17 April 2009

ஆ.வி.யில் கவிதை எழுதிய பாவி

சமீபத்தில் மென்பொருள் துறையினர் பற்றி செல்வேந்திரன் ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் கருத்தில் உண்மை இருந்தாலும், அதையே ஒரு மென்பொருள் துறை சார்ந்தவன் எழுதியிருந்தால் கைகொட்டி சிரித்திருப்பார்கள். சுய பச்சாதாபத்தில் பிதற்றுகிறோம் என்று கிழித்திருப்பார்கள். கவிதையில் செல்வா சற்று மிகைப்படுத்தியிருந்தாலும், அவருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும் “செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”

ஆனாலும் ஒரு கொலவெறியோட அதற்கு ஒருவர் எதிர்கவுஜ எழுதி விகடனில் எழுதியிருக்கிறார். (அப்போ விகடனில் கவிதை எழுதுவது சுலபம் தானா? நாமளும் முயல வேண்டியதுதான்)

அவர கேக்கனும் நினைக்கிற கேள்வி, ‘ஏஞ்சாமி, எத்தன நாள் தான் அரச்ச மாவையே அரைப்பீங்க? புதுசா ஏதாச்சும் சொல்லுங்களேன், அப்புறம், பேனா கையில் கிடைச்சா எது வேணும்னாலும் எழுதலாமா?’ ...எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(பாசமிகு எதிர்வினையாளரு)க்கு வாழ்த்துகள்

(சும்மா ஒரு எதுகைக்காக தலைப்பு வச்சாச்சு. அதையும் எப்படியோ சமாளிச்சாச்சு)

***

பின்நவீனத்துவம் என்றாலே கொஞ்சம் பீதி தான் எனக்கு. வாசிப்பனுவத்தின் குறைபாடாக கூட இருக்கலாம். அப்படித்தான் பெரும்பாலும் இலக்குவண் ராசாவின் கவிதைகளை புறந்தள்ளி இருக்கிறேன். ஆனால் நேற்று அவர் தளத்தில் படித்த கவிதை வெகுவாய் கவர்ந்தது. இலக்குவண், நல்ல வேலை(ளை)யாக அதை கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜில் போட்டிருந்தாய்.


வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

முழுவதும் படிக்க இலக்குவண் வலைப்பூவிற்கு
செல்க


***

ஒரு நாள் வானவில் வீதி கார்த்திக்கும் நானும் காதல் கவிதைகளை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே காதலை மிகைப்படுத்திதான் எழுதுறாங்கன்னு சொன்னான். சரி நீ தான் ஒரு காதல் கவிதை எழுதுறதுன்னு சொன்னதற்கு கவிதைக்கும் எனக்கும் இப்போதைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னான். சரி ஒரு கதை எழுது என்று சொல்லிகிட்டு இருந்தேன். தம்பி இப்போ அட்டகாசமா ஒரு கதை எழுதியிருக்கான், “தனிமையின் விலை”. எத்தனை இளமை, எத்தனை துள்ளல் ?!

அவன் எழுத்துகளை ஏகப்பட்ட மக்கள் படிக்கிறார்கள் என்பதாலும், அவன் எழுத்துக்கு அனேகம் ரசிகர்கள் (அதாவது ரசிகைகள்) இருக்கிறார்கள் என்பதாலும், இது ஒரு விளம்பரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வேறென்ன ஒரு பொறாமை தான் :-)

கார்த்திக், சத்தியமா சொல்றேன். உன்னோட எழுத்துக்களை பார்த்து பொறாமையா இருக்கு. You make me feel old dude ;-)

42 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\அவருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும் “செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”
\\

ம்ம்ம்...புரியுமாதிரி பேசி கடைசியில குழப்பிட்ட..நல்லாயிரு மாப்பி ;)

Karthik said...

//எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(பாசமிகு எதிர்வினையாளரு)க்கு வாழ்த்துகள்
(சும்மா ஒரு எதுகைக்காக தலைப்பு வச்சாச்சு. அதையும் எப்படியோ சமாளிச்சாச்சு)

mudiyala! america la over time yosikireengalo???
;)

Unknown said...

