30 December 2008

மாணவர்களும் அரசியலும்

அது நான் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த நேரம். கல்லூரித் தேர்தலுக்காக விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய நாள். மூன்றாமாண்டு வணிகவியல் மாணவரும், மூன்றாமாண்டு கணிப்பொறியியல் மாணவரும் தான் மாணவர் பேரவைத் தலைவர் போட்டிக்கான முக்கிய போட்டியாளர்கள். தங்கள் துறை மாணவர் தேர்தல் போட்டியில் இருக்கிறார் என்பதில் கணிப்பொறியியல் துறைக்கே பெருமையாகத்தான் இருந்தது. இருப்பினும் வழக்கம் போல் வகுப்புகள் நடந்துக்கொண்டிருந்தன.

பெருந்திரளாக வகுப்பறைக்குள் நுழைந்த கூட்டமொன்று அன்று வகுப்புகளை நடத்த தேவையில்லை என்று வலியுறுத்தினர். தேர்வு நெருங்குகிற காரணத்தால் வகுப்புகளை நிறுத்த முடியாது என்று விரிவுரையாளர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வகுப்புகளை விட்டு எல்லோரையும் வெளியேற்றினர். மாணவர்கள் வெளியே வந்து ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு வேன் அங்கு வந்து நின்றது.

'ஏன் டா, எங்களை எதிர்த்து போட்டி போடுவீங்களா? நாங்க எவ்வளோ பணம் செலவழிச்சிருக்கோம் தெரியுமா? எங்களுக்கு *** கட்சி ஆதரவு இருக்கு தெரியுமா? எங்களை வெல்ல முடியுமா?' என்று அறைகூவல் விடுத்தார்கள் வேனில் இருந்து இறங்கியவர்கள்.

சடசடவென அங்கிருந்த எதிரணி மாணவர்களை அள்ளி வண்டியில் அடைக்க துவங்கினார்கள். சிதறிய ஓடிய கூட்டத்தில் யார் அகப்பட்டார்கள், யார் தப்பித்தார்கள் எனத்தெரியவே கொஞ்ச நேரம் பிடித்தது.

கல்லூரியில் இருந்த கிளம்பிய வண்டி நகரத்தின் முக்கியப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கட்சியின் அலுவலகத்தின் முன் நின்றது. முதல் மாடியில் பல மாணவர்கள் ஏற்கனவே குவிக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கபடுவார். அவர்கள் எல்லோரும் வாக்களித்து தான் மாணவர் பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். ஆக, அந்த குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரிக்கும் அனைத்து பிரதிநிதிகளும் அங்கே சகல வசதிகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார்கள். தேர்தல் நாளன்று அங்கிருந்து எல்லோரும் அழைத்துச்செல்லப்பட்டு அந்த குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை பதிவார்கள்.

அப்போது பிடித்துக்கொண்டு வரப்பட்ட கணிப்பொறித்துறை மாணவர்கள் மட்டும் பினைக்கைதிகளை போல நடத்தப்பட்டார்கள். வணிகவியல் துறை மாணவன் ஒருவன் வந்து மிரட்டினான். 'ஏன் டா? நீங்க எல்லாம் படிக்கிற பசங்க தானே? உங்களுக்கு எதுக்கு இந்த வீண் வேலை? என் நண்பன் தான் வேட்பாளனா நிக்கிறான். அவனுக்கு இன்னும் நாலு மாசத்துல திருமணம். அப்போ அழைப்பிதழ்'ல அவன் பெயருக்கு பக்கத்தில் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர்னு போட்டா எப்படி இருக்கும்? அதுக்கு தானே நாங்க எல்லாம் அவனுக்கு ஆதரவா இருக்கோம். இதுக்காக அவன் எவ்வளவு செலவு செய்திருக்கான் தெரியுமா? " என்று அடுக்கிக்கொண்டே போனான். கூறியவன் வேறு யாருமல்ல. அத்தனை நாட்கள் அந்த கணிணித்துறை மாணவர்களோடு ஒன்றாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தவன் தான்.

அன்றைய நாள் அந்த கணிப்பொறித்துறை மாணவர்களுக்கு ஒருவித பயத்துடனும் பதற்றதுடனுமே போய்கொண்டிருந்தது. ஆனால் எல்லோரும் நம் கல்லூரி மாணவர்கள் தானே என்ற ஒரு நம்பிக்கையில் நேரத்தை போக்கிக்கொண்டிருந்தார்கள். மாலை எதிரணியினர் அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசிக்கொண்டு அந்த மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். வழக்கமாக கல்லூரி முடிந்து போவது போல் அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.

