நான் வலைப்பூவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது என்றாலும் மறக்காமல் நினைவில் வைத்து அழைத்த சந்தனமுல்லை, கார்த்திக் & சரவணகுமாருக்கு நன்றிகள்
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
திரையரங்கில் பார்த்ததில் நினைவிருக்கும் முதல் படம் என்றால் 'விக்ரம்' என்று சொல்லலாம். அப்போது வயது 6. உணர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தது எல்லாம் ரொம்ப வருடங்கள் கழித்து தான்
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அதென்னப்பா கடைசியா? சமீபத்தில் என்று தானே இருக்க வேண்டும். நிறைய இடைவெளிக்குப் பிறகு வெள்ளியன்று 'ஏகன்' திரைