9 April 2009

கோவில் யானை
கோவிலில்
எப்போதும் பார்க்க முடிகிறது
அந்த யானையை

காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை

கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது

தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்

முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?

நன்றி : நவீன விருட்சம்

53 க‌ருத்துக்க‌ள்:

பாண்டித்துரை said...

வாழ்த்துகள்

பிரேம்குமார் said...

நன்றி கவிஞரே :)

ஆ.முத்துராமலிங்கம் said...

//காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை//

//கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது//

இருவரிகளும் நம்மை சங்கடத்துக்குளாக்கின்றன.

//முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை//

பதில் சொல்ல முடியா கேள்வி,
வாழ்த்துகள் பிரேம்குமார்.

கார்த்திகைப் பாண்டியன் said...

தன் சுதந்திரத்தை இழந்து பிழைப்பு நடத்தப் பழக்கப்படும் யானைக்கும், பணத்தை தேடி தன் சுயத்தை இழக்கும் மனிதனுக்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா நண்பா? சந்தோஷத்தை விற்றுத்தான் பிழைக்க வேண்டும் என்றால் அந்த வாழ்வு எதற்கு? நல்ல பதிவு நண்பா..

psychoteller said...

அருமை நண்பரே
ஒரு வாயில்லா ஜீவனின் உணர்வை பற்றி என்னை யோசிக்க வைத்தது இந்த கவிதை..

நட்புடன்
சுரேஷ் குமார்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு மாப்பி ;))

\\\என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?
\\

அது பெண் யானையாக இருந்தால் ஏய் நீ ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்லியிருக்கும் ;-)

பிரேம்குமார் said...

//பதில் சொல்ல முடியா கேள்வி,//

அந்த யானையிடம் கேள்விகளே இல்லாமல் கூட இருக்கலாம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்து

பிரேம்குமார் said...

கவிதை குறித்தான உங்க பார்வையும் நல்லா இருக்கு பாண்டியன். நன்றி

பிரேம்குமார் said...

//ஒரு வாயில்லா ஜீவனின் உணர்வை பற்றி என்னை யோசிக்க வைத்தது இந்த கவிதை//

நன்றி சுரேஷ்

பிரேம்குமார் said...

//அது பெண் யானையாக இருந்தால் ஏய் நீ ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்லியிருக்கும் ;-)//

மாப்பி, அந்த யானையை உன்ன மாதிரியே நினைச்சுட்டீயா? ;)

துளசி கோபால் said...

அருமை.

நம்ம கோபி சொல்லித்தான் தெரிஞ்சது இங்கே ஆனை அசைந்தாடுதுன்னு:-))))

ஆதவா said...

வித்தியாசமாக இருக்கிறது.
என் கவிதையைப் படிப்பதைப் போன்ற ஒரு உணர்வு (மன்னிக்கவும்)

சில கேள்விகளுக்கு விடையில்லை!!!

வாழ்த்துகள்

சந்தனமுல்லை said...

நல்ல கவிதை..கற்பனையுங்கூட! :-)

ராம்.CM said...

எத்தனையோ சந்தர்ப்பங்களில் வன விலங்குகள் இப்படிதான் வதைக்கப்படுகின்றன....

ராம்.CM said...

எத்தனையோ சந்தர்ப்பங்களில் வன விலங்குகள் இப்படிதான் வதைக்கப்படுகின்றன....

Anonymous said...

:)

புதியவன் said...

//முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?//

இதுவரை விடை சொல்லப் படாத கேள்வி...

வித்தியாசமான சிந்தனையில்
கவிதை அருமை...

டக்ளஸ்....... said...

அடிமை வாழ்வு ...வாழ்வே அல்ல‌

SASee said...

யாணையின் இயல்பை
கவிதையாக்கி
யோசிக்க வைத்த
பிரேம் குமார் அவர்களே....
நன்றி

குடந்தைஅன்புமணி said...

யானையை எல்லோரும் வேடிக்கை பொருளாய் பார்க்கும்போது, அதை பாடுபொருளாய் மாற்றி, அதன் உண்மை நிலைகளை உணர்த்துகிறது இக்கவிதை. வாழ்த்துகள் நண்பரே!

Karthik said...

pinreenga prem. :)

superb........! :)

சொல்லரசன் said...

//காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை//

பலனை எதிர்பாரமல் கடமையை செய்யும் பாதி கடவுள்.
நல்ல கவிதை பிரேம்

பிரேம்குமார் said...

//நம்ம கோபி சொல்லித்தான் தெரிஞ்சது இங்கே ஆனை அசைந்தாடுதுன்னு:-))))//

ஹி ஹி ஹி... வருகைக்கு நன்றி :)

பிரேம்குமார் said...

//என் கவிதையைப் படிப்பதைப் போன்ற ஒரு உணர்வு //

ஓ! உங்க பாணியில இருக்கா? தெளிவா சொல்லிடுங்க... மக்கள் நான் உங்க கவிதைய நகலெடுத்தெடுத்தா நினைச்சுக்க போறாங்க :)

பிரேம்குமார் said...

சந்தனமுல்லை, ராம், கவின், புதியவன்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Suresh said...

வாழ்த்துகள் அருமை தோழரே ... :-) தொடர்ந்து பதியுங்கள் நன்பா

//கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது/

அருமை தலைவா ...

//தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்/

அதன் வலியை நச்சுனு சொல்லிருக்கிங்க

பிரியமுடன் பிரபு said...

வித்தியாசமா இருக்கு

பிரியமுடன் பிரபு said...

///
முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?
///

??????

ஹேமா said...

///
முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?
///
சுதந்திரம் இல்லா விலங்கு வாழ்வு என்று மனதால் அலுத்திருக்கும்.

கதிரவன் said...

