19 November 2008

மன்னராட்சி இன்னும் முடியவில்லை

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வாசலில் பேருந்து நிலையத்தையே மறைத்துக் கொண்டு ஒரு பலகை இருக்கும், இப்பேருந்து நிலையத்தை திறந்து வைத்தது செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் என்ற அறிவிப்பை தாங்கியபடி. சில காலத்துக்கு முன்பு அந்த வளாகத்தின் மற்றொரு வாசலில் 'இந்த பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியது திரு. கருணாநிதி அவர்கள்' என்று ஒரு பலகையை வைத்தார்கள்.

அடிக்கல் நாட்டியவரும், திறந்து வைத்தவருமா இந்த வளாகம் கட்ட நிதி கொடுத்தார்கள். அரசு செலவில் தானே இவை செய்யப்பட்டது?

சென்ற மாதம் புதிப்பிக்கப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையையும் திறந்து வைத்தார் முதல்வர்.

ஆளுயர விளம்பர பதாகைகள், குழல்விளக்குகள், கட்சிக்கொடிகள், உதயசூரியன் சின்னம் பொறித்த சீரியல் செட் விளக்கு தோரணம் என்று அதகளப்படுத்துவிட்டார்கள் உடன்பிறப்புகள். மின் தட்டுப்பாடு சென்னையை முழுக்க ஆக்ரமித்திருக்க அன்று இரவு முழுதம் அந்த சாலை முழுவதும் குழல்விளக்குகள் எரிந்துக்கொண்டே இருந்தன. அந்த குழல்விளக்குக்களுக்கான மின்சாரம் எங்கிருந்து வந்தது? அந்த குழல்விளக்குகளால் என்ன பயன் என்று யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

போக்குவரத்து மிகுந்த அந்த சாலையை செப்பனிட்டும், இணைப்பு சாலையை மேம்படுத்தியும் அரசு சிறப்பான ஒரு பணியை செய்திருக்கிறது.

ஆனால் அரசு சார்பாக நடந்த அந்த விழாவில், கட்சிக்கொடிகளுக்கும், கட்சி சின்னத்துக்கும் என்ன வேலை? இன்னும் புரியவில்லை

அதே போல் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்கள், உயர் கோபுர மின்விளக்குகள் மீது, 'இது இன்னாரது தொகுது மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்டது' என்று பலகைகள் இருக்கிறது. இதில் அன்னாரது பெயர் தேவையா?

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கிவிட்டதாய் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவர்கள் எல்லாம் இன்னும் மன்னர் ஆட்சியில் இருப்பதாய் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அக்காலத்தில் மன்னர்கள் எழுப்பும் கோயில்களில் தங்கள் பெயரை பொறித்து வைத்துக் கொண்டது போல் தான் இருக்கிறது இவர்கள் நடவடிக்கை

20 க‌ருத்துக்க‌ள்:

Subbu said...

me the first...

Subbu said...

இதற்கு உடன்பிறப்புகளின் பதில் என்ன?

துளசி கோபால் said...

//அக்காலத்தில் மன்னர்கள் எழுப்பும் கோயில்களில் தங்கள் பெயரை பொறித்து வைத்துக் கொண்டது போல் தான் இருக்கிறது இவர்கள் நடவடிக்கை//

என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க! எத்தனை கோயில்கள் எப்ப, யார் கட்டுனாங்க என்ற ஒரு விவரமும் இல்லாமக் கிடக்கு.

பொழைக்கத் தெரியாத பழங்கால மன்னர்களை என்ன செஞ்சாத் தகும்?

ஸ்ரீதர்கண்ணன் said...

அடிக்கல் நாட்டியவரும், திறந்து வைத்தவருமா இந்த வளாகம் கட்ட நிதி கொடுத்தார்கள். அரசு செலவில் தானே இவை செய்யப்பட்டது?

சரியாக சொன்னீர்கள். எதுக்குடா உங்களுக்கு இந்த விளம்பரம்??????

Anand said...

good one mann

Karthik said...

எனக்கு வர்ற எலக் ஷன்ல யாருக்கு ஓட்டு போடுறதுன்னே தெரியலை பிரேம்.

