25 June 2008

என்ன தான்பா உங்க பிரச்சனை?

எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் மின் தொடர்வண்டிக்கான பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் நின்றுக்கொண்டிருந்தேன். வரிசையில் எனக்கு கொஞ்சம் முன்னே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். எங்கிருந்தோ வந்த ஒரு இளைஞன் அவர் அருகே வந்து நின்றான். இந்த பெண் மெதுவாக அவரிடம் 'வரிசையில் போய் நில்லுங்க' என்றார். நீங்க இங்க ஏன் நிக்கிறீங்க, பெண்கள் வரிசையில் போய் நில்லுங்க என்றார் அவர். 'பெண்கள் வரிசையெல்லாம் எதுவும் இல்லை. நீங்க போய் முதல்ல வரிசையில் நில்லுங்க' என்று அந்த பெண் கூற அந்த தன்மானச்சிங்கம் கூறியது 'நான் பயணச்சீட்டு வாங்கமலே போயிக்கிறேன்'

என்ன தான்பா உங்க பிரச்சனை?

***

கோயம்பேடு பேருந்து நிலையித்திலிருந்து D70 வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளே உள்ள நிறுத்தத்தில் ஏறினால் அது எந்த வழியாக செல்கிறது என்று கேட்டுவிட்டு ஏறலாம். வெளியே வரும்போது ஏறி முற்பட்டால் அது எங்கே செல்கிறது என்று யூகிக்க முடியாது. பேருந்தில் உள்ள யாரையேனும் கேட்டால் தான் தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் ரொம்ப அவசரமாக ஒரு நபர் வளாகத்தின் வெளியே பேருந்துக்குள் அவசரமாக ஏறினார். எங்கே செல்லவேண்டும் என்று நடத்துனர் கேட்ட கேள்விக்கு அவர் இருக்கையை கண்டுப்பிடித்து அமர்ந்துவிட்டு அப்புறம் மெதுவாக பதில் சொன்னார். "அம்பத்தூருக்கு ஒரு சீட்டு". பேருந்தோ வேளச்சேரிக்கு போய் கொண்டிருந்தது. விசயத்தை அவரிடம் விளக்கியதும் கோபமாக அவர் சொன்னார், 'அப்புறம் எதுக்கு போர்டுல அம்பத்தூர்'னு எழுதி வச்சிருக்கீங்க, முதல்ல அதை கழட்டி எறியுங்க'

என்ன தான்பா உங்க பிரச்சனை?

***

நேற்று விஜய் தொலைக்காட்சியில் 'காதலிக்க நேரமில்லை' தொடரின் ஒரு பகுதியை பார்க்க நேர்ந்தது. நாயகி ஒரு மென்பொருள் நிறுவன‌த்தில் சேருவதாக காட்டினார்கள். பார்த்த‌ கொஞ்ச‌ நேர‌த்திலேயே அந்த‌ நிறுவ‌ன‌த்தில் இருக்கும் ஆண் பெண்களின் தோள் மேல் கை போட்டு பேசுவ‌தாக‌வும், பெண் கேவ‌லமாக‌ ஒரு ந‌டையில் கொஞ்சி கொஞ்சி த‌மிழ் பேசுவ‌தாக‌வும் காட்டினார்க‌ள்.
மேலும் அமெரிக்க‌ மோக‌ம் பிடித்த‌ ஒரு ஆள், ட்ரீட் போக‌லாம் என்று முடிவெடுக்கும் ஒரு கும்ப‌ல் என்று நீண்டு கொண்டே போன‌து காட்சிய‌மைப்புக‌ள். முத‌ல் இர‌ண்டு பாக‌ங்க‌ளை வைத்து கொண்டு முடிவு எடுப்ப‌து ச‌ரிய‌ல்லை தான், இருப்பினும் ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌ சூழ‌லை காட்ட‌ வேண்டும் என்றால் அவ‌ர்க‌ளுக்கு இந்த‌ காட்சிக‌ளை எடுக்க‌ ஏன் தோன்றிய‌து?

என்ன தான்பா உங்க பிரச்சனை?

22 க‌ருத்துக்க‌ள்:

Dhans said...

