அரளிப்பூ மேனியாளின்
ஆர்ப்பாட்ட அழகாலே
அவசரமாய்க் காதலுற்றேன்
அவளிடமே முறையிட்டேன்
சேதி கேட்ட சிறுக்கி
ரொம்பத்தான் முறுக்கி
"அதெல்லாம் முடியாது - என்
அன்புனக்காய் வடியாது."
அதரம் திரட்டினாள்
அதட்டி விரட்டினாள்
"நீயில்லாதென் வானம்
எங்ஙனம் விடியும்?
என் இளமைத்தவம்
எக்கணம் முடியும்?!"
புலம்பித் தவித்தேன்
புழுவெனத் துடித்தேன்
தையலோ யோசித்து
வழியொன்றை விளம்ப,
மையலோ அதற்கென்னை
மண்டையாட்ட வைத்தது
'நாதா, நீ சென்றோடி
உனையீன்றெடுத்த உன்
மாதா மார் பிளந்தவள்
இதயம் கொணர்ந்து
பரிசாய்க் கொடுத்தால்
பரிசீலிக்கலாம்'
கேட்ட நொடியில்
நான் செத்திருக்க வேண்டும்
அல்லால் அக்கணமே
அவளுயிரை அத்திருக்க வேண்டும்
மதி கெட்ட நானோ
மனை தேடியோடினேன்
விதியோ சதியோ
மாதாவைக் கொன்றாடினேன்
இதயங் கையிலேந்தி
வாயிற்கதவு தாண்டுகையில்
அடிதப்பி விழுந்தேன்.
தாயினிதயம் அப்போதும்
துடிதுடித்து கேட்டது
'மடியாடிய செல்வமே
பார்த்து செல்லடா
அடியேதும் இல்லையே,
பார்த்து சொல்லடா'
அன்னையின் அன்பை
அப்போது உணர்ந்தேன்;
மதியற்ற செயலெண்ணி
மனம் நோந்தொடிந்தேன்
- பிரேம்குமார்
***பழைய கதையொன்று கவிதை வடிவத்தில்
11 December 2006
இதயங்கள்
எழுத்து வகை: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
12 கருத்துக்கள்:
அருமை..அருமை..
இனிய தமிழும்..
தாயின் இதயம் சொன்ன சொல்லும்..
வார்த்தைக் கோவை அற்புதம் ப்ரேம்..
படிக்கப் படிக்கப் பாடுவது போன்றொரு உணர்வு..
வித்தியாசமான முயற்சி..
வாழ்த்துக்கள்.. (தாத்தா - என்று சொல்லவும் வேண்டுமோ? ;-))
மிக்க நன்றி கவிப்ரியன் & சரவணன்.
Very nice..
Keep it up..
Always my wishes for U Kavingare...
Very nice..
Keep it up..
Always my wishes for U Kavingare...
நயமும், நடையும் அருமை, பாராட்டுக்கள். ஆனால் மண்ணிக்கவும் இந்த கருத்து எனக்கு பிடிக்கவில்லை.
மிக்க நன்றி முகுந்தன். இது பழைய கதைதான் (ஹி ஹி.. நம்ம கருத்து இல்லீங்கோ)
இதயம் கேட்டது என்பதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் வேறு வகையில் சிந்தித்து பார்த்தால் சரியாக இருக்கும் தானே ?!!
நல்லா இருக்கு பிரேம், இன்னும் செதுக்கப் போறீங்களா என்ன?
அப்புறம்.. தமிழ்மணத்தில் உங்க பதிவுகளும் மறுமொழிகளும் வர்ற மாதிரி ஏற்பாடு செய்யலாமே? வாசகர் வட்டமும் அதிகரிக்கும்.
தமிழ்மணத்தில் உங்க பதிவு இன்னிக்கு மடைதிறந்த வெள்ளம் போல் வந்துடுச்சு :-) மறுமொழிகளும் திரட்டப்பட ஏற்பாடு செஞ்சிட்டீங்கன்னா போதும்!
ayyo prem - urukki vittathu - eppadi ippadi elutha munainthai-
ninaikave nenju patharum varikal
thaayin paasathukku eedethu - athuthan theivam - ovvoru manithanum padikanum - konjamavathu thaayin anbai unaranum
neenkal kooriyathu pol karuthu ennavo therintha ontuthan but athai kavithai vadivil eluthiyathu..athu unnai saerumthane - oh good boy - be in practical also - ithai eluthiya unnai eppadi paaraatuvathentu theriyavillai - ithayathai kasaki piliyum varikal - kanneer malka vaikum - baskar
கேட்டக்கதையை அழகாக் எழுதியிருக்கிறீர் பிரதர். புதிதாய் கேட்பது போல் இருந்தது அழகான் நடை. சற்றே பொறாமை படுகிறேன்
கேட்ட ரசித்த கதைதான். இருப்பினும் அழகு தமிழில் எளிய நடையில் பாடலாக்கிய விதம் ( கவிதை) பாராட்டுக்குரியது.
நல்வாழ்த்துகள்
Post a Comment