கோபிநாத் said...

என்ன மாப்பி புதுசு புதுச கேள்வி கேட்குறே....இது எல்லாம் பதிலே வராது ராசா.!

பிரேம்குமார் said...

சுப்பு, நீதானா அது? :)

இதுக்கு உடன்பிறப்புகள் கண்டிப்பா பதில் சொல்ல மாட்டாங்கப்பா :)

பிரேம்குமார் said...

//பொழைக்கத் தெரியாத பழங்கால மன்னர்களை என்ன செஞ்சாத் தகும்?/

என்ன செய்யுறது அக்கா, இப்போ இருக்கவுங்ககிட்ட அவுங்க பாடம் கத்துக்க வேண்டியது தான் ;)

Saravana Kumar MSK said...

இன்னுமா இந்த நாட்டை நீங்க புரிஞ்சிக்கல..???!!!!!!!!!

Saravana Kumar MSK said...

இந்த மாதிரியான விஷயங்களை பேசி பேசி போரடிக்குது.. ஒவ்வொரு தனி மனிதனும் அரசாங்கமும், தலைவர்களும் திருந்தாத வரை.. ஒன்னும் நடக்காது..

Anonymous said...

இதில நாட்டுக்கு அர்ப்பணித்தோம்னு வேற சொல்வாங்களே. மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு செலவு செய்ய அரசியல்வாதிகளுக்கு அப்படி இருக்கு

சகாதேவன் said...

இளவரசர்கள் அடுத்து அரியாசனத்தில் யார் அமர்வது என்று சண்டை போடுவதும் நடக்கிறதே.

சகாதேவன்

பிரேம்குமார் said...

வாங்க ஸ்ரீதர்.... என்ன செய்யுறது? பல சமயம் ஜால்ரா போடுறவுங்க இதுக்கு காரணமா ஆயிடுறாங்க. சில சமயம் அவுங்களே கேட்டு வாங்கிக்குறாங்க..

இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா

பிரேம்குமார் said...

நன்றி ஆனந்த் :)

பிரேம்குமார் said...

கார்த்திக், வரும் தேர்தல்ல தான் நீ முதன்முதலாக வாக்குப்பதிவு செய்ய போகிறாய் தானே...
கொஞ்சம் கஷ்டம்தான்!

எங்களுக்கும் ரொம்ப நாளா இந்த குழப்பம் இருக்கு

why blood? same blood!

பிரேம்குமார் said...

//என்ன மாப்பி புதுசு புதுச கேள்வி கேட்குறே....இது எல்லாம் பதிலே வராது ராசா.!//

தெரியும் கோபி... ஆனாலும் அதெல்லாம் பாக்குறப்பா வர கடுப்ப இறக்கி வைக்க வலைப்பூ தானே கதி ;)

பிரேம்குமார் said...

//இன்னுமா இந்த நாட்டை நீங்க புரிஞ்சிக்கல..???!!!!!!!!!//

அதெல்லாம் புரிஞ்சிருச்சுப்பா.... ஆனா ஏத்துக்க முடியலையே :(

ஊர தெரிஞ்சிக்கிட்டேன்... உலகம் புரிஞ்சிக்கிட்டேன்.... சரவணா என் சரவணா :)

பிரேம்குமார் said...

//இதில நாட்டுக்கு அர்ப்பணித்தோம்னு வேற சொல்வாங்களே. மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு செலவு செய்ய அரசியல்வாதிகளுக்கு அப்படி இருக்கு//

ஆகா அம்மிணி, அருமையா சொன்னீங்க :)

என்ன செய்யுறது? அவுங்க அப்படியே வளர்ந்திட்டாங்க :)

பிரேம்குமார் said...

//இளவரசர்கள் அடுத்து அரியாசனத்தில் யார் அமர்வது என்று சண்டை போடுவதும் நடக்கிறதே. //

வாங்க சகாதேவன்..... உண்மை உண்மை :)

இந்த மன்னர்கள் விட்டா இவுங்க தான் அடுத்து பட்டத்துக்கு வருவாங்கன்னு பகிரங்கமா அறிவிப்பே விடுவாங்க போல :)