வீட்டில் ஒரு நற்காரியம் என்பதால் நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் கூடியிருந்தனர். நான், எனது பெரியம்மா மக்கள் என்று பிள்ளைகள் கூட்டமாய் சுற்றிக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அக்கா குழந்தைகள், தங்கையின் மகள், மாமன் பிள்ளைகள் என்றொரு அழகு மழலைப் பட்டாளம் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தது.
***
மாமா பெண் இப்போது தான் மழலையர் வகுப்பு சேர்ந்திருக்கிறாள். பெண் பிள்ளைகளுக்கு எப்படித்தான் அந்த அழகுணர்ச்சி வருமோ தெரியவில்லை, இப்போதிலிருந்தே ஆடைகள், நகைகள் என்றால் கொள்ளை பிரியம் அவளுக்கு. அது எந்த அளவுக்கு போயிருக்குன்னு பாருங்க
அத்தை : அபி, இன்றைக்கு பள்ளியில என்ன சொல்லிக்கொடுத்தாங்க? டீச்சர் நல்லா தராங்களா?
அபி : போம்மா, எங்க டீச்சருக்கு ஒன்னுமே தெரியல. இன்றைக்கு ஆத்திசூடி சொல்லிக்கொடுத்தாங்க... அம்மா அது 'நெத்திசூடி' தானே. டீச்சர் ஏன் 'ஆத்திசூடி'ன்னு சொல்றாங்க?
ஆத்தா, நல்ல வேளை அவ்வையாரால இதெல்லாம் கேக்க முடியாது
***
அத்தை : சரி அந்த ஆத்திசூடிய கொஞ்சம் சொல்லு
அபி : அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்......... தூக்கமது கைவிடேல்
அத்தை : வெளங்கிரும் !!
***
அபி திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டாள். பதறிப்போய் என்னவென்று கேட்டால், சட்டையில் தண்ணீர் சிந்தி ஈரமாகிவிட்டதாம். சரிம்மா இதை கழட்டிவிட்டு வேறு உடை போட்டக்கலாம் என்ற போது கண்ணீர் மறைந்து பெருஞ்சிரிப்பொன்று ஒட்டிக்கொண்டது
மாமாவோ எந்த சலனமுமில்லாமல் வேறு உடையை கொண்டு வந்து கொடுத்துப் போட்டுக்கொள்ள சொன்னார்கள். நான் ஏதோ ஒன்று விளங்காதவனாய் மாமாவை பார்த்தபோது அவர்கள் சொன்னது,
"மொத்தம் நாலு உடை கொண்டு வந்திருந்தோம். இன்னும் ஒன்னு போடாம் இருந்தது. இப்போது கிளம்பு நேரம் வந்திருச்சா. அதான் இந்த நாடகம்"
ஆகா, ஒரு மார்க்கமாதான்யா இருக்காங்க
***
என் தங்கையின் மகன் பிரணவுக்கு ஒரு வயதாகி முன்று மாதம் தான் ஆகிறது. ஆனால் அவன் செயல்கள் எல்லாமே வியப்பாய் இருக்கிறது. என் தங்கை அவனை சரியாக வளர்க்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்
காகம், நாய், சிங்கம், குதிரை எல்லாம் எவ்வாறு ஒலி எழுப்பும் என சொல்ல தெரிகிறது. வீட்டிலுள்ள பொருட்களின் பெயர் சொன்னால் அவற்றை சுட்டிக்காட்ட தெரிகிறது. புத்தகங்களிலும் அவற்றை சரியாக அடையாளம் காட்டுகிறான்.உறவுகளையெல்லாம் நன்றாக சொல்ல தெரிகிறது. அவனைவிட கொஞ்சம் வளர்ந்த வேறு சில குழந்தைகள் ஆர்வமாக வந்து 'நான் யார்ன்னு சொல்லு' என்ற போதும் குழம்பாமல் 'அண்ணா, அக்கா' என்று சொல்லி சமாளித்தான். தாங்களே குழந்தைகள் தான் என்பதை மறந்து அவன் விளையாட்டையும் அவன் மழலையையும் கொண்டாடிக்கொண்டிருந்தன மழலைப் பட்டாளம்.