செல்வா அண்ணா கவிதை நானும் படிச்சேன்.. :)) எதிர் கவிதை படிக்கலியே.. :((

கவிதை வெகு ஆழம்.. அழகு :))

ம்ம்ம் கார்த்திக் நிஜமாவே சூப்பர் :)) விளம்பரம் இல்லன்னு கண்டுபிடிச்சிட்டேன் அண்ணா ;)))

Karthik said...

//வேறென்ன ஒரு பொறாமை தான் :-)

bro, i do not deserve this. anyway thankieeees a lot. :)

//அனேகம் ரசிகர்கள் (அதாவது ரசிகைகள்)

hmm, ippa puriyuthu! ungalai atuththu neril eppa paarthalaum ....

Raju said...

இங்க என்னா நடக்குது பிரேம் அண்ணே..
தயவு செஞ்சு விளக்கமா சொல்லுங்க..!
மண்டை காயுதூப்பா..

Raju said...

வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்.

ச.பிரேம்குமார் said...

கோபி, இன்னுமா புரியலை..... இந்த வீழ்ச்சி எழுச்சி (பொருளாதாரத்தில்) எல்லாம் சகஜம்னு சொல்ல வந்தேன் மாப்பி

ச.பிரேம்குமார் said...

//விளம்பரம் இல்லன்னு கண்டுபிடிச்சிட்டேன் அண்ணா ;)))
//

நீ தான்மா சமத்து தங்கச்சி

ச.பிரேம்குமார் said...

டக்ளஸ் அண்ணே, கொழப்புறது நீங்களா நானா?

யார் அந்த வேதவல்லி? யார் அந்த ராவணன்??

ஒரு வேளை நீங்க அந்த பதிவ படிச்சிட்டு வந்து இங்க பின்னூட்டம் போட்டுட்டீங்களோ???

ஆ.சுதா said...

கவிதை குறித்து விவாதமான பதிவாக தெறிகின்றது.
இலக்குவண், கார்த்திக், இருவரையும் வாசிக்கின்றேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு கார்த்திக்கின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும்.. அப்புறம் செல்வேந்தரனின் கவிதை படித்தேன்.. எதிர் கவிதையை பதிவுகளில்தான் படித்தேன்.. எழுதியவர் ரொம்பவே exaagarate செய்து இருக்கிறார்..

anbudan vaalu said...

பிரேம்,எனக்கு ஒன்னுமே புரியல...அந்த இரண்டு கவிதைகளையும் படிக்க ஏதாவது link இருந்தால் தரவும்.....

விழியன் said...

இலக்குவண் கவிதையை பற்றிய பேசற ப்ரேம்??

ச.பிரேம்குமார் said...

வருகைக்கு நன்றி முத்து. மற்ற பதிவுகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ச.பிரேம்குமார் said...

வாங்க பாண்டியன், நீங்க சொன்னது போல குற்றச்சாட்டை விட அதில் பொறாமையும், இப்போ தாண்டா எங்களுக்கு நிம்மதியா இருக்குங்குற மாதிரி ஒரு தொனியும் தெரியுது :)

ச.பிரேம்குமார் said...

வாலு, தவறு என்னுடையது தான். சுட்டி பளிச்சென்று தெரியும்படி தரவில்லை. இப்போது சிவப்பில் தெரிகிறதா???

சுட்டி : http://selventhiran.blogspot.com/2009/04/blog-post_16.html

ச.பிரேம்குமார் said...

விழியன், Why this murder rage??!! ;-)

Suresh said...

//“செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா”/

ஹ ஹா

செல்வாக்கு என் வாழ்த்துகள் அப்புறம் அதுக்கு லிங்க் கொடுங்க . தலைவா

Suresh said...

பாவி ஹா ஹா நல்ல விளக்கம் ஆவி ஹாஹ நல்ல தலைப்பு .. தலைவா

Suresh said...

லிங்க் பார்த்துட்டேன் நிங்க கொடுத்ததுல இருக்கு நன்றி

Suresh said...

வழி தவறிய மீன்கள் கவிதையை வெளிச்சம் போட்டு காட்டியதற்க்கு நன்றி அருமையாய் இருந்தது

புதியவன் said...

//வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//

கவிதை அருமை...இலக்குவண் வலைப்பூ அறிமுகப் படுத்தியதற்கு நன்றி பிரேம்குமார்...

ராம்.CM said...

//வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//

அழகான கவிதை...

selva said...

visit this tooo

http://vizhiyan.wordpress.com/2009/04/17/anandha-vikatan-poem/

சுவாதி சுவாமி. said...

