29 August 2008

காதல் எனப்படுவது யாதெனில்

காத‌ல் என‌ப்ப‌டுவ‌து யாதெனில் என்று எழுத‌ அழைத்த‌ த‌ம்பி கார்த்திக்கிற்கு ந‌ன்றி




காதல் வீணை;
மீட்டும் கைகளே நிர்ணயிக்கும்
இசையையும்
ச‌ப்த‌ங்க‌ளையும்!




காதல் நெடுங்கதை;
தொடங்குதல் எளிது
தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!




காத‌ல் ஞான‌ம்;
ப‌கிர‌ ப‌கிர‌
பெருகிக்கொண்டே இருக்கிற‌து
இருப்பு!




வாழ்க்கை பூ,
காத‌ல் தேன்;
காகித‌ப்பூக்களுடன் சொந்தம்
கொண்டாடுவதில்லை
வண்டுகள்!




காத‌ல் சிக‌ர‌ம்;
முர‌ட்டுப் பாதையின்
முடிவில்
விரிந்திருக்கும் எல்லைக‌ள‌ற்ற‌ அழகு




விதிமுறைகள்:
1. பதிவின் தலைப்பு - “காதல் எனப்படுவது யாதெனில்…” (மாற்றக்கூடாது).
2. என்ன பதிவிடலாம் - இது தான் எழுதணும் என்கிற கட்டாயம் கிடையாது. பதிவு எதைப்பற்றி வேண்டுமானால் இருக்கலாம். கதை, கவிதை, நக்கல், கட்டுரை, மொக்கை………. என்ன வேணும்னா எழுதுங்க உங்கள் விருப்பம். (ஆனால் தலைப்போட கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கணும்)
3. பதிவு போட இன்னும் ஒருவரை அழைக்கணும். முன்பெல்லாம் இரண்டு மூன்று பேர் அழைக்கப்பட்டதால் தொடர் சங்கிலிகள் எங்காவது ஒரு தொடர்பு அறுந்தாலும் அவை கொஞ்சம் பயணித்தன. இங்கு ஒருவர் தான் அழைக்கப்படுகிறார் அதனால் நீங்கள் அழைப்பவரின் வசதியைக் கேட்டுவிட்டு கூப்பிடுங்கள்.
4. மறக்காமல் விதிமுறைகளை இடவும். விதிமுறைகள் மாற்றக் கூடாது

காத‌ல் என‌ப்ப‌டுவ‌து யாதெனில் என்ப‌தை அடுத்து ச‌ர‌வ‌ண‌க்குமார்
விள‌க்குவார்

36 க‌ருத்துக்க‌ள்:

Karthik said...

//காதல் வீணை;
மீட்டும் கைகளே நிர்ணயிக்கும்
இசையையும்
ச‌ப்த‌ங்க‌ளையும்!

பிரேம்குமார்
சரியாக தான் வைத்திருக்கிறார்கள்.
Superb!!!

Karthik said...

//தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!

அருமை பிரேம்.
100pc True.
:)

Karthik said...

//காகித‌ப்பூக்களுடன் சொந்தம்
கொண்டாடுவதில்லை
வண்டுகள்!

சூப்பர்...

தமிழன்-கறுப்பி... said...

இன்றைக்குத்தான் கார்த்திக்கிற்கு பின்னூட்டம் எழுதி அப்படியே உங்கள் பக்கமும் வந்து பார்த்தேன் எழுதாமல் இருந்தது,

இப்பொழுது எழுதி விட்டீர்கள் நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

உங்களிடம் எழுதச்சொன்னால் பிறகென்ன...

தமிழன்-கறுப்பி... said...

அழகு வரிகளில் உங்கள் கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்...

MSK / Saravana said...

//காதல் வீணை;
மீட்டும் கைகளே நிர்ணயிக்கும்
இசையையும்
ச‌ப்த‌ங்க‌ளையும்!//

பிரேம் அசத்திட்டீங்க..

MSK / Saravana said...

காதல் பதிவு ஒன்று பதிவிட போகிறேன் என்று சொன்னீர்களே, அது இது தானா??

அழகு..

MSK / Saravana said...

ஆனா.. என்ன புடிச்சு போட்டுடீங்களே..!!
:(

சரி. முயற்சி செய்து பார்க்கிறேன்..

ஜியா said...

//தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!//

Kalakitteenga Prem uncle.... (appavaayitta uncle thaane?? ;))

ச.பிரேம்குமார் said...

