28 April 2008

சின்ன வயதில் பாடிய பாடல்கள். அப்படின்னா????

அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் யாரு உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இனி இல்லை

கொஞ்சம் நல்லா நினைவில் நிற்கிற பாட்டு இதுதான். ஆனா எழுத உட்கார்ந்த போது தான் அதுவும் அரைகுறையாய் தான் நினைவிருக்குன்னு தெரிஞ்சுது.

ஆனை ஆனை
அழகர் ஆனை
அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை
குட்டு யானைக்கு
கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம்
பறந்தோடி போச்சாம்

மதுரையில் பிறந்த எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ;-)
(ஆனா ஆனை பறக்குமா என்று ரூம் போட்டு தான் யோசிக்கனும்)

தேன்மொழி நல்ல பெண்
காலையில் எழுவாள்
அம்மாவுக்கு உதவுவாள்
பாடம் படிப்பாள்
பள்ளிக்கூடம் போவாள்

இது பாட்டு வகையில சேருமான்னு தெரியல। ஆனா என் தம்பி சின்ன வகுப்புல படிச்சது இது। அவன் ராகத்தோட இத பாடுவான். அதுவும் 'நல்ல' என்ற வார்த்தை வராமல், 'தேன்மொழி லல்ல பெண்' என்று தான் சொல்வான். அதனாலேயே என்னவோ இந்த பாட்டு (?!!) நன்றாக நினைவில் உள்ளது

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்கு கிடைத்த பொம்மை போல்
ஏதும் இல்லை உலகிலே

ஆட்டத்துக்கு அழைத்த தங்கை எழில்பாரதியே இந்தப் பாடலையும் கொடுத்து உதவினார்। பார்த்தவுடன் தான் ஆகா, இந்த பாட்டையும் நாம் பாடியிருக்கிறோமே என்று நினைத்துக்கொண்டேன்

யாரையாவது 3 பேர மாட்டி விடனுமாமே.... அவுங்க யாருன்னா....
கௌசல்யா
செந்தில்
நந்தா

7 க‌ருத்துக்க‌ள்:

ஸ்ரீ said...

ஹைய்யோ ஹைய்யோ சித்து என்ன இது சின்ன புள்ளத்தனமா?

முதல் பாட்டுல மீதி இருப்பதை என்ன அடுத்த பதுவுல முடிப்பீங்களா?

இதோ மீதி பாட்டு:

"ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே நமக்கு வழியாம்"

சரி இதக்கூட மன்னிச்சிடுவேன்.

அதென்ன தேன்மொழி பத்தி பேச்சு? இதெல்லாம் நல்லதுக்கு இல்லீங்கோ! வூட்டுக்கு போன் போட்டாதான் சரி ஆவீங்க போல.

கோபிநாத் said...

மாப்பி...பாட்டு எல்லாம் உண்மையிலேயே நீயே யோசிச்சி எழுதினியா!!! ?

நல்லாருக்கு ;)

@ ஸ்ரீ
\\அதென்ன தேன்மொழி பத்தி பேச்சு? இதெல்லாம் நல்லதுக்கு இல்லீங்கோ! வூட்டுக்கு போன் போட்டாதான் சரி ஆவீங்க போல.\\

ஸ்ரீ நீங்க இப்படி தான் சொல்லிக்கிட்டு இருப்பிங்க எதுவும் செய்யமாட்டிங்கன்னு..மாப்பி சொல்றாரு ;)

ச.பிரேம்குமார் said...

//அதென்ன தேன்மொழி பத்தி பேச்சு? இதெல்லாம் நல்லதுக்கு இல்லீங்கோ! //

தேன்மொழி பத்தி என் தம்பிகிட்ட தான்யா கேக்கனும்

ச.பிரேம்குமார் said...

//ஸ்ரீ நீங்க இப்படி தான் சொல்லிக்கிட்டு இருப்பிங்க எதுவும் செய்யமாட்டிங்கன்னு..மாப்பி சொல்றாரு ;)//

உனக்கு ஏன் மாப்பி இந்த கொலவெறி :)

aanazagan said...

செம மொக்கை மச்சி. விட்டு தூள் கிளப்புங்க.

MSK / Saravana said...

எப்பிடி இப்பிடி உங்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கு. .
மற்றும்,

என் வலைப்பதிவு பக்கம் வருகை தந்ததற்கு நன்றிகள்.
" சரவணா,

இன்று தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். உங்கள் கவிதைகளும் அதை தாங்கி நிற்கும் உங்கள் வலைப்பூவின் வடிவமும் மிக அருமை. வாழ்த்துக்கள்"

இக்பால் said...

உங்கள் கவிதைகளும், வலைப்பூவின் வடிவமும் மிக அருமை.