31 July 2008

மடிப்பாக்கம் விட்டு வைக்குமா வைக்காதா?

சென்னையில் வாடகைக்கு வீடு தேடி நொந்து நூலாகும் அனேகம் பேரில் நானும் ஒருவன். இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை. தினமும் நூற்றுக்கணக்கானோர் குடிபெயரும் இந்த சென்னையில் வாடகைக்கு வீடு தேடுவது மிக மிக கடினமான ஒரு வேலையாக தான் இருக்கிறது.

இப்போது இருக்கும் வீட்டை விற்றுவிட்டு இன்னும் பெரிதானதொரு வீட்டை வாங்க போகிறாராம் வீட்டின் உரிமையாளர். ம்ம்ம், ஆறு மாசத்தில உங்களால வேறு வீடு வாங்க முடிகிறது நல்ல விசயம் தான். ஆனால் ஆப்பு என்னமோ எங்களுக்கு தான்.

முன்பு போல் இப்போது எங்கும் 'வீடு வாடகைக்கு விடப்படும்' பலகையை பார்க்க முடிவதில்லை. எல்லா இடங்களில் இடைத்தரகர்களை தான் நம்ப வேண்டியிருக்கிறது. ஏதாவது புண்ணியவான்கள் வலைதளங்களில் விளம்பரம் செய்திருந்தாலும் கொஞ்ச நேரத்திலேயே தொலைபேசினாலும் 'முடிந்துவிட்டது' என்று தான் பதில் வருகிறது

வலைப்பூவில் எழுதி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. உருப்படியா சீக்கிரம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனா இப்போது இந்த புலம்பலை இங்கே இட வேண்டிய நிலை. வேற எங்கே போய் புலம்புறது????

மடிப்பாக்கத்தோடு இப்போது தான் கொஞ்சம் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மடிப்பாக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நேசிக்க ஆரம்பித்திருக்கும் இந்த தருணத்தில் இப்படி ஒரு செய்தி. மடிப்பாக்கத்துடனான உறவு தக்க வைக்கப்படுமா இல்லை முறியுமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்...

18 க‌ருத்துக்க‌ள்:

pudugaithendral said...

மீ த பர்ஸ்டு.

pudugaithendral said...

நானும் உங்களுடைய சந்தோஷமான பதிவுக்காக காத்திருக்கிறேன்.

(நல்ல வீடு அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அதை விட நல்ல ஹவுஸ் ஓனர் அமைய பிரார்த்தனை)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கு நன்றி புதுகை தென்றல். நானும் சந்தோசமான பதிவு போடனும்னு தாங்க நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த துக்கம் வந்து தொண்டைய அடைச்சிருச்சு :)

ச.பிரேம்குமார் said...

உங்க வாழ்த்துக்களுக்கு பிராத்தனைகளுக்கு மிக்க நன்றிங்க‌ :)

rapp said...

ஒரு நிமிஷம் நீங்க லக்கிலுக் சாரைத்தான் சொல்றீங்களோன்னு குழம்பிட்டேன்

MSK / Saravana said...

நல்ல வீடு அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

அதை விட நல்ல ஹவுஸ் ஓனர் அமைய பிரார்த்தனை..

ராஜ நடராஜன் said...

// ஒரு நிமிஷம் நீங்க லக்கிலுக் சாரைத்தான் சொல்றீங்களோன்னு குழம்பிட்டேன்//

நானும் கூட மடிப்பாக்கத்துக்காரரைப் பற்றிய கிசு கிசுன்னுதான் வந்தேன்:) அப்புறம் பார்த்தா உங்க கவலையில் பங்கெடுக்கவேண்டியதாகிவிட்டது:(

ச.பிரேம்குமார் said...

ராப், அவர பத்தி அதுவும் இந்த மாதிரி ஒரு தலைப்புல சொல்லனும்னா, அது விவகாரமாயில்ல ஆயிடும் ;)

ச.பிரேம்குமார் said...

சரவணா, வாழ்த்துக்கு நன்றி!

இப்போ இருக்கிற வீட்டோட உரிமையாளரும் நல்லவங்க தான். அவுங்க நிலைமை அப்படி. அடுத்த குடுபோகும் வீடாவது ரொம்ப நாளைக்கு நிலைக்கனும்னு வேண்டிக்கோ ;)

ச.பிரேம்குமார் said...

மடிப்பாக்கத்தார பத்தி கிசுகிசுவுக்கு நிறைய ஆதரவு இருக்கும் போல இருக்கே... சீக்கிரமே அப்படி ஒரு பதிவு போட்டுட வேண்டியது தான்.

என் கவலையில் பங்கு கொண்டதற்கு நன்றி நடராசன் :)

pudugaithendral said...

நான் சந்தோஷமான பதிவுன்னு சொன்னது உங்களுக்கு வீடு கிடைச்சிடுச்சுன்னு சொல்லி நீங்க போடப்போற பதிவைச் சொன்னேன்.

Unknown said...

சீக்கிரமே நல்ல வீடு அமைய வாழ்த்துகள் அண்ணா...!! :-))

Tech Shankar said...

That is True.

What to do?

தணிகை said...

காத்துகினு கீறேன்பா..

தக்கவெக்கணும்னு நினைக்கிறேன்..

நீரு தக்குவியோ தக்க மாட்டிரோ..

லக்கிலுக் said...

//மடிப்பாக்கத்துடனான உறவு தக்க வைக்கப்படுமா இல்லை முறியுமா என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்...//

:-(((((((

ச.பிரேம்குமார் said...

புதுகை தென்றல, தணிகாசலம் எல்லாருக்கும் நன்றி. வீடு கிடைச்சா உடனே அதுக்கும் ஒரு பதிவு போட்டுடுவோம் :)

ச.பிரேம்குமார் said...

எல்லோரும் வந்துட்டு போயிட்டாங்க, அவர பத்தியும் விசாரிச்சுட்டு போயிட்டாங்க... நம்ம மடிப்பாக்காத்து சிங்கத்த மட்டும் இன்னும் காணோமே நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு வழியா அண்ணே அட்டன்டண்ஸ போட்டுட்டாரு!!

Karthik said...

//நல்ல வீடு அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

I repeat this!