அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
வீட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் புத்தாண்டு கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது எப்படியெல்லாம் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறேன் என்று எனக்குள்ளேயே அசைப்போட்டு கொண்டேன்.
பள்ளிப்படிப்பு முடியும் வரை தொலைக்காட்சியில் புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்த்துக்கொண்டிருப்போம். பனிரெண்டு மணி அடித்தவுடன் வீட்டில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லிவிட்டு உறங்கிவிடுவோம்.
கல்லூரிக்குள் நுழைந்ததும் புத்தாயிரம் ஆண்டு பிறக்க ஆயத்தமானது. செப்டம்பரிலேயே நண்பன் ஒருவன் ஒரு ஆலோசனை சொன்னான். சரியாக 1999 செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து அந்த திட்டத்தை செயல்படுத்தினோம். ஆம், கிடைக்கும் காசிலிருந்து தினம் 50 பைசாவை சேமிக்கத் தொடங்கினோம். சரியாக நூறு நாட்களில், டிசம்பர் 31ம் தேதி கையில் 50 ரூபாய் இருக்கும், அதை வைத்து புத்தாண்டை கோகாகலமாகக் கொண்டாடலாம் என்று திட்டம்.
ஐம்பது ரூபாயில் என்ன கோகாகலம் என்று கேட்கிறீர்களா? மாலை 7 மணி வாக்கில் கடற்கரைக்கு கிளம்பியிருப்போம் என்று நினைக்கிறேன். புத்தாயிரம் ஆண்டு என்பதால் புதுவை கடற்கரை வீதியில் அரசு சார்பில் ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு நடன நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்துக்கொண்டிருந்தன. அவ்வப்போது கொஞ்சம் கலை விருந்து, பசிக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் பானிபூரி, மசாலா பூரி. அடுத்து சுற்றில் கோன் ஐஸ்க்ரீம் என ஐம்பது ரூபாய் தீருமட்டும் நன்றாக உண்டு களித்தோம். காணும் நண்பர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு, சரியாக பனிரெண்டு மணிக்கு நண்பர்களிடமிருந்து விடைபெற்று வீடு சேர்ந்தோம். மறக்க முடியாது ஒரு அற்புதமான புத்தாண்டு கொண்டாட்டம் அது
அடுத்து சில ஆண்டுகளில் எங்கள் பட்ஜெட் கொஞ்சம் உயர்ந்தது. ஒரு பிரபல உணவகம் புத்தாண்டுக்காக நூறு ரூபாய்க்கு இசையுடன் கூடிய அளவில்லா விருந்து அளித்துக்கொண்டிருந்தது. அப்படி அருமையான பாடல்களோடும் நல்ல உணவோடும் புத்தாண்டிற்கு முந்தைய சில இரவுகள் கடந்திருக்கின்றன.
பட்டமேற்படிப்பு எல்லாம் முடித்து 2004 வருடம் அனைவருக்கும் வேலைக்கு சென்றுவிட்டோம். 2005ஐ வரவேற்க ஆவலாய் காத்திருந்தோம். ஒரு மாதத்திற்கு முன்பே அலுவலகத்தில் விடுப்பு கூட சொல்லியாயிற்று. ஆனால் 2004 ஆண்டின் பெருந்துயராக ஆழிப்பேரலையின் ஆட்டத்தால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. அந்த புத்தாண்டை யாருமே அனேகமாய் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அதற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் படியாக எந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
சென்ற வருடம் ஒரு முக்கிய அலுவல் காரணமாக புத்தாண்டை மடிக்கணினியில் வேலை செய்து கொண்டே கழிக்க வேண்டியதாகிவிட்டது. இம்முறை பழையபடி தொலைக்காட்சியுடனும் வீட்டாருடனும் இனிதாய் கழிந்தது.
காலம் உருண்டோட நண்பர்கள் எல்லாம் தொலைவாகி விட்டார்கள்.மீண்டும் அவர்களுடன் ஒரு அருமையான புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஆவலுடன் 2009ல் பயணிக்க தொடங்குகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
1 January 2009
புத்தாண்டு நினைவலைகள்
எழுத்து வகை: நினைவலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துக்கள்:
nice post.
:)
wyhny. :)
கார்த்திக், படு வேகம் போ :)
அப்புறம் அதென்ன wyhny???? ;)
\\காலம் உருண்டோட நண்பர்கள் எல்லாம் தொலைவாகி விட்டார்கள்.மீண்டும் அவர்களுடன் ஒரு அருமையான புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் ஆவலுடன் 2009ல் பயணிக்க தொடங்குகிறேன்.\\
நாங்களும் உங்ககூடவே பயனிக்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த வருடம் (நேற்று இரவு) ஒரு முக்கிய அலுவல் காரணமாக அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தேன்..
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் பிரேம்குமார்
//ஐம்பது ரூபாயில் என்ன கோகாகலம் என்று கேட்கிறீர்களா? //
:)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களுடைய கனவுகள் எல்லாம் இந்த வருடத்தில் நனவாகட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//நாங்களும் உங்ககூடவே பயனிக்கிறோம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி கவின். உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
//திகழ்மிளிர் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
//
நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மாப்பி ;))
பிரேம்..
தாங்களும் மதுரை என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. "உங்களில் ஒருவன்".. பார்த்தீங்களா.. அது தான் ஊர்காரங்கன்னு ப்ரூவ் பண்ணிட்டோம்ல..:)
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
n ice post.
happy new year....
புத்தாண்டு வாழ்த்துகள் ப்ரேம்ஜி
ரொம்ப லேட்டா சொல்லிட்டேனோ
புத்தாண்டு வாழ்த்துகள்
Post a Comment