திண்ணையை பற்றி என்னை எழுத அழைத்த சரவணகுமாருக்கு நன்றிகள் பல.. [இப்படித்தான் முன்னுரை எழுதனும் அப்படின்னு சரவணகுமார் சொல்லியிருக்காரு :) ]
நகரத்தில் வளர்ந்த எனக்கும் திண்ணைக்கும் அவ்வளவாக சம்பந்தமில்லை என்றாலும், என் வாழ்விலும் மறக்க முடியாத சில திண்ணைகள் இருக்கவே செய்கின்றன
** திருமோகூர் திண்ணை **
திருமோகூரில் உள்ள வீடு அம்மாச்சியின் அப்பா கட்டியது. திருமோகூர் சக்கரத்தாழ்வார் கோவிலுக்கு அருகில் அமைந்த வீடு. அக்காலத்தில் அந்த வீடு மட்டும் தான் கல்வீடாக இருந்ததாம். வீட்டு வாயில் வளைவு மேல் பாரத அன்னையின் சிலையும் காந்தியின் சிலையும் இருக்கும். அதனால் இன்றும் திருமோகூரில் அந்த வீட்டை எல்லோருக்கும் அடையாளம் தெரியும்.
பள்ளி விடுமுறைகளில் திருமோகூருக்கு சென்று மிக சொற்பமான நாட்கள் தான் எனினும், அந்த திண்ணையில் விளையாடிய நாட்கள் நன்றாக நினைவிருக்கிறது.
(போன வாரம் மதுரை போக நேர்ந்தபோது எடுத்த புகைப்படம். திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பது அப்பா)
** மதுரை திண்ணை**
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ளது பெரிய அம்மாச்சியின் வீடு. நான் பிறந்தது மதுரையில் தான் என்பதால் என் முதல் சில மாதங்களை நான் அந்த வீட்டில் தான் கழித்திருக்கிறேன். பின் சில கோடை விடுமுறைகளில், எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மொட்டையடிக்க, சித்திரை திருவிழாவுக்கு என அடிக்கடி மதுரை சென்றதுண்டு. பெரியவர்கள் எல்லாம் உள்ளறைகளில் தூங்கச் சென்றுவிட அனேகமாய் பிள்ளைகள் அனைவரும் ஓரிரு பெரியவர்கள் கண்காணிப்பில் திண்ணையில் தான் படுத்து உறங்குவோம். நாள் முழுவதும் சாப்பாடு, விளையாட்டு என அங்கே தான் பொழுது கழியும்.
** தேவகோட்டை திண்ணை **
தேவகோட்டை வடக்கு மாசி வீதியில் இருப்பது தாத்தாவின் அப்பா வீடு. அங்கே இருக்கும் திண்ணை தான் மேலே குறிப்பிட்ட திண்ணைகளை விட மிக நீளமானது. வீட்டிற்கு முன் அமைந்துள்ள அம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது நடைபெறும் கூத்து நிகழ்ச்சிகளை விடிய விடிய பார்த்ததுண்டு. தூக்கம் வரும் நேரம் திண்ணையில் படுத்துக்கொண்டு நாடகத்தை பார்த்துக்கொண்டே உறங்கிப்போனதுண்டு.
அந்த திண்ணையில் இன்னொரு விசேசமும் உண்டு. இரண்டு திண்ணைக்கும் நடுவே வீட்டுக்குள் செல்ல 3 படிக்கட்டுகள். சரியாக திண்ணைக்கு வெளியே வாசலுக்கருகில் இரண்டு யானையின் உருவங்கள் இருக்கும். செம்மண் நிறத்தில் அழகாய் பளபளப்புடன் இருக்கும். சின்ன வயதில் அதன் துதிக்கையில் சறுக்கி விளையாடியிருக்கிறோம். இப்போது அந்த யானைகள் பார்க்கையில் அவை இடுப்பளவுக்கு கூட இல்லை. (தேவகோட்டைக்கு சென்று திண்ணையின் படத்தை எடுக்கும் வாய்ப்பு கிட்டவில்லை)
தொடர்பதிவுக்கு இரண்டு பேரை அழைக்கனுமாமே...
