிக்கும் என மக்கள் தான் உணரவேண்டும்.
--------------------------

துளசிகோபால்,
//நெசமாத்தான் சொல்றீங்களா?//

நிசம்னு தெரிந்த உங்க ஊரிலும் ஒரு பிராஞ்ச் கோயில் கட்டி வியாபாரத்த ஆரம்ப்பிக்கலாம்னு பார்க்கறிங்களா :-))

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இந்தக் கருமாந்திரங்கள் எல்லாம் ஏன் "அந்நியன்" அம்பிகளுக்கோ அல்லது "எவனோ ஒருவன்" ஸ்ரீதர் வாசுதேவன்களுக்கோ தெரிவது இல்லை?

கோபால் said...

ஆகா..! அற்ப்புதமான ஐடியா..! சேர் மார்கட் விழுந்தாலும் இது விழுகாது..! கூட்டு சேர யாரு வாரிங்கோ..?

சுதாகர் said...

மிகவும் அநியாயம். கடவுள் பெயரை சொல்லி, இப்படி பணம் வசூலிக்கும் கயவர்களை என்னவென்று சொல்வது? கடவுளே தண்டித்தால் தான் உண்டு.

சுதாகர்

arun said...

கண்முடித்தனமான பக்தியின் விளைவு இது

லக்கிலுக் said...

ஹலோ ப்ரேம்!

அது எங்க ஏரியா, உள்ளே வராதே!

எங்க ஏரியாவில் சூப்பர் பிகர்களை சைட் அடிக்க ராஜராஜேஸ்வரி கோயில். சுமார் பிகர்களை சைட் அடிக்க லட்சுமி நரசிம்மர் கோயில். அட்டு பிகர்களை சைட்டு அடிக்க ஆஞ்சநேயர் கோயில்.

பிரேம்குமார் said...

வவ்வால், எனக்குத் தெரிந்து அந்தக் கோவிலில் உண்டியல் இல்லை. வேறு சில தனியார் கோவில்களுக்கு சென்றதுண்டு. ஆனால் இந்த அளவுக்கு அநியாயம் வேறெங்கும் நடந்ததாய் தெரியவில்லை :(

Anonymous said...

//ஆகா..! அற்ப்புதமான ஐடியா..! சேர் மார்கட் விழுந்தாலும் இது விழுகாது..! கூட்டு சேர யாரு வாரிங்கோ..?//
me. me. tanjore temples are worse
-aathirai

வவ்வால் said...

//இந்தக் கருமாந்திரங்கள் எல்லாம் ஏன் "அந்நியன்" அம்பிகளுக்கோ அல்லது "எவனோ ஒருவன்" ஸ்ரீதர் வாசுதேவன்களுக்கோ தெரிவது இல்லை?//

கல்வெட்டு , படம் எடுக்கிறாவா எல்லாம் அவாள் அதான் அப்படி , விபத்தில் மாட்டியவருக்கு புதுசா வாங்கின காரில் ஏற்றி செல்லவில்லை எனில் மரண தண்டனை கொடுப்பார் அன்னியன், அதில் கவனித்தீர்கள் எனில் , பிராம்மணர்களுக்கு மரண தண்டனையே தர மாட்டார் அன்னியன், எல்லாம் ரயில்வே மெஸ் சொக்க லிங்கம், ஆட்டொ மொபில் சேட், அப்பாவி பிளாட் பார்ம் வாசி, போன்றவர்கள் தான் மாட்டுவார்கள்.கருட புராணத்தை எழுதுனாவாளுக்கே மரண தண்டனை குடுப்பாங்களோ? :-))

இதெல்லாம் தெரிஞ்சும் கேள்வி கேட்டா எப்படி சார்!

--------------

பிரதீப் ,

அதான் உண்டியல் வைக்காமல் கோவில் நிர்வாகம் இப்படி பொருள்களை விற்க வைத்து பணம் சம்பாதிக்கிறது. எனவே அங்கே விற்பவர்களை மட்டும் சொல்லி பயன் இல்லை.

உண்டியல் வைத்தால் அதனை இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தின் அடிப்படையில் ஆர்ஜிதம் செய்து விடும். கோயில் நிர்வாக அதிகாரியை அரசு நியமித்து விடும். தனியார் வருமானம் பார்க்க முடியாது.

Hariharan # 03985177737685368452 said...

நான் சென்ற முறை சென்றேன் எதுவும் வாங்காமல்.

பெருமாளுக்கும் சேர்த்து அர்ச்சனைத்தட்டு வாங்க அடிக்கோடிட்டு சொல்லியும் வாங்காமல் சென்றேன்.

என்னை அங்கிருந்தோர் அல்பமாக லுக் விட்டார்கள்.

