15 February 2008

நானும் காதலிக்கிறேன் - 1

'டேய் அண்ணா, இப்போ நீ எங்கக் கூட கல்யாணத்துக்கு வர போறீயா இல்லையா?' நான்கு முறை அவள் கேட்ட பின்பும் பதிலில்லாத காரணத்தால் கத்திவிட்டாள் வித்யா.

'போடி.. நான் ஒன்னும் வரல. அங்கே யாரையும் எனக்கு தெரியாது. நான் வந்து என்ன செய்ய போறேன்? உனக்கு பாதுகாப்பு படையா வரனுமா? ' ஒரு கேவலமானப் பார்வை பார்த்துவிட்டு சொன்னான் கார்த்திக்

'டேய் சும்மா இங்க உக்காந்து தொலைக்காட்சிய பாத்துக்கிட்டு இருக்குறதுக்கு அங்க வந்தினா, ஏதாவது பொண்ணு அமையிதான்னு பாப்போம். உனக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கனுமே' சிரித்துக்கொண்டே சொன்னாள் அம்மா

'ஆமாமா.... இவனுக்கெல்லாம் கல்யாணம் பண்ணிட்டாலும். பாவம்மா எனக்கு அண்ணியா வர போறவ. இவன கட்டிக்கிட்டு என்ன பாடுபட போறாளோ?' நொந்துக்கொண்ட வித்யாவை முறைத்துக்கொண்டே அம்மாவை நோக்கி கத்தினான் 'சரி சரி ரொம்பப் படுத்தாதே, கிளம்புறேன்'

'அடப்பாவி, பொண்ணுங்கன்ன உடனே கிளம்புறான்ம்மா'

ஒரு வ‌ழியாய் ம‌ண்ட‌ப‌த்தை வ‌ந்து அடைந்தார்க‌ள் மூவ‌ரும்.

'டேய் கார்த்தி, என் தோழிக‌ள் வ‌ந்தாங்க‌ன்னா ஒரு நாக‌ரீக‌த்துக்காக‌ உன்னை அறிமுக‌ப்ப‌டுத்துவேன். அதுக்காக‌ ரொம்ப‌ வ‌ழிஞ்ச‌... ம‌வ‌னே தொல‌ஞ்ச‌! "

'போடி ரொம்ப‌த்தான். உன் தோழிக‌ள் ப‌த்தியெல்லாம் தெரியும். என் அள‌வுக்கு அறிவா அழ‌கா...ம்ஹீம்! ஒருத்திக்கூட‌ தேற‌மாட்டா'

'அய்யே.. இவ‌ரு பெரிய‌ ம‌ன்ம‌த‌ன். வாய‌ மூடுடா. அண்ணான்னு கூட‌ பாக்க‌ மாட்டேன்'

அவ‌ர்க‌ள் இருக்கை தேடி அம‌ரும் முன்பே வித்யாவின் ந‌ண்ப‌ன் அருண் எங்கிருந்தோ வ‌ந்தான்.

'ஹே வித்யா, எப்ப‌டி இருக்கே? க‌ல்லூரி முடிஞ்சு பாக்க‌வே முடிய‌ல. எங்க‌ள‌ எல்லாம் ம‌றந்துட்டியா?'

'அப்ப‌டியெல்லாம் இல்ல‌ அருண். அலுவல‌க‌த்தில‌ நிறைய‌ வேலை. அதான் இப்போவெல்லாம் ந‌ம்ம‌ குழும‌த்துக்கு ம‌ட‌ல் கூட‌ அனுப்ப‌ முடிவ‌தில்லை'

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் மற்ற வகுப்புத்தோழர்களும் வந்து சேர்ந்தார்கள்.

'ஓ! செல்பேசியெல்லாம் வாங்கிட்டியா? எங்க‌ளுக்கெல்லாம் தொட‌ர்பு எண் குடுக்க‌ கூடாதா என்ன?'

'அப்ப‌டியெல்லாம் ஒன்னுமில்ல‌ப்பா' என்று சொல்லி இருவ‌ரும் தொட‌ர்பு எண்க‌ளை ப‌ரிமாறிக்கொண்டார்க‌ள்

'அப்புற‌ம் வித்யா, அப்பப்போ கூப்பிட்டு பேசாம‌ல் போனாலும், ஒரு 'மிஸ்டு கால்'ஆவ‌து கொடு. நீ உயிரோட‌ இருக்குறேன்னு தெரிஞ்சுக்க‌னும் இல்லையா?'