நல்ல கற்பனை பிரேம் ! வாழ்த்துக்கள்

கே.ரவிஷங்கர் said...

பிரேம்குமார்,

நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்!

நான் ஒரு யானை கவிதைஎழுதினேன்.
படித்துக் கருத்துச்சொல்லவும்.

THURSDAY, JANUARY 1, 2009
கோயில் யானை - - ஒரு கவிதை

http://raviaditya.blogspot.com/search/label/கவிதை

Saravana Kumar MSK said...

என்ன சொல்றதுனே தெரியலன்னா.. கலக்கல்.
:)

Saravana Kumar MSK said...

//நன்றி : நவீன விருட்சம்//

பெரிய ஆளு பிரேம் அண்ணாவிற்கு, தம்பியின் வாழ்த்துக்கள்.

Rock..

ரமணன்... said...

கடைசி வரிகள் அருமை :)

மேடேஸ்வரன் said...

இதைத்தான் சொல்லியிருக்கும்...

உருவத்தால் கடுகெனினும்
தன் வாழ்க்கை
தான் வாழும்
சிறு எறும்பாய் எடுத்திருக்கலாம்
பிறப்பு.

பிரேம்குமார் said...

சுரேஷ், பிரபு, ஹேமா, கதிரவன், ரவி, மேடேஸ்வரன், ரமணன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

பிரேம்குமார் said...

சரவணா, நீ எனக்கு தம்பி தான். ஆனா வயசுல மட்டுமே

கவிதை படைப்பதில் யார் சிறந்தவர்னு ஊருக்கு தெரியும் ராசா :)

நரேஷ் said...

கவிதை அருமை பிரேம்!!

ஒரு வேளை அவர்களை முகாமிற்கு அனுப்பி வைத்தவர்களைப் பற்றி பேசலாம்...

Poornima Saravana kumar said...

கோபிநாத் said...
நல்லாயிருக்கு மாப்பி ;))

\\\என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?
\\

அது பெண் யானையாக இருந்தால் ஏய் நீ ரொம்ப அழகாக இருக்கேன்னு சொல்லியிருக்கும் ;-)

//

அட! அட!! அட!!!

Poornima Saravana kumar said...

கவிதை நல்லா இருக்குங்க.... அது என்ன சொல்லும்னு தெரியலை ஆனால் எனக்கு சின்ன வயசில் பயந்து கொண்டே கோவில் யானையிடம் சென்று என் கை அதன் மேல் படாமல் காசு கொடுத்தவுடன் அது தன் தும்பிக்கையை என் தலை மேல் வைக்க நான் அலறி ஓடியது தான் நினைவுக்கு வருகிறது.....

பழைய நினைவுகளை பகிர வைத்த உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும் நன்றி:)

MayVee said...

chance illai...
semaya irukku..
athuvum last lines nachu....

ஜி said...

Ippa varra ellaame etho onnu release aanathaathaan irukkuthu.. vaazththukkal thala... kavithai nandru... aana oru doubtu... Muhamla santhikira ellaa yaanaiyum ithe maathiri oru flashbackodathaane vanthirukkum.. so.. intha yaanaikku inferiority complex vanthirukaathulla?? kaattu yaanaiya paakumpothu thaan antha kadaisi question poruththamaa irukum??

மகேஷ் said...

அருமையாய் இருக்குங்க..!

ஜி said...

//Ippa varra ellaame etho onnu release aanathaathaan irukkuthu.. vaazththukkal thala... //

spelling mistakes.. ippadi irunthirukanum :))

Ippa varra ellaa kavithaiyum etho oru magazinela release aanathaave irukkuthe... vaazththukkal thala...

தமிழ்நெஞ்சம் said...

நல்லா யோசித்திருக்கிறீர்கள். நன்றி

பிரேம்குமார் said...

//பழைய நினைவுகளை பகிர வைத்த உங்களுக்கும் உங்கள் கவிதைக்கும் நன்றி:)//

உங்களுக்கும் நன்றி. பூர்ணிமா சரவணன் என்று எனக்கு ஒரு சகோதரி இருக்கிறார். ஒவ்வொரு முறை நீங்கள் பின்னூட்டமிடும் போது அவரது நினைவு தான் வந்து போகிறது. அதற்கு உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி :)

பிரேம்குமார் said...

மிக்க நன்றி மேவீ :)

பிரேம்குமார் said...

ஜியா, நீங்கள் சொல்வது சரிதான். முகாமில் காட்டு யானைகளுடன் மற்ற யானைகளை பழகவிடுவதாக படித்ததாய் தான் நினைவு.

மேலும் இன்னொரு கோவில் யானையை பார்த்தாலும், நீங்கள் சொல்வது போல் தாழ்வு மனப்பான்மை வராது. ஆனால் அதுவா அதன் உண்மையான அடையாளம்?

பிரேம்குமார் said...

ஆகா, தமிழ்மண நட்சத்திரம் தமிழ்நெஞ்சமே ... நன்றி :)

Karthik said...

me the 50

(sorry ilaikiyavathis!)

சேரல் said...

//முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?/

கடைசி வரிகளில் அசத்தி விட்டீர்கள்

-ப்ரியமுடன்
சேரல்

ganesh said...

எப்படி இருக்கீங்க ப்ரேம்?.......அருமையான கவிதை.....ஆனாலும் அந்த யானை இன்னொரு யானையை பார்க்கும் போது
என்ன செய்யும்?... யோசிச்சு பார்த்தேன்?....எனக்கு பதிலே தெரியல.....பதிலை சொல்லிடுங்க....உங்க கவிதை படிக்கும் போது எங்க ஊர்(தஞ்சாவூர்) பெரிய கோயில் யானை நினைப்பு வருது....பாவம் ல?

ரமணன்... said...

wow!!! Gud 1 :)