17 February 2009

வழக்கொழிந்த சொற்கள்

//மேவி என்னை ஒரு தொடர்பதிவுக்கு ரொம்ப நாள் முன்னாடி கூப்பிட்டிருந்தார். இப்போதான் டைம் கிடைத்தது. //இதை அப்படியே வழிமொழியலாம். கார்த்திக் இந்தப் பதிவை எழுதச்சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இப்போது தான் எழுத ஆரம்பிக்கிறேன்.வழக்கொழிந்த சொற்களின் பட்டியலை எழுத ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே தான் போகும். மிக இயல்பாக பயன்படுத்தும் பல வார்த்தைகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. நிறைய சொற்களில் உருமாறிவிட்டன, அல்லது அவற்றுக்கு நிகரான வேற்று மொழி சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகவே வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள் எவை தெரியுமா? (தொடரை ஆரம்பித்த உள்ளம் என்னை மன்னிக்கட்டும் ;-))அமைதி - அனேக நாடுகளில் மன்னராட்சி முடிந்து மக்களாட்சி தொடங்கியாயிற்று. ஆனால் இன்னும் போர், போராட்டங்கள் போன்றவை முடிந்தபாடில்லைசகிப்புதன்மை - இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கூட அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடலாம். குடும்பங்களில் தொடங்கி பொதுயிடங்கள் வரை எங்கேயும் யாருக்கும் சகிப்புதன்மை எட்டிப்பார்ப்பதாய் தோன்றவில்லை. தேவையில்லாத பலவற்றை சகித்துக்கொள்கிறோம் அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறோம் :(இளைய தலைமுறையினர் யாராவது தோல்வியை சகித்து கொள்வார்களா?? கிடையாது. ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று தெரிந்தாலும், அவர்களால் தோல்வியை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியாது.விட்டுக்கொடுத்தல் - அப்படின்னா என்று கேட்கிறீர்ளா? எல்லோருக்கும் எல்லாமும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். ஒரு சின்ன விசயத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாத மனம். அப்படி விட்டுக்கொடுத்தால் கூட சொல்லிக்காட்டும் சுபாவம்.இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்.அதே போல் வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ

இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்க விரும்பும் இருவர் :
ராம் CM
கார்த்திகைப் பாண்டியன்

28 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

\\மேவி என்னை ஒரு தொடர்பதிவுக்கு ரொம்ப நாள் முன்னாடி கூப்பிட்டிருந்தார். இப்போதான் டைம் கிடைத்தது\\

நானும் தான் கீறேன்

எப்படியும் முயற்சித்திட வேண்டியதுதான்

நட்புடன் ஜமால் said...

\\அதே போல் வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ\\

சரிதான்

சூழ்ச்சியை ஏய்த்து வறுமையுடன் போர் செய்யவேண்டும்.

திகழ்மிளிர் said...

அமைதி,விட்டுக்கொடுத்தல்,போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ

சரியாகச் சொன்னீர்கள்

பாண்டித்துரை said...

///வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை////


அட இதுவேற இருக்கா.

என்னையும்தான் நண்பர் அழைத்தார்.

சந்தனமுல்லை said...

நல்லா சொல்லியிருக்கீங்க பிரேம்! வழக்கத்திற்கு வரவேண்டிய சொற்களும், வழக்கொழிய வேண்டிய சொற்களும்..நல்லத் தொகுப்பு!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாங்க பிரேம்.. கார்த்தி ஒரு தினுசில் ஆரம்பித்து வைக்க, நீங்க அதை வேற பக்கம் கொண்டு வந்துட்டீங்க.. ஆனா ரொம்ப நல்லா சிந்தனை.. அதோட இதைத் தொடர என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்.. முயற்சி பண்றேன்.. சீக்கிரம் எழுதிடுறேன்..

நவநீதன் said...

அமைதி, சகிப்புதன்மை , விட்டுக்கொடுத்தல் இவை எல்லாம் வாய் சொற்களில் பயன்படுத்தப் பட்டாலும், மனதால் உண்மையாக பயன்படுத்தப் பட வில்லை என்றால் வழக்கொழிந்து போனவை தான்....!
நல்ல ஒரு சிந்தனைக்கு வித்திட்டிருக்கிறீர்கள்....!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஆதவா said...

அதே போல் வழக்கொழிய வேண்டிய வார்த்தைகளும் நிறைய இருக்கின்றன. போர், ஏய்ப்பு, சூழ்ச்சி, வறுமை....... இன்னும் எத்தனையோ

ஹா... உண்மைதான்...  

நல்ல தமிழ் பயிற்சி அளிக்கும் தொடர்... வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு மாப்பி ;)

பிரேம்குமார் said...