'நீ இன்னும் மாற‌வேயில்லை அருண்'

'அப்புற‌ம் எப்ப‌வாவ‌து பேசவும் செய். இல்லைன்னா உன‌க்கு பேச்சு வ‌ர‌லையோன்னு ஒரு ச‌ந்தேக‌ம் வ‌ந்துரும்'

மங்கள வாத்தியங்களையும், இசைக்கச்சேரியையும் தாண்டி அவர்கள் சிரிப்பொலி மண்டபமெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தது.

கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் அனைத்து தோழ‌ர்க‌ளும் தோழிக‌ளும் வ‌ந்து சேர கல்யாண மண்டபமே க‌லை க‌ட்டிய‌து. க‌ல்லூரி முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பின் அனைவ‌ரும் ச‌ந்திப்பதால் விசாரிப்புக‌ளும் அர‌ட்டைக‌ளும் ஓய‌வேயில்லை.

ச‌ற்று தாம‌தமாய் வ‌ந்து சேர்ந்தாள் தர்ஷினி. வித்யாவின் நெருங்கிய‌ தோழி. ப‌ள்ளியிலும் க‌ல்லூரியிலும் ஒன்றாக‌ ப‌டித்த‌வ‌ர்க‌ள். வித்யா வீட்டிற்கு அவ்வ‌ப்போது வ‌ருப‌வ‌ள் என்றாலும் கார்த்திக் அவ‌ளிட‌ம் அதிக‌மாய் பேசிய‌தில்லை. ஆனால் அன்று அவ‌ளின் ஆர்ப்பாட்ட‌மில்லாத‌ அழ‌கும் அள‌வான‌ சிரிப்பும், கார்த்திகை வ‌சீக‌ரிக்க‌ த‌வ‌ற‌வில்லை.

"சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன், இது எங்க அம்மா, இது என் அண்ண‌ன்" என‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்லிவிட்டு அவ‌ர்க‌ள் பேரை எல்லாம் ஒப்பித்தாள் வித்யா. ச‌ரியாக‌ தர்ஷினியின் முறை வ‌ருகையில் ஏற்கனவே வீட்டிற்கு நன்கு தெரிந்த‌வ‌ள் தானே என‌ அறிமுக‌ப்ப‌டுத்தாம‌ல் விட்டுவிட்டாள்.