முதல் நபர்.. தம்பி கார்த்திக்
இரண்டாவதாக தோழி சந்தனமுல்லை
சரவணா, சரியா எழுதிட்டேனாப்பா? :)
15 September 2008
திண்ணை நினைவுகள்
எழுத்து வகை: பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
20 கருத்துக்கள்:
Me the Firstu?!
//என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் கருத்துக்களை பதித்துச் செல்லுங்கள் :)
இருங்க..சொல்றேன்.
:)
சூப்பரா எழுதியிருக்கீங்க... அதுவும் அங்க அங்க போய் போட்டோவெல்லாம் எடுத்து, உங்க கமிட்மென்ட் புல்லரிக்க வைக்குது.
:)
//முதல் நபர்.. தம்பி கார்த்திக்
ஆஹா, நான் நியூட்டனை நம்புகிறேன்.
வாங்க கார்த்திக் வாங்க, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படீன்னு சொல்வாங்களே.... அது இது தான்
காதெலனப்படுவது யாதெனில் தொடர்
கார்த்திக் ~ பிரேம்குமார் ~ சரவணகுமார் என்ற வரிசையில் எழுதப்பட்டது
திண்ணை தொடர்
சரவணகுமார் ~ பிரேம்குமார் ~ கார்த்திக் என்ற வரிசையில் எழுதப்படும் :)
கலக்கீட்டீங்க பிரேம்..
இதுவரைக்கும் யாரும் மூன்று திண்ணைகளை பத்தி எழுதலைன்னு நெனைக்கிறேன்..
படங்களும் அழகு..
:))
//சின்ன வயதில் அதன் துதிக்கையில் சறுக்கி விளையாடியிருக்கிறோம். இப்போது அந்த யானைகள் பார்க்கையில் அவை இடுப்பளவுக்கு கூட இல்லை. //
கலக்கல் பிரேம்..
:)
//வாங்க கார்த்திக் வாங்க, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் அப்படீன்னு சொல்வாங்களே.... அது இது தான்
காதெலனப்படுவது யாதெனில் தொடர்
கார்த்திக் ~ பிரேம்குமார் ~ சரவணகுமார் என்ற வரிசையில் எழுதப்பட்டது
திண்ணை தொடர்
சரவணகுமார் ~ பிரேம்குமார் ~ கார்த்திக் என்ற வரிசையில் எழுதப்படும் :)//
ரிப்பீட்டேய்.. :))))))
பிரேம் ஒரு சின்ன கேள்வி..
எப்படி சிலர் பிளாகுகளில் மட்டும் [உங்கள் பிளாகையும் சேர்த்தே சொல்கிறேன்] ஸ்மைலிகள் இமேஜ் மற்றும் அனிமேட்டட் இமேஜாக தெரிகிறது.??
நல்ல பதிவு அண்ணா..!! :))
சரவணா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இந்த சுட்டியில் சென்று பார்க்கவும். அங்கே தீபாவின் நிரலை சேர்த்திருக்கிறேன். அதனால் தான் ஸ்மைலி தெரிகிறது
மிக்க நன்றி தங்கச்சி :)
Forgot to mention the link. This is the one :)
http://poorna.rajaraman.googlepages.com/
Thanks Prem.
:)
நல்ல பதிவு பிரேம். புகைப்படங்கள் அழகு.
அனுஜன்யா
நன்றி பிரேம்குமார்!
இதோ என்னுடைய இடுகை...
http://sandanamullai.blogspot.com/2008/09/blog-post_21.html
உங்க அளவுக்கெல்லாம் இல்லாட்டியும் ஓரள்வுக்கு எழுதியிருக்கேன்..
போரடிக்காம இருக்கான்னு பாருங்க!!
:)))
பழைய காலத்து எஃபக்டு வரனும்ங்றதுக்காகத்தான் போன வாரம் எடுத்த ஃபோட்டோவும் கறுப்பு வெள்ளையா?? :)))
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..
:))
//உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. வந்து பாருங்க..
ரிப்பீட்டேய்...
அட நானும் கூப்பிட்டிருக்கேன்.
:)
Post a Comment