கார்த்திக், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

இன்றைக்கு என் வலைப்பூ முழுதும் உன் பின்னூட்டங்களால் நிறைந்துவிட்டது

தொடர்ந்து ஆதரவு தரவும் ;))))

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன்.

கார்த்திக் தொடர் பதிவு எழுத சொல்லி கொஞ்ச நாள் ஆச்சு, ஆனா நான் தான் சோம்பேறித்தனத்துல நாட்கள கடத்திட்டேன் ;)

ஸ்ரீ said...

தொடர் பதிவு ரொம்ப அழகா நகர்த்தியதுக்கு நன்றி சித்து :)

ச.பிரேம்குமார் said...

நன்றி சரவணா. இதே பதிவு தான் அது :)

சீக்கிரம் எழுதுங்க... காத்திருக்கிறோம் :)

கோபிநாத் said...

\\வாழ்க்கை பூ,
காத‌ல் தேன்;
காகித‌ப்பூக்களுடன் சொந்தம்
கொண்டாடுவதில்லை
வண்டுகள்!\\

இது அருமை மாப்பி ;))

கோபிநாத் said...

\\ ஜி said...
//தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!//

Kalakitteenga Prem uncle.... (appavaayitta uncle thaane?? ;))

6:23 AM
\\


மாப்பி ரொம்ப ஆசையாக இருக்கு இந்த பின்னூட்டத்திற்கு ஒரு ரீப்பிட்டே போட்டுகிறேன் ;)

Ramya Ramani said...

\\காதல் நெடுங்கதை;
தொடங்குதல் எளிது
தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!
\\

\\காத‌ல் சிக‌ர‌ம்;
முர‌ட்டுப் பாதையின்
முடிவில்
விரிந்திருக்கும் எல்லைக‌ள‌ற்ற‌ அழகு
\\

அருமை :)

ச.பிரேம்குமார் said...

மாப்பி, ஏனிந்த கொலவெறி
? ;-)

ச.பிரேம்குமார் said...

ர‌ம்யா,

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி
:-)

Unknown said...

நல்லாருக்கு அண்ணா..!! :))

சந்தனமுல்லை said...

அழகான அருமையான கவிதைகள் பிரேம்!

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருக்கும் மிக்க நன்றி Sri :)

ச.பிரேம்குமார் said...

முதன் முதலாக வருகை தந்ததற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சந்தனமுல்லை :)

FunScribbler said...

குட்டி கவிதை சூப்பர்ர்!! கார்த்திக் நல்ல ஆள்கிட்ட தான் கொடுத்திருக்கிறான்!!:))

நவீன் ப்ரகாஷ் said...

//காத‌ல் ஞான‌ம்;
ப‌கிர‌ ப‌கிர‌
பெருகிக்கொண்டே இருக்கிற‌து
இருப்பு!//

:))) ம்ம்ம்...
காதல் எனப்படுவ‌தை அழகாக‌
சொல்லி இருக்கிறீர்கள்
ப்ரேம் !!! :))

ச.பிரேம்குமார் said...

நன்றி காயத்ரி :)

ச.பிரேம்குமார் said...

ஆகா! வாங்க‌ காத‌ல் க‌விஞ‌ரே. ந‌ன்றி உங்க‌ள் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் :)

J J Reegan said...

கவிதைக்கு கவிதை அருமை...

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி ரீகன், வருகைக்கும் கருத்துக்கும்

கவிதைக்கு கவிதை??? புரியலையே....:(

J J Reegan said...

// @ பிரேம்குமார் said...

கவிதைக்கு கவிதை??? புரியலையே....:( //

" தலைப்பே கவிதைதான் " அதுக்கு அழகான கவிதைகள்.....

ச.பிரேம்குமார் said...

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை. அப்படி வரீங்களா???
நன்றி ரீகன் :)

J J Reegan said...

// அட்ரா சக்கை.. அட்ரா சக்கை. அப்படி வரீங்களா??? //

:-)))

priyamudanprabu said...

காதல் நெடுங்கதை;
தொடங்குதல் எளிது
தோய்வில்லாம‌ல் தொட‌ரத்தான்
திண‌ற வேண்டியிருக்கிறது!
//////////////

அப்புடியாஆஆஆஆஆஆஆஆ???/

மழைக்காதலன் said...

தல உங்க கவிதைகள் எப்போதுமே அழகு.... ரொம்ப நல்லா இருக்கு...

Anonymous said...

realy good...

ச.பிரேம்குமார் said...

பிரபு, மழைக்காதலன், பூபேஷ்

மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்