28 March 2008

நானும் காத‌லிக்கிறேன் ‍- 3

நானும் காத‌லிக்கிறேன் ‍- 1

நானும் காத‌லிக்கிறேன் ‍- 2

ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு...

'சாப்பிடப் போலாமா?' கார்த்திக்கின் கணிணியில் ரமணியின் மின் செய்தி கண்ணடித்துக்கொண்டிருந்தது

நீண்ட வரிசையில் காத்திருந்து சாப்பாட்டை வாங்கி, உட்கார இடம் தேடி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததுமே புலம்பத் தொடங்கினான் ரமணி. 'எவ்வளவு சம்பாதிச்சு என்ன புண்ணியம்? ஒழுங்கா சாப்பிட முடிய மாட்டேங்குது. அலுவலகத்துல கிடைக்கிற சாப்பாடு வர வர வாய்லேயே வைக்க முடியல. சீக்கிரம் அம்மா அப்பாவ இங்கேயே வர சொல்லிடனும்'

'அட ஏன்டா இவ்வளவு புலம்புறே? பேசாம கல்யாணம் பண்ணிக்கோயேன்' என்றான் கார்த்திக்

'நீ வேற ஏன்டா? இப்போ யார் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறா? சரி, உன் கதை என்னாச்சு? எப்படி போகுது உன் காதல் ?'

கா : 'அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்'

ர: 'டேய் என்ன இது நிச்சயதார்த்தம்னு இவ்வளவு பொறுமையா சொல்லுற? வீட்டில எப்போ சொன்னே? எப்போ பேசி முடிச்சாங்க?'

கா : 'நிச்சயதார்த்தம்னு சொன்னேன். என‌க்குன்னா சொன்னான்? அவ‌ளுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம். வேற ஒருத்தர் கூட.'

ர: 'இது அதவிட கொடுமயா இருக்கு. என்னடா நடக்குது இங்கே?'

'அவ என்கிட்ட காதல் சொல்லல. அவ காதலிக்கிறாளா இல்லையான்னே தெரியல. சொல்லப்போனால், நானே அவள காதலிக்கிறேனான்னு இன்னும் சரியா தெரியலடா' என்று சொல்லிக்கொண்டே புன்னகைத்தான் கார்த்திக்

ர :'உன‌க்கு கொஞ்ச‌ம் கூட‌ வருத்த‌மே இல்லையா கார்த்தி. எப்ப‌டி உன்னால‌ இத‌ சாதார‌ண‌மா எடுத்துக்க‌ முடிஞ்ச‌து?'

கா : 'இதுல‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ என்ன‌ இருக்கு? ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கிட்டாலே அது காத‌லா தான் இருக்க‌னுமா? இதுவே அவ‌ள‌ நான் ம‌ன‌ப்பூர்வ‌மா தோழியா நினைச்சிருந்தா, இந்நேர‌ம் அவ‌ளுக்கு நிச்ச‌ய‌தார்த்த‌ம் ந‌ட‌க்க‌ப்போற‌த‌ நினைச்சு ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌ட்டுருக்க‌னும். இந்த‌ விச‌ய‌த்துல‌, ஒரு வேளை இது காத‌ல் தான்னு நினைச்சு அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு இருந்தா, பின்னால‌ வ‌ருத்த‌ப்ப‌ட‌ கூட‌ வேண்டியிருந்திருக்கும்.

காத‌ல்னா என்ன‌ என்ற‌ ச‌ரியான‌ புரித‌ல் இல்லாம‌, எல்லோரும் காத‌லிக்கிறாங்க‌, அதுபோலவே 'நானும் காத‌லிக்கிறேன்'ன்னு நானே ஒரு த‌ப்புக் க‌ண‌க்கு போட்டுக்கிட்டேன். அவ்ளோதான்டா

ர‌ : என்ன‌வோ போப்பா, உன‌க்கு காத‌ல் கை கூட‌ல‌யேன்னு நினைக்கிற‌த‌ விட‌, என்ன‌ ந‌ட‌ந்த‌து, ஏன் ந‌ட‌ந்த‌துன்னு புரிஞ்சுக்குற‌ ம‌ன‌ப்ப‌க்குவ‌ன் உன‌க்கு இருக்கே. அதுக்கு நான் ரொம்ப‌ ச‌ந்தோச‌ப்ப‌டுறேன். உன‌க்கான‌ காத‌ல் எதுன்னு நீ தேட தேவையில்லை. ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ரும் போது காத‌லே உன‌க்கு அதை உண‌ர்த்திவிடும்.

அவ‌ன் சொன்ன‌தை புன்ன‌கைத்துக்கொண்டே ஆமோதித்தான் கார்த்திக்.

நண்பர்களின் முற்றுப்பெறாத பேச்சினூடே வ‌ழ‌க்க‌மான‌ உற்சாக‌த்துட‌ன் மீண்டும் ந‌க‌ர‌த்தொட‌ங்கிய‌து கால‌ம்

முற்றும்Technorati Tags ,

10 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\என்னடா நடக்குது இங்கே?'\\

பதிவை படிச்சவுடன் இப்படி தான் கேட்க வேண்டும் போல இருந்துச்சி.!

வேற ஒன்னும் சொல்ல முடியாத நிலைமையில் இருக்கேன்.

கோபிநாத் said...

அப்புறம் ஒன்னு...நீ ரொம்ப நல்லவன் மாப்பி....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எழில்பாரதி said...

அண்ணா சில்லுன்னு ஒரு காதல் சூர்யா மாதிரி ஹீரோ இருப்பார்ன்னு பார்த்தா இப்படி பூவே உனக்காக விஜய் மாதிரி வசனம் பேசுராரே!!!

எழில்பாரதி said...

அண்ணா போன பதிவுல உருகி உருகி எழுதி உருக வைச்சிட்டு இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை...

எப்படியோ அடுத்த கதையில் சேர்த்து வைங்க....

இந்த முடிவை படிச்சு துக்கம் தொண்டையை அடைச்சிகிச்சி

நீங்க ரொம்ப நல்லவரு.............

Arun Prasad R said...

முடிவு சுகமானதாக இல்லை என்றாலும் நிதர்சனமானது.

பிரேம்குமார் said...

முடிவ படிச்சுட்டு சில பேர் என் மேல கொலவெறில இருக்குறதா கேள்வி. ஆனா என்ன செய்யுறது, முடிவ மாத்த முடியலையே

ஜி said...

Annaachi... Innaikku muzukkaa unga valaiyilathaan menjittu irukken...

Ippathaan intha kathaiya padichen... rendu part arumai... moonaavathu konjam sinnathaa pochu... kathai mudivu paththi entha commentsum illa..

innum aazamaana dialogueslaam irunthirunthaa innum nalla irunthirukkum

பிரேம்குமார் said...

வாங்க ஜியா வாங்க!

என்னது இரண்டு பாகம் அருமையா? ஆகா, ஒரு மாபெரும் கதாசிரியர் (கொஞ்சம் அதிகமா போயிடுச்சோ?) கிட்ட இருந்து இத கேக்குறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?

மூன்றாவது பாகம் கொஞ்சம் அவசரமாகவும் எப்படி முடிப்பது என்ற பதட்டத்திலும் எழுதியது தான் :)

உங்கள் கருத்துக்குகளுக்கு நன்றிங்கண்ணா

Karthik said...

ட்டச் பண்ணிட்டீங்க!
:(

Karthik said...

ரொம்ப எதார்த்தமாக இருந்தது.
:)