கார்த்திக்கு இது எதேச்சையாக‌ ந‌ட‌ந்த‌தாக‌ தெரிய‌வில்லை. இது வித்யாவின் திட்ட‌மிட்ட‌ ச‌தி என்று நினைத்து அவ‌ளை முறைத்துக்கொண்டிருந்தான்.வித்யாவோ ந‌ண்ப‌ர்க‌ளை பார்த்த‌ ச‌ந்தோச‌த்தில் அதையெல்லாம் க‌ண்டுக்கொள்ள‌வே இல்லை.


~~~~&&&~~~~



ஒரு வழியாக‌ மேடைக்கு சென்று ம‌ண‌ம‌க்க‌ளை க‌டுமையாக‌ க‌லாட்டா செய்துவிட்டு, சாப்பாட்டு ப‌ந்தியில் அட்ட‌காச‌ம் செய்துவிட்டு, பழைய நினைவுகளை கிண்டி பார்த்துவிட்டு நண்பர்கள் குழாம் புறப்பட தயாரானது.

"தர்ஷினி, நேரம் ரொம்ப ஆச்சே. தனியா போரூர் வரைக்கும் போயிடுவியா?" அப்போது தான் நேர‌த்தை க‌வ‌னித்த வித்யா கேட்க‌

"அதெல்லாம் ப‌ர‌வாயில்லைப்பா. நான் பாத்துக்குறேன்' என்றாள் தர்ஷினி.

"ஏம்மா எவ்வ‌ள‌வு தூர‌ம்? இரு, என் பைய‌னை உன்னை வீட்டில‌ விட‌ சொல்றேன்" என‌ சொல்லிய‌ அம்மாவை ஒரு புன்ன‌கைப் பார்வை பார்த்தான் கார்த்திக்.

"ச‌ரிம்மா"

"ஏண்டி, ஒரு பேச்சுக்குக்காகவாவ‌து இல்லை, அவுங்க‌ளுக்கு எதுக்கு சிர‌ம‌ம் அப்படி இப்படின்னு ஏதாவது சாக்கு சொல்றியா? உட‌னே ச‌ரின்னு சொல்லிட்டே. என்ன‌டி எங்க‌ண்ண‌ன‌ பாக்குறியா? என‌ வித்யா கிசுகிசுக்க‌, வெட்க‌த்தில் சிவ‌ந்தாலும் "ரொம்ப‌த்தான் ஆசை" என்ற‌ப‌டி புற‌ப்ப‌ட‌ த‌யாரானாள் தர்ஷினி.

வித்யா அவ‌ள் வ‌ண்டியை எடுக்க அவளையும் அம்மாவையும் வ‌ழிய‌னுப்பிவிட்டு தர்ஷினியும் கார்த்திக்கும் போரூர் நோக்கி புற‌ப்ப‌ட்டார்க‌ள்

போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் ப‌ற்றியும் போகும் வ‌ழி ப‌ற்றியும் பேசிய‌ நிமிட‌ங்க‌ள் த‌விர‌ அனேக‌மாய் அவ‌ர்க‌ள், தங்களை முன்னின்று வ‌ழிந‌ட‌த்திக்கொண்டிருந்த‌ நில‌வோடு ம‌ட்டுமே க‌ண்க‌ளால் பேசிக்கொண்டிருந்தார்க‌ள்

பிரதான சாலையில் இருந்து திரும்பி சில குறுகலான சாலைகளில் செல்ல வேண்டியிருந்தபோது 'நெடுஞ்சாலையிலிருந்து உள்ள போகும் வ‌ழி கொஞ்ச‌ம் சிக்க‌லான‌து. ந‌ல்லா பாத்துங்க‌ ' என‌ ஒரு எச்ச‌ரிக்கை ம‌ணி அடித்தாள் தர்ஷினி. ஆனால் கார்த்திக்கோ அது ச‌ங்கேத‌ ம‌ணி போல் கேட்டது. "ரொம்ப ‌ந‌ன்றி, வீனா உங்க‌ள் இவ்வ‌ள‌வு தூர‌ம் அலைய‌ வ‌ச்சிட்டேன்" என‌ சொன்ன‌ அவ‌ளுக்கு வெறும் புன்ன‌கையை ம‌ட்டும் ப‌திலாய் த‌ந்துவிட்டு வ‌ண்டியை கிள‌ப்பினான்.

'இவ‌ன் எதுக்கு இப்போ கூப்பிடுறான்' என்று கேட்டுக்கொண்டே கார்த்திக்கின் அழைப்பை எடுத்தாள் வித்யா.

'ஹே, உன் தோழி பேரு என்ன?'

"ஏன்டா, அது தெரியாம‌யா அவ‌ள‌ அவ்வ‌ள‌வு தூர‌ம் கூட்டிக்கிட்டு போன‌?"

"ப்ச்ச்ச்"

"ச‌ரி ச‌ரி. அவ பேரு தர்ஷினி. இப்போ அதுக்கு என்ன‌?"

"அவ‌ செல்பேசி எண்ண‌ என‌க்கு அனுப்பு"

"எதுக்கு?"

"ஏன்டி, ம‌ன‌சுல‌ பெரிய‌ அவ்வையாருன்னு நினைப்பா? எதுக்கெடுத்தாலும் ஏன் எதுக்கு கேள்வி கேட்டுக்கிட்டே இருப்பா. வ‌ழி ம‌ற‌ந்து போச்சு. அதான் கேக்க‌னும், போதுமா? ம‌ரியாதையா சொன்ன‌த‌ செய்" அவ‌ள் ப‌திலுக்கு காத்திராம‌ல் தொட‌ர்பை துண்டித்தான்