"டக்ளஸ்....... said...

வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்."

வேதவல்லி என்பவர் சீதையின் முதல் பிறப்பு. வேதவல்லி தான் இராவணனை பழி வாங்க அடுத்த பிறப்பில் சீதையாகப் பிறந்ததாக இராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று சொல்கிறது.

சுவாதி சுவாமி. said...

பாவி க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அல்லது சமாளிப்பு நல்லாத் தான் இருக்கு. :)

அன்புடன்
சுவாதி

gayathri said...

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//


nalla iruku pa

Raju said...

\\வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்.\\

மன்னிச்சுக்குருங்க பிரேம் அண்ணே..
ஆகாய நதில போட வேண்டியத இங்க போட்டுட்டேன்..
ஹையா..எனக்கு பதிலும் கிடைச்சுருச்சு...!

மேவி... said...

arumai ...
attagasam .....

மேவி... said...

premkumar uncle romba feel pannathinga.....
naan karthik ellam youth ppaa

மேவி... said...

vikatan kavithai eluthuvathu kastam thaan....
easy yana vali onnu irukku....


pesama 15 rs kku vikatan vangi athila kavithai eluthunga...
ithu romba easyyana vali la

மகேஷ் : ரசிகன் said...

பாவி - பாசமிகு எதிர்வினையாளர்

என்ன வில்லத்தனம்!

ச.பிரேம்குமார் said...

வாங்க சுரேஷ்... பின்னூட்ட மழை பொழிந்ததற்கு நன்றி :)

பின்ன,தலைப்ப எளிதா யோசிச்சிட்டேன்..ஆனா பாவி’ய யோசிச்சு விரிவாக்கம் செய்யறதுக்குள்ளே தான் தாவூ தீர்ந்திருச்சு....

ச.பிரேம்குமார் said...

புதியவன், செல்வா, ராம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

ச.பிரேம்குமார் said...

//பாவி க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் அல்லது சமாளிப்பு நல்லாத் தான் இருக்கு. :)//

உக்காந்து யோசிச்சதாக்கும் ;)

DHANS said...

கார்த்தியின் பதிவுகளை பார்த்து நானும் அதேதான் நினைத்தேன். இளமை துள்ளல், சிறிது பொறாமை கூட வந்தது எனக்கு அப்போது உள்மனம் சொன்னது (நண்பா நீ யூத் இல்ல யூத் மாதிரி என்று )

ச.பிரேம்குமார் said...

தனா, நீங்களே இப்படி சொன்னா எப்படி? அப்போ நானெல்லாம் என்ன சொல்றது??? அட நாமளும் யூத்து தான்பா ;-)))

DHANS said...

அட பிரேம் நீங்களே சொல்லிடீங்க நீங்க smart ஆக இருந்திருக்கிறீர்கள் என்று. இதிலிருந்தே தெரியவில்லையா நாங்கலாம் யூத் மாதிரி என்று. :)

இப்போது எங்கு இருக்கிறீர்கள்?

david santos said...

Really great work!
Have a nice weekend!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//

இது உங்கள் நண்பர் எழுதிய கவிதையா? எனக்கு மின்னஞ்சலில் நண்பனொருவன் அனுப்பி வைத்தான். படித்து விட்டு சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்துவிட்டேன். என்னை மிக மிக பாதித்த கவிதைகளில் இது ஒன்று.

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

வருகைக்கு நன்றி சேரல். பலருக்கும் அந்த கவிதை மிகவும் பிடித்துவிட்டது குறித்து மகிழ்ச்சி :)

ஆகாய நதி said...

//
"டக்ளஸ்....... said...

வேதவல்லிங்கிறது யாரு?
நான் கேள்விப்பட்டதே இல்லையே...!
மண்டோதரி தான இராவணனோட ஆளு...!
முடிந்தால் கொஞ்சம் விளக்குங்கள்."

வேதவல்லி என்பவர் சீதையின் முதல் பிறப்பு. வேதவல்லி தான் இராவணனை பழி வாங்க அடுத்த பிறப்பில் சீதையாகப் பிறந்ததாக இராமாயணத்தின் உப கதைகளில் ஒன்று சொல்கிறது.
//

அப்படியா? என்ன இன்னும் குழப்புதே... அங்க போயி யோசிப்போம்...