காதலிக்க நேரமில்லை தொடரை நானும் பார்த்தேன், அய்யா சாமி நான் மென்பொருள் துறையில் இல்லை இருந்தாலும் இவர்கள் காட்டுவது கொஞ்சம் என்ன ரொம்பவே ஓவராக தெரிகிறது

இவர்கள் பிரச்சனை தொடரை எப்படி ஜவ்வு மாதிரி இழுக்கறது என்பதுதான்

துளசி கோபால் said...

பஸ் பயணியின் பிரச்சனைதான் உண்மையான பிரச்சனை.

ஏன் போர்டை மாத்தலை?

கேட்டது நியாயம்தானே?

ஆமாம். என்னதான்ப்பா உங்க பிரச்சனை? :-)))

பிரேம்குமார் said...

துளசி,

D70 என்பது அம்பத்தூருக்கும் வேளச்சேரிக்கும் இடையே செல்லும் பேருந்து. இரண்டு பக்கமும் போகும் தானே? எப்படி பலகையை மாற்றுவது?

ஆனால் நீங்கள் சொல்வதிலும் ஒரு விசயம் இருக்கு. செல்லும் இடத்தை மட்டும் குறிப்பிட்டால் நிறைய குழப்பங்கள் தீரலாம். ஆனால் நிறைய பேர் அதையும் படிக்காமல் வெறும் தடம் எண்'ணை மட்டும் பார்த்து ஏறுகிறார்கள். தடத்தின் எண்ணை ஒவ்வொரு வழிக்கும் மாற்ற முடியுமா என்பது சந்தேகம் தான்

பிரேம்குமார் said...

வ‌ருகைக்கு ந‌ன்றி த‌னா. நெடுந்தொட‌ர்க‌ளில் எல்லாம் லாஜிக் எதிர்ப்பார்ப‌து ந‌ம்ம‌ த‌ப்பு தான் போல‌ த‌னா :)

துளசி கோபால் said...

அங்கத்து பஸ் விவரமெல்லாம் தெரியாதுங்க. அம்பத்தூர் & வேளச்சேரிக்கு கோயம்பேடு வழியாப் போகுதா?

இங்கே பஸ்களில் எண் அதே இருந்தாலும் போகும் இடம் மட்டுமே போர்டில் இருக்கும். கண்டக்டர்ன்னு யாரும் இல்லை. ஓட்டுனர்தான் டிக்கெட்டும் கொடுப்பார். பெயர்ப்பலகைக்கு அருகில் உள்ள பட்டனை அமுத்தினால் போற இடத்தோட பெயர் தெரியும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ட்ரிப்புக்கும் அவர் அதை அமர்த்திச் சரி செஞ்சுருவார்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

இவங்க எல்லாருக்க்கும் என்ன ப்ரச்சனைன்னா அவரவருக்கு அவர் செய்வது தான் சரி ..அது தான் ப்ரச்சனை..
வரிசையில் நிக்காம ஏன் அங்க போய் நின்னீங்கன்னு கேட்டதுக்கு. நான் சும்மா நிக்கறேன் உனக்கு முன்னால் நான் போறேன்னு நீயா தப்பா நினைச்சா என்ன அர்த்தம்ன்னு கேக்கற ஆளுங்கள்ளா ம் இருக்காங்க..

பிரேம்குமார் said...

//இவங்க எல்லாருக்க்கும் என்ன ப்ரச்சனைன்னா அவரவருக்கு அவர் செய்வது தான் சரி ..அது தான் ப்ரச்சனை..//

ச‌ரியா சொன்னீங்க‌ அக்கா...

//நான் சும்மா நிக்கறேன் உனக்கு முன்னால் நான் போறேன்னு நீயா தப்பா நினைச்சா என்ன அர்த்தம்ன்னு கேக்கற ஆளுங்கள்ளா ம் இருக்காங்க..//

நானும் இந்த‌ மாதிரி சொல்ல‌ கேட்டிருக்கிறேன்.

வந்தமைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

பிரேம்குமார் said...

//பெயர்ப்பலகைக்கு அருகில் உள்ள பட்டனை அமுத்தினால் போற இடத்தோட பெயர் தெரியும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. //

துளசி, சீக்கிரமே இங்கேயும் அம்மாதிரி வசதிகள் வரும் என நம்புவோம்


//அம்பத்தூர் & வேளச்சேரிக்கு கோயம்பேடு வழியாப் போகுதா//
சத்தியமா அப்படித்தாங்க...

வால்பையன் said...