வெளியில் "குங்குமம் வாங்கினால் குடும்பத்துக்குக் கேடு" அறிவிப்புப் பலகை அசல் பைத்தியக்காரத்தனம்!

டிஸ்கியாக தனியார் நிர்வாகம்னு போர்டு.


ஜோஸியர்கிட்ட காசு தந்து திருப்திபடுகிறமாதிரி இங்கே குங்குமம் அர்ச்சனை செய்தால் க்விக் ரிசல்ட் கிடைக்கும்னு தனிப்பட்டு நம்பினால் 30 ரூபாய் ஸ்மால் இண்வெஸ்ட்மெண்ட்!


போஸ்ட் சாமி தரிசன க்விக் ரிசல்ட் கிடைக்க இன்வெஸ்ட் செய்ய 30ரூபாய் இல்லாத ஏழைன்னா?

என்னை மாதிரி திட்டு/அல்ப லுக்குக்கெல்லாம் அசையாம டைரக்டா சாமியை தரிசித்து வரவேண்டியது.

மன அமைதிக்காகச் செல்லவேண்டிய கோவில் இல்லை இது.

நங்க நல்லூர்ல டாப் ஆஞ்சநேயர்தான். எல்லாருக்கும் தரிசனம் சிரமமில்லாமல் தந்தருள்வார்! 10ரூ நெய் வாங்கி விளக்கில் ஊற்றுவது உங்கள் ஆப்சன்!

வெண் பொங்கலோ / புளியோதரையோ / தயிர்சாதமோ தொன்னையில் பிரசாதத்தை ருசித்து திருப்தியோடு வரலாம்!

SurveySan said...

இந்த மாதிரி கோயில்களை கட்டாமலிருத்தலே நலம். :)

இது கோயில் இல்ல, கொள்ளை!

dondu(#11168674346665545885) said...

ஹரிஹரன் சொல்வதை முழுக்க ஆமோதிக்கிறேன்.

நான் அக்கோவிலுக்கு போனாலும் ஒன்றுமே வாங்காது வெறுமனே சேவித்துவிட்டுத்தான் வருவேன். அல்பமாக லுக் விடுபவர்களை போடா ஜாட்டான் என்று பதில் லுக் இட்டு வருவேன்.

அப்படியே குங்குமம் வாங்கினாலும் ராஜ ராஜேஸ்வரியை பிரார்த்தித்து பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து வருவேன். அதை ரீசைக்கிளுக்கு விட நான் என்ன முட்டாளா?

அதுவே ஆஞ்சநேயர் கோவிலில் இந்த அட்டூழியம் கிடையாது.

உள்ளூர் லட்சுமி நரசிம்மஸ்வாமி கோவிலும் நன்றாகவே சிரத்தையுடன் நடத்தப்படுகிறது. கோவில் ராகவன் பாராட்டுக்குரியவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பிரேம்குமார் said...

ஹரிஹரன், ராகவன்

நீங்க சொல்வது போல அங்கே சென்று பழகிவிட்டவர்கள் இது போல செய்யலாம்.

முதல் முறை போவோர் என்ன செய்வார்கள்?

நானெல்லாம் அந்த சம்பவத்துக்கு அப்புறம் அந்த கோவிலுக்கே போகக்கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன்.

ஏன் ராஜராஜேஸ்வரிய மனசுக்குள்ளேயே கும்பிட்டா ஆகாதா என்ன? ;-)

Hariharan # 03985177737685368452 said...

//நீங்க சொல்வது போல அங்கே சென்று பழகிவிட்டவர்கள் இது போல செய்யலாம்.//

பிரேம் குமார்,

நானும் இதுவரை இந்தக்கோவிலுக்கு ஒரே ஒரு முறைதான் சென்றிருக்கிறேன்.

நெடுநாள் பழக்கம் என்பது இம்மாதிரி வெளியோர் தரும் அழுத்தங்களுக்கு மசியாமல் எனக்குச் சரி என்று பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்வது என்பது.

//ஏன் ராஜராஜேஸ்வரிய மனசுக்குள்ளேயே கும்பிட்டா ஆகாதா என்ன?//

முழுக்கச் சரி!

ஆனால் இந்தக் கோவில் சரியான மனப்பயிற்சிக்கான களம்.

அடிக்கடி சென்று் வெளியில் இருந்து தரப்பட்டும் அழுத்தங்களுக்கு வளையாமல் சுயமுடிவை நிறைவேற்றுவதை பழகும் களம்! என்ற அளவில் பார்வையை வைத்துக்கொண்டால் பயன் நமக்கு!

ராஜராஜேஸ்வரி தந்தருள்வது இதுவே!