1 December 2008

உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும்

கலைச்செல்வி அழகான இளம் பெண். இப்போது தான் ஒரு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தமிழ் இலக்கியம் சேர்ந்திருக்கிறாள். மகிழ்ச்சியாய் போய் கொண்டிருந்த அவள் வாழ்வில் திடீரென ஒரு இடி. வெகு காலமாய் நோய்வாய் பட்டிருந்த அவளது தாயார் காலமானார்.

செல்விக்கு எல்லாமும் சூனியமாகிவிட்டதாகத் தோன்றியது. பித்துப் பிடித்தாற் போல் அமர்ந்திருந்தாள்.எல்லோரும் அவளுக்கு ஆதரவாக பேசிப் போனார்கள். ஆனால் அவள் மனம் அமைதியடையவே இல்லை. இறுதிச்சடங்கிற்கு வந்த ஒரு இளைஞனை அவளை நோக்கி வந்தான். செல்வி அவனை இதற்கு முன் பார்த்ததில்லை. அவளருகில் வந்து சில ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு போனான்.

அவன் அழகும், வசீகரமும் அவன் பேச்சும் அவளை வெகுவாய் கவர்ந்தது. தன் கனவு நாயகன் அவன் தான் என்பதை உணர்ந்தாள்.ஆனால் அவள் அப்படி உணரும் முன்பே அவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

அவனைப் பற்றி அவளுக்கு எதுவும் தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்று தான். 'அவள் வீட்டில் நடந்த இறப்புக்காக அவன் வீட்டிற்கு வந்தான்'
செல்வி கிட்டத்தட்ட அவன் மீது பைத்தியமே ஆகிவிட்டாள். அவனை எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்று தீராத ஆசை கொண்டாள்

அடுத்த ஒரு வாரத்தில் செல்வி அவள் கூடப்பிறந்த அக்காவை கொன்றுவிட்டாள். அவள் வீட்டில் மீண்டும் ஒரு இறப்பு.

செல்வி எதற்காக தன் அக்காவை கொன்றாள் ?





















பதில் :
இந்த இறப்பின் போதும் அவன் வருவான் என்று செல்வி நினைத்தாள். அதனாலேயே அவள் அக்காவை கொன்றாள். இப்படியாக நீங்களும் நினைத்திருந்தால் உங்களுக்கும் மனப்பிறழ்வு இருக்கக்கூடும். அமெரிக்காவில் இப்படி தான் நிறைய பேருக்கு மனப்பிறழ்வு இருப்பதை கண்டுப்பிடிப்பாங்களாம். வேறு ஏதேனும் முடிவை நினைத்திருந்தால் நீங்க ரொம்ப நல்லவுங்க :)

பி.கு : நீங்களும் செல்வி மாதிரியே சிந்திருச்சுருந்தா, தயவு செய்து எனக்கு தெரியப்படுத்துங்கள். எதுக்கும் உங்க கிட்ட நாங்க உஷாராவே இருந்துக்குறோம்

(மடலில் வந்து ஒரு தகவலின் தமிழாக்கம்)

20 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

எப்படியெல்லாம் எழுதுறாங்கப்பா.

ஆமாங்க நிஜமா இப்படி ஒரு வியாதி இருக்கா?

சினேகிதி said...

நானும் அப்பிடித்தான் நினைச்சனான் ஆனால் அது மனப்பிறள்வென்று சொல்லேலாது ஏனென்றால் இந்த fwd எனக்கம் வந்திருந்தது:-)

நவநீதன் said...

எனக்கும் வந்தது e-mail-லில். நானும் விடை தெரியாமல் முழித்திருக்கிறேன்...
ஏற்கனவே படித்திருந்தத்தால் பதிலை இப்போது எளிதாக யூகிக்க முடிந்தது.

Karthik said...

Naan anda aalu ava akka purusanu ninachen!!!

Karthik said...

ஒரு அழகான காதல் கதை போல ஆரம்பிச்சிட்டு, இப்படி முடிக்கிறது என்ன நியாயம்??

:)

ச.பிரேம்குமார் said...

//எப்படியெல்லாம் எழுதுறாங்கப்பா.//
மடல் அனுப்புனவுங்க தானே?? :)

//ஆமாங்க நிஜமா இப்படி ஒரு வியாதி இருக்கா?//
மனப்பிறழ்வு நிறைய பேருக்கு இருக்குங்க... பல சமயம் வெளில தெரியறதில்லைங்க :)

ச.பிரேம்குமார் said...

//ஏனென்றால் இந்த fwd எனக்கம் வந்திருந்தது:-)//

ஆகா சிநேகிதி, நீங்க எஸ்கேப் ஆயிட்டீங்களா?

ச.பிரேம்குமார் said...

//ஏற்கனவே படித்திருந்தத்தால் பதிலை இப்போது எளிதாக யூகிக்க முடிந்தது.//

நவநீதன், நீங்கள் தப்பிச்சிட்டீங்க :)

முதல் முறை நீங்க ஏதும் யூகிக்கலீங்களா?

ச.பிரேம்குமார் said...

கார்த்திக், நீங்க ரொம்ப நல்லவருங்க :)

நான் அந்த பொண்ணோட அக்காவின் காதலர் அப்படின்னு நினைச்சேன். புருஷன்னு எப்படியும் தெரிஞ்சிருக்கும் தானே. ஒருவேளை 'அலைபாயுதே' மாதிரி கல்யாணம்னா நீங்க நினைச்ச பதில் கூட சரிதான் :)

ஆக மொத்தம் நாம தெளிவாத்தான் இருக்கோம் கார்த்திக்

ச.பிரேம்குமார் said...

//ஒரு அழகான காதல் கதை போல ஆரம்பிச்சிட்டு, இப்படி முடிக்கிறது என்ன நியாயம்??
//

கிகிகி, உன் வயசு அப்படி ;)

கோபிநாத் said...

இதை எல்லாம் விடு....இப்படி வர FWD மெயிலை உட்கார்ந்து தமிழாக்கம் செய்து இருக்கியே மாப்பி...அப்போ உனக்கு என்ன பிறழ்வு இருக்கும்!!!!!????

;))))))

தீரன் said...

ஆகா...என்ன பிறழ்வோ ..மொத்தத்தில்...முழி பிறழ்கிறது....எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா....ஆனால் நானும் நண்பர் கார்த்திக் நினைத்து போல் காதல் கதை என்று தான் கருதினேன் முதலில்...

ச.பிரேம்குமார் said...

//இதை எல்லாம் விடு....இப்படி வர FWD மெயிலை உட்கார்ந்து தமிழாக்கம் செய்து இருக்கியே மாப்பி...அப்போ உனக்கு என்ன பிறழ்வு இருக்கும்!!!!!????

//

ஒரு மடலுக்கே இப்படியா? இன்னும் நிறைய ஸ்டாக் இருக்கு மாப்பி :)

ச.பிரேம்குமார் said...

//ஆனால் நானும் நண்பர் கார்த்திக் நினைத்து போல் காதல் கதை என்று தான் கருதினேன் முதலில்...
//

தீரன், நாளை ஒரு காதல் கதை வருது உங்களுக்காகவே :)

Enjoyyyyyy

மேவி... said...

she might be suffering from mental illness

MSK / Saravana said...

அண்ணா., இதை ஏற்கனவே படித்திருக்கிறேன்..

ச.பிரேம்குமார் said...

//she might be suffering from mental illness//

விசு, இருக்கலாம்.... இல்லாமலும் போகலாம் ;)

ச.பிரேம்குமார் said...

//அண்ணா., இதை ஏற்கனவே படித்திருக்கிறேன்..//

எனக்கும் எப்பவோ வந்துடுச்சு சரவணா. மீண்டும் ஒரு முறை வந்தப்போ, ஏனோ இத தமிழ்ப்படுத்தனும் அப்படின்னு தோனிச்சு... அதான் :)

சரி நீ என்ன நினைச்ச? அத சொல்லலீயே????

MSK / Saravana said...

//சரி நீ என்ன நினைச்ச? அத சொல்லலீயே????//

அது பரம ரகசியம்.. ;)

ச.பிரேம்குமார் said...

////சரி நீ என்ன நினைச்ச? அத சொல்லலீயே????//

அது பரம ரகசியம்.. ;)//

ஆகா, வெவரமாத்தான்யா இருக்காங்க :)