எண் கிடைத்த‌தும் தர்ஷினியை அழைத்து வ‌ழி த‌வ‌றிவிட்டதை சொன்னான். அவ‌ள் வழி கூறி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக்கொண்டான்.

ம‌ன‌திற்குள் சிரித்துக்கொண்டே ஏற்க‌ன‌வே நெடுஞ்சாலையை அடைந்திருந்த‌ அவ‌ன் வ‌ண்டியை கிள‌ப்பினான்

அவன் செல்பேசியிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த ப‌ண்ப‌லையின் தொகுப்பாளினி மூச்சுவிடாது ஏதோ பேசிவிட்டு இறுதியில் ஒரு பாட‌லை ஒலிப்ப‌ர‌ப்பினாள்


" நேற்று இல்லாத‌ மாற்ற‌ம் என்ன‌து?
காற்று என்காதில் ஏதோ சொன்ன‌து"

NETRU.MP3

- தொடரும்...

12 க‌ருத்துக்க‌ள்:

Arun Prasad R said...

வாழ்த்துக்கள்!! கவிதை, கதை ஆனதற்கு

ச.பிரேம்குமார் said...

நன்றி அருண். வருகைக்கும் கருத்துக்கும் :)

கோபிநாத் said...

ஆஹா...மாப்பி கவிதை முடிஞ்சி இப்போ கதையா!!

நல்லாயிருக்கு மாப்பி..;))

கோபிநாத் said...

\\'ஓ! செல்பேசியெல்லாம் வாங்கிட்டியா? எங்க‌ளுக்கெல்லாம் தொட‌ர்பு எண் குடுக்க‌ கூடாதா என்ன?'
\\

மாப்பி வாழ்த்துக்கள் படம் பார்த்தியோ!!!! ;))

ச.பிரேம்குமார் said...

//ஆஹா...மாப்பி கவிதை முடிஞ்சி இப்போ கதையா!!
//

சும்மா ஒரு முயற்சிதான் ;-)

//
நல்லாயிருக்கு மாப்பி..;))
//
நன்றிங்க மாப்பி

ச.பிரேம்குமார் said...

//மாப்பி வாழ்த்துக்கள் படம் பார்த்தியோ!!!! ;))
//

அதெல்லாம் இல்லை. ஆங்கிலக் கலப்பு இல்லாம எழுதிப்பாக்க ஆசப்பட்டேன். ஓரளவுக்கு சமாளிச்சாச்சு. ஆனா அதுலயும் ஒன்னு சிக்கல கொடுத்திருச்சு ... "MISSED CALL" ;-)

Anonymous said...

Yaen intha marttam....

Yaen kavithai eluthi eluthi vattivittatha karppanai..

aduthakatta muyarchiyaga kathai

summa solla koodathu..
nantagathaan varukirathu..

ச.பிரேம்குமார் said...

//Yaen intha marttam....

Yaen kavithai eluthi eluthi vattivittatha karppanai..//

சும்மா ஒரு முயற்சி தான்

//aduthakatta muyarchiyaga kathai

summa solla koodathu..
nantagathaan varukirathu..//

நல்ல வேளை கேவலமா இருக்குன்னு சொல்வீங்களோன்னு நினைச்சேன்.

நன்றி வந்தமைக்கும் கருத்து சொன்னமைக்கும் :)

ஸ்ரீ said...

என்ன சித்து தொடர்பு எண், தொலைக்காட்சி, அலுவலகம், குழுமம், மடல், வகுப்புத்தோழி, பிரதான சாலை, நெடுஞ்சாலை, இப்படி ஒரே தமிழ் கொஞ்சு வெளாடுது? ஏதேனும் கட்சியுடம் இணையும் எண்ணம் உள்ளதா? எப்படி எங்க தமிழு? ஓகே நோ ஜோக்ஸ். நல்லா இருக்குப்பா கதை. அடுத்த பகுதி காதல்ல யூ டர்ன் போட்டு வெளியில வரணும். அண்ணனோட பேரை காப்பாத்துவ இல்லை? :)

Unknown said...

Hi!! friend ---
Superb -- Arumai..

வாழ்த்துக்கள்!! கவிதை, கதை ஆனதற்கு

Thodarchi Apoo!!!!

Sundaresan said...

அருமை... வாழ்த்துக்கள்.. மேலும் கவிதையுடன் கதைகளையும் எதிர்பார்க்கிறேன்.. நல்ல முயற்சி..

Karthik said...

//நானும் காதலிக்கிறேன் - கார்த்திக்

ஆஹா...ஆஹா