அந்த மாணவர்களின் பெற்றோருக்கு நடந்தவை தெரிந்த போது காவல்துறையிடம் சொல்லலாமா என்று கேட்டார்கள். ஆனால் எல்லோரும் தங்கள் கல்லூரி மாணவர்கள் தான், நண்பர்கள் தான். தேர்தல் முடிந்ததும் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி அன்றோடு அந்த நிகழ்வையே அனேகமாய் எல்லோரும் மறந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் கல்லூரியில் தேர்தல் நடக்கிறதா என்பது கூட கேள்விக்குறி தான். இப்போது மிகவும் கண்டிப்புடன் செயல்பட தொடங்கிவிட்டார்கள் என்று அறிகிறேன்.

சட்டக்கல்லூரியில் நடந்து நிகழ்வுக்கு பின்னே, இதை கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த நினைப்பு தள்ளிக்கொண்டே போன ஒரு நாளில், கல்லூரி படத்தையும் பார்க்க நேர்ந்தது. அரசியல்வாதிகளின் அரக்க குணத்தினால் தீக்கிரையாகிப்போன மாணவிகளை நினைத்தால் இன்றும் கூட நெஞ்சம் பதைபதைக்கிறது.

இவையெல்லாவற்றையும் பார்த்துவிட்டு, அந்த தேர்தல் நேரத்தை நினைத்துப் பார்த்தால், அப்போது இல்லாத பயம் இப்போது கொஞ்சம் எட்டிப்பார்கிறது.மாணவர்கள் அரசியலில் இறங்குவது குறித்த கருத்து ஒரு புறம் இருக்கட்டும், மாணவர்களுக்குள் அரசியல் புகலாமா என்பது பெருங்கேள்வி?

மாணவர் தேர்தலிலேயே கடத்தல், ஆள் சேர்ப்பு, பண பலம் போன்றவற்றை நம்புவர்கள் பிந்நாளில் பொது அரசியலுக்கு வந்தால் என்னாவது? மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்? இத்தகைய அரசியல் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்?

25 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

\\"மாணவர்களும் அரசியலும்"\\

இது விரைவில் வரவேண்டும்

நட்புடன் ஜமால் said...

\\அவன் பெயருக்கு பக்கத்தில் இந்தக் கல்லூரியின் மாணவர் பேரவைத் தலைவர்னு போட்டா எப்படி இருக்கும்?\\

அட ...

இதுக்கா இம்புட்டும் ...

நட்புடன் ஜமால் said...

\\மாணவர்களுக்குள் அரசியல் புகலாமா என்பது பெருங்கேள்வி? \\

கூடாது - அவர் மாணவராய் இருக்கும் பொழுது

நட்புடன் ஜமால் said...

\\மாணவர் தேர்தலிலேயே கடத்தல், ஆள் சேர்ப்பு, பண பலம் போன்றவற்றை நம்புவர்கள் பிந்நாளில் பொது அரசியலுக்கு வந்தால் என்னாவது? மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்\\

உதயம் படம் ஞாபகம் வருகிறது ...

Karthik said...

//எங்களுக்கு *** கட்சி ஆதரவு இருக்கு

இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். நம் நாட்டில் இருக்கும் கட்சிகளுக்கு ஓட்டு போடவே பிடிக்கவில்லை. இதில் அவர்களுடைய ஸ்டுடென்ட்ஸ் விங்கில் எல்லாம் எப்படி சேர்கிறார்கள் என்றே புரியவில்லை.

Karthik said...

//அவன் எவ்வளவு செலவு செய்திருக்கான் தெரியுமா?

செலவு பண்ணுவதற்கு இருக்கும் லிமிட்டை மீறுவது சகஜமானது. டெல்லி யுனிவர்சிட்டியின் லிமிட், மாணவர்கள் செலவு செய்வதில் 10ல் ஒரு பகுதிதான்.

யுனிவர்சிட்டியும் மிகவும் குறைவாக லிமிட் பிக்ஸ் பண்ணக் கூடாதில்லையா?

Karthik said...

//இப்போதெல்லாம் எங்கள் கல்லூரியில் தேர்தல் நடக்கிறதா என்பது கூட கேள்விக்குறி தான்.

என்ன கொடுமை பிரேம் இது?
:(

Karthik said...

//மாணவர்களுக்குள் அரசியல் புகலாமா என்பது பெருங்கேள்வி?

//மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்?

//இத்தகைய அரசியல் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்?

தெரியவில்லை. நிறைய யோசிக்க வேண்டும்.

Karthik said...

Hats off Prem. Great post.
:)

நவநீதன் said...

அனுபவத்தை பதித்து, அதன் மூலம் நல்ல சிந்தனைகளை தூண்டி இருக்கிறீர்கள்...

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜமால் :)

//கூடாது - அவர் மாணவராய் இருக்கும் பொழுது//

நான் தப்பா எழுதிட்டேன்னு நினைக்கிறேன். மாணவரின் மனதுக்குள் என்று நினைக்க தோன்றுகிறதோ? மாணவர்களுக்கு இடையே என்று இருக்க வேண்டும்

ச.பிரேம்குமார் said...

//அட ...

இதுக்கா இம்புட்டும் ...//

அட ஆமாங்க, அதை நினைச்சு சிரிக்கிறதா அழறதான்னே தெரியல அப்போ :)

ராம்.CM said...