//சூழ்ச்சியை ஏய்த்து வறுமையுடன் போர் செய்யவேண்டும்.//

கலக்குறீங்க ஜமால் :)

நீங்களும் சீக்கிரம் எழுதுங்க

பிரேம்குமார் said...

நன்றி திகழ்மிளிர் :)

பிரேம்குமார் said...

//அட இதுவேற இருக்கா. //

இந்த தொடர் விளையாட்டோட தலைப்ப பார்த்துமே எனக்கு இந்த எண்ணம் தான் பாண்டி வந்தது. அதனால் தான் இப்படி எழுதினேன் :)

//என்னையும்தான் நண்பர் அழைத்தார்.//

ம்ம்.. சீக்கிரம் எழுதுங்கள் :)

பிரேம்குமார் said...

நன்றி முல்லை... ஏதோ என்னால முடிஞ்சது :)

பிரேம்குமார் said...

//நீங்க அதை வேற பக்கம் கொண்டு வந்துட்டீங்க.. ஆனா ரொம்ப நல்லா சிந்தனை.. அதோட இதைத் தொடர என்னையும் கூப்பிட்டு இருக்கீங்க.. ரொம்ப சந்தோசம்.. முயற்சி பண்றேன்.. சீக்கிரம் எழுதிடுறேன்//

அதென்னமோ தலைப்ப பார்த்ததும் இப்படி எழுதனும்னு தோனுச்சு பாண்டியன். நீங்க வழக்கமா எழுதுற வழக்கொழிந்த வார்த்தைகள் பத்தியே எழுதுங்க. நம்ம மதுரை பாசையில நாலு வார்த்தை எடுத்து விடுங்க பார்ப்போம்

பிரேம்குமார் said...

// இவை எல்லாம் வாய் சொற்களில் பயன்படுத்தப் பட்டாலும், மனதால் உண்மையாக பயன்படுத்தப் பட வில்லை என்றால் வழக்கொழிந்து //

அதே தாங்க நவநீதன். வருகைக்கு மிக்க நன்றி :)

பிரேம்குமார் said...

//நல்ல தமிழ் பயிற்சி அளிக்கும் தொடர்... வாழ்த்துக்கள்//

மிகச்சரி ஆதவா. (நான் தான் கொஞ்சம் வேறு திசையில எடுத்துட்டுப் போயிட்டேன்)

பிரேம்குமார் said...

நன்றி மாப்பி :)

தாரணி பிரியா said...

நல்லா வித்தியாசமாதான் யோசிச்சு இருக்கிங்க :). நல்ல தொகுப்பு பிரேம்

Karthik said...

//கார்த்திக் இந்தப் பதிவை எழுதச்சொல்லி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.

i didn't know the circumstances then, bro. anyway, glad u did write. :)

nice thought n post. :))

ராமலக்ஷ்மி said...

வழக்கமாய் எல்லோரும் தேடி யோசித்து எழுதும் வழக்கொழிந்த சொற்களாக இல்லாமல் என்ன தேடினாலும் இல்லாத.. ஏன் வழக்கொழிந்தன என யோசிக்க வைக்கிற சொற்கள். ஆகையாலேயே அனைவருக்கும் பயன் படும் விதமாய் யூத் விகடனில் யூஸ்ஃபுல் ப்ளாக்களில் ஒன்றாக தேர்வாகியிருக்கிறீர்கள். என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

பிரேம்குமார் said...

மிக்க நன்றி தாரணி பிரியா :)

பிரேம்குமார் said...

கார்த்திக், இந்தப் பதிவை எழுத சொல்லியதற்கு உனக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் :)

பிரேம்குமார் said...

ராமலஷ்மி, மிக்க நன்றி...

நீங்கள் சொல்லித்தான் யூத்புல் விகடனே பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி :)

மீண்டும் நன்றி :)

கார்த்திக் said...

என்னத்த சொல்ல

நடத்துங்க நடத்துங்க

பிரேம்குமார் said...

ஏன் கார்த்திக்? என்னாச்சு????? :)

Anonymous said...

பதிவு நல்ல இருக்குங்கண்ணா... இடுக்கையை குறைச்சிட்டிங்க ரொம்ப பிஸிபோல???

A N A N T H E N said...

//ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உண்மையாகவே வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள் எவை தெரியுமா?//நீங்கள் பட்டியல் போட்ட சொற்கள், அதன் பயன்பாடு: உண்மைதான்//விட்டுக்கொடுத்தல் - அப்படின்னா என்று கேட்கிறீர்ளா?//

ஆமா, அப்படின்னா என்னா? இன்னும் தெளிவா சொன்னா நல்லாருக்கும்!