***
அவர்கள் வீட்டினருகே சாலை அமைத்த போது கொண்டுவரப்பட்ட 'ரோட் ரோலர்' அவனுக்கு பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அப்போது பெரிதாய் இருக்கிறது என்று குறிப்பதற்கு இரண்டு பிஞ்சு கைகளையும் தலைக்குப்பின் உயர்த்தி காட்ட கற்றுக்கொண்டிருக்கிறான்
புதுவையின் கடற்கரை என் தங்கைக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறு பிள்ளைகளாய் நாங்கள் விளையாடித் திரிந்த அதே கடற்கரை சாலையில் ப்ரணவையும் கூட்டிக்கொண்டு நடந்தார்கள். என் தங்கை இன்னும் ரசிக்கும் அந்த கடற்கரையை அவனும் கண்டு ஆர்ப்பரித்திருக்கிறான். வீட்டுக்கு வந்தவுடன் என்னடா செல்லம் பார்த்தே என்று கேட்டால் சிரிக்க மட்டுமே தெரிந்தது. இருப்பினும் கடலில் எவ்வளவு தண்ணீர் இருந்தது என்று கேட்டால் இரு கைகளையும் பின்னோக்கி உயர்த்தி காட்டியபோது அவன் கண்களிலும் அத்தனை வியப்பும் ஆச்சரியமும் அப்போதும் இருந்தது
வெளியே போகும் போது எனக்கு உன்னோட சுரிதார் ஒன்றை கொடு என்று என் இளைய தங்கையிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் தங்கை. அய்யோ அக்கா, உனக்கு பெரிய உடை தானே பொருந்தும் என்று கேலி செய்துக் கொண்டிருந்தார்கள் தங்கைகள். அப்போது ப்ரணவை அழைத்து, 'அம்மாக்கு எவ்வளவு பெரிய உடை வேண்டும் தம்பி' என்று கேட்ட போது எப்போதும் இல்லாத வண்ணம், கைகளை மிக அலகமாக தலைக்கு மேல் விரித்து காட்டினான். சிரிப்பலைகள் நிற்க வெகு நேரம் ஆனது
8 July 2008
மாமன் மகள் பதித்துப்போன நினைவுகள்
எழுத்து வகை: எண்ணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
17 கருத்துக்கள்:
ரசித்தேன்...என்ஜாய் மாப்பி ;))
என்னோட அக்கா பெண்ணு இப்பவோ...2வயசு ஆகாபோகுது...போன்ல என் பெயரை அழுத்ததிருத்தமாக சொல்லி கூப்பிடுறா!! ;))
உங்க பதிவ படிச்சதும், வெளிநாட்டில இருக்கறதுனால சொந்த பந்தங்களை எவ்வளோ மிஸ் பண்ணறோம்னு வருத்தப்பட வைச்சிட்டீங்க
என்ன மாப்பி, உன் நிலம இப்படி இருக்கு? மரியாதை கிழியுது போல ;)
ம்ம்ம், என் தங்கை மகன் பரவாயில்லை, இப்போ வரைக்கும் அழகா 'மா..மா'ன்னு கூப்பிடுறேன். பின்னால என்னாகும்னு தெரியல ;)
சின்ன அம்மிணி,
எல்லோருமே ஒரு வகையில சொந்தங்களை விட்டு தள்ளி இருக்கோங்க.. முடிஞ்சா அப்பப்போ ஒன்னு கூடி மகிழ்ந்துக்கலாம். பண்டிகைகள், வைபவங்கள் எல்லாம் அதுக்கு தானே இருக்கு
குழந்தைகள் செய்வது எல்லாமே ரசிக்கத்தகுந்தவை தான்.. தவறே செய்தாலும் முதலில் ரசித்துவிட்டுத்தான் அப்படி செய்யக்கூடாதும்மா என்று சொல்லவருகிறது.. :)
கிகிகி... சரியா சொன்னீங்க அக்கா :)
Children are creation of god. So they are nothing but pure perfect.
உங்களின் நினைவுகள் எனக்குள் பல நினைவுகளை கிளறிவிட்டது.நல்லா இருக்கு.
its a nice update
அத்தை : வெளங்கிரும் !!
ஆகா இந்த வார்த்தைய உங்க குடும்பமே யூஸ் பண்றீங்களா??
நல்ல தருணங்கள்.:)))
தலைப்ப பாத்ததும் என்னடா பிரேம் வாழ்க்கைல ஒரு புதுக்கதையோனு நினைச்சேன் ஹி ஹி ஹி...
குழந்தைகள் செய்வது எல்லாமே ரசிக்கத்தகுந்தவை தான்..
:)
கூடிய விரைவில் உங்கள் குழந்தையும் நிறையவே செய்யும்..
வாழ்க்கையின் ஒரு புது ரசிக்கபடவேண்டிய அத்தியாயம் தொடங்கிற்று உங்களுக்கு..
:)
வந்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட நட்புகளுக்கெல்லாம் நெஞ்சார்ந்த நன்றிகள் :)
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
மழலைகள் என்றுமே அழகுதான் :)) அப்புறம் உங்க பையன்(பொண்ணு??) என்ன பண்றாப்ல??
Post a Comment