இன்னும் இது மாதிரி நிறைய பிரச்சினைகள் ஊருக்குள்ள சுத்துது நண்பா

வால்பையன்

ஆகாய நதி said...

நான் கூட அப்டிதான் 5 மாதங்ளுக்கு முன்ன ஒரு நாள் அரை மயக்கத்துல வேளச்சேரி மார்க்கத்துல ஏறிட்டேன் அப்புறம் அடுத்த நிறுத்தத்துல இறங்கி திரும்பி வந்தேன்.

பிரேம்குமார் said...

வாங்க தல (அதாவது தலையான வாலு),

என்ன செய்யுறது நாமெல்லாம் பிரச்சனைகளோடு வாழ கற்றுக் கொண்டுவிட்டோம். இல்லேன்னா பொழப்பு நடத்த முடியாது.

Bleachingpowder said...

மண்டைய பொழக்குற வெயில்ல இப்படி பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன்னு சுத்திட்டு இருக்கியே,
என்ன தான்பா உங்க பிரச்சனை

பிரேம்குமார் said...

அப்புறம் பொழப்ப எப்படி பாக்குறது ப்ளீச்சிங் பவுடர் (நீங்க எத ப்ளீச் பண்ணப் போறீங்க)

Anonymous said...

\செல்லும் இடத்தை மட்டும் குறிப்பிட்டால் நிறைய குழப்பங்கள் தீரலாம். ஆனால் நிறைய பேர் அதையும் படிக்காமல் வெறும் தடம் எண்'ணை மட்டும் பார்த்து ஏறுகிறார்கள்\\ பிரேம் குமார், கோவையில் போகும் இடம் மட்டும் நம்பரோடு இருக்கும். eg காந்திபுரம் போகும் பேருந்து "காந்திபுரம், வழி குனியமுத்தூர் " என்று இருக்கும். அதே போல் ஆவராம்பாளையம் போகும் பேருந்துகளில் வழி ரயில்நிலையம் இப்படி இருக்கும். எனக்கு கோவையில் இது போன்ற குழப்பங்கள் ஏற்பட்டதில்லை.

Thamizhan said...

பெரிய பிரச்சினையே தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக் கொள்வதில்லை.
பெரிய மனுசங்கறது நெனப்பிலே இல்லை,நடத்தையிலே தான்,

சிறுவர்கள் முதல் மகாப்பெரியவர்கள் வரை மூன்று வார்த்தைகள் ரொம்ப பயன் படுத்துறாங்க!
I don't know.
Please.
Thank you!

நம்ம ஊர்லே இல்லை அண்ணாச்சி,
அதுதான் பிரச்சினையே!

ஜி said...

:))))

Avinga avingalukku aayiram prachana.. ovvoruthar kittaiyum ennathaan prachannainu kekka mudiyumaa?? :)))

Software Industry paththi padam edukuravanla irunthu seriel edukuravan varaikkum ellaarume ippadi thaan kaaturaanunga.. enna panrathu?? ethulaiyume ethaarthama illaama konjam exxagerate panni kaaturathu thaane thamiz cinema panpaadu :))))

கோபிநாத் said...

இங்கையும் பிரச்சனையா!! ? ;))

பிரேம்குமார் said...

சின்ன அம்மிணி,ஜி,தமிழன், கோபிநாத் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :))

ஸ்ரீ said...

Chellam enaku neraya prechana iruku naina :) aaaana nee sonna ella matterum yosikira madhiri dhaan iruku. Ennathaanpa un prechana? :)

குட்டி செல்வன் said...

என்ன தான்பா உங்க பிரச்சனை? :))))

Karthik said...

ஒருமுறை நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனுக்குள் போகும் வழியில் மூன்று வயதானவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

எக்ஸ்க்யூஸ் மீ, கொஞ்சம் வழி விடுங்க.

அந்த வழியா போப்பா.

இல்ல, நான் இப்படிதான் போகனும்.

அடடா, இவங்க தொல்லை இருக்கே!


என்று ஒட்டுமொத்த காலேஜ் பசங்களையும் அவர்களுக்குள் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

என்ன தான்பா உங்க பிரச்சனை?

//கோவையில் போகும் இடம் மட்டும் நம்பரோடு இருக்கும்.

Exactly!

பிரேம்குமார் said...

சோக்கா சொன்ன கார்த்திக் கண்ணா :)