என்னிடம் கேட்டால் மாணவர்களுக்கு எதுக்கு அரசியல் என்பேன். அனுபவ பகிர்வு அருமை.!


ப்ரேம்.. நான் அப்பாவாகிவிட்டேன்.இன்று எனக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு எழுதியுள்ளீர்கள். நன்றாக உள்ளது.

ச.பிரேம்குமார் said...

கார்த்திக், இப்போதைய மாணவர்னான உன்னிடமிருந்து இந்தப் பதிவுக்கு கட்டாயம் பின்னூட்டம் வர வேண்டும் என்று நினைத்தேன். மறுமொழிகள் பல சொன்னதற்கு மிக்க நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//செலவு பண்ணுவதற்கு இருக்கும் லிமிட்டை மீறுவது சகஜமானது. டெல்லி யுனிவர்சிட்டியின் லிமிட், மாணவர்கள் செலவு செய்வதில் 10ல் ஒரு பகுதிதான்.

யுனிவர்சிட்டியும் மிகவும் குறைவாக லிமிட் பிக்ஸ் பண்ணக் கூடாதில்லையா?
//

என் கேள்வி 'பட்ஜெட்' என்பதே கல்லூரித் தேர்தலில் தேவையா? அங்கே எதற்கு ஆடம்பரம்?

Why do u need a budget at all to canvas amongst your friends and your co-students????

Anonymous said...

\\மாணவர் தேர்தலிலேயே கடத்தல், ஆள் சேர்ப்பு, பண பலம் போன்றவற்றை நம்புவர்கள் பிந்நாளில் பொது அரசியலுக்கு வந்தால் என்னாவது? மாணவப் பருவத்திலேயே இப்படிப்பட்ட செயல்களில் இவர்களை ஈடுபட செய்தது எது? தூண்டியது யார்? இத்தகைய அரசியல் சூழலுக்குள் தங்கள் பிள்ளைகள் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று எந்த பெற்றோர் தான் விரும்புவார்கள்?\\
விரும்பவே மாட்டாங்க,,,,,

ச.பிரேம்குமார் said...

//அனுபவத்தை பதித்து, அதன் மூலம் நல்ல சிந்தனைகளை தூண்டி இருக்கிறீர்கள்...//

நன்றி நவநீதன். நான் மட்டும் இதப்பத்தி யோசிச்சுக்கிட்டே இருந்தா போதுமா? அதான் உங்க கிட்ட புலம்பித்தள்ளிட்டேன்

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி ஆனந்தன்

கோபால் said...

Why do u need a budget at all to canvas amongst your friends and your co-students????

What's this?

கோட்டரும் கோழிபிரியாணியும் வாங்கி தராம எந்த நண்பன் ஓட்டு போடுவான்?

ச.பிரேம்குமார் said...

//என்னிடம் கேட்டால் மாணவர்களுக்கு எதுக்கு அரசியல் என்பேன். அனுபவ பகிர்வு அருமை.!//

ராம், அப்படி சொல்லிவிட முடியாது. அப்படி இருந்துவிட்டால் படித்த இளைஞர்கள் என்றைக்கு அரசியலில் வர முடியும் ?

ஆனால், மாணவர்கள் மத்தியில் அரசியல் வரக்கூடாது

ச.பிரேம்குமார் said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு எழுதியுள்ளீர்கள். நன்றாக உள்ளது.
//
பாண்டியன், நீங்கள் பேராசிரியர் என்பதால் கட்டாயம் உங்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் பரிச்சயமாயிருக்குமே...

Karthik said...

//Why do u need a budget at all to canvas amongst your friends and your co-students????

i must admit, since im a freshman, i haven't got any personal experience in student elections.

but let's be practical.

student elections with party backing is a power game. you need to spend to sell yourself.

Karthik said...

//கோட்டரும் கோழிபிரியாணியும் வாங்கி தராம எந்த நண்பன் ஓட்டு போடுவான்?

point!

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேம்,
நான் வேலை பார்க்கக்கூடிய தனியார் பொறியியல் கல்லூரிகளில் இது போன்ற தேர்தல்கள் நடைபெறுவதில்லை. சட்டக்கலூரியில் நடந்தது போல சாதிப் பிரச்சினைகளும் ஏற்பட்டது கிடையாது. ஆனால் இந்த மாணவர்களிடையே ஏதேனும் சண்டை வருமாயின், அது பெண்களாலேயே உண்டாகும். அது தவிர, கல்லூரி நிர்வாகத்துக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அரசியல் சார்ந்த பிரச்சினைகள் இங்கே கிடையாது. என்னைப் பொறித்த வரை, இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் அரசியலில் தலைமை ஏற்றால் ஒழிய, நாடு உருப்படாது. ஆனால் அது நியாயமான, உண்மையான, ஆரோக்கியமான ஒன்றாக இருப்பது அவசியம்.