3 April 2008

வந்தாரை வாழவைப்பது க‌ர்நாட‌க‌மா? சிரிப்புதான்யா வ‌ருது...

மீண்டும் வெடிக்கிறது தமிழக கர்நாடகா பிரச்சனை (எப்போது ஓய்தது என்கிறீர்களா? அதுவும் சரிதான்)

இரண்டு பக்க அரசியல்வாதிகளும் எதற்கும் தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்த இரு காட்சிகள் சிரிப்பையும் பெரும் எரிச்சலையும் ஒருசேர வரவைத்தன‌

காட்சி 1:
கர்நாடக அரசியல்வாதி ஒருவர் கூறுகிறார் : 'மகாராஷ்டிராவில் நடப்பது போலவே இங்கும் செய்ய வேண்டும். வந்தாரை வாழ வைப்பவர்களாக இனி கர்நாடகம் இருக்கக்கூடாது'

என்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறாரா என்று தெரியவில்லை. அய்யா, நீங்கள் அரசியல்வாதி. தொகுதிக்கு சென்று எப்போதாவது பார்ப்பீர்கள். மேடையோ பேட்டியோ கிடைத்தால் பேசுவீர்கள். சட்டசபைக்கு முடிந்தால் செல்வீர்கள் (அங்க ஒன்னும் கிழிக்க மாட்டீர்கள், வேட்டி சட்டையை தவிர). அத்தோடு முடிந்தது உங்கள் உலகம். உங்களால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட முடியும். ஆனால் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் அது பொருந்துமா? எல்லோரும் அவரவர் ஊரிலேயே இருந்துக்கொண்டு தான் பிழைக்க வேண்டும் என்று சொல்வது சிறுபிள்ளைதனமா இல்லை?

பெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள்? நாக்கக் கூட வழிக்க முடியாது

காட்சி 2:
'ஈரோடு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டும்.' என்கிறார் ஒருவர். அய்யா சாமி, நீங்க என்ன ராசா காலத்துலயா இருக்கீங்க? போர் தொடுத்து எல்லைகளை விரிவுப்படுத்த? எல்லோரும் இந்தியாகுள்ள தானே இருக்கோம்? அப்புறம் ஏனிந்த அறிவிலித்தனம்? உங்க‌ அக்க‌ப்போர் தாங்க‌ல‌ப்பா...

வந்தாரை வாழ‌வைப்ப‌து நீங்களா? அய்யோ, சிரிப்பு தான் சாமி வ‌ருது

5 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

இவுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க மாப்பி ;(

Sen22 said...

\\பெங்களூர் இப்போது வாழ்வதே தகவல் தொழில்நுட்பத்துறையால் தான். அங்கே இருக்கும் ஏதேனும் அலுவலகத்துள் சென்று பாருங்கள். 80% மக்கள் வெளியூர்க்காரர்களாக தான் இருப்பார்கள். எல்லோரையும் துரத்திவிட்டால் என்னத்த தொழில் செய்வீர்கள்? நாக்கக் கூட வழிக்க முடியாது
\\
சரியா சொன்னீங்க... Boss
...

Senthil Kumar
Bangalore

ச.பிரேம்குமார் said...

//இவுங்க எல்லாம் திருந்தவே மாட்டானுங்க மாப்பி ;(//

ரிப்பீட்டேய்

ச.பிரேம்குமார் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் :)

Unknown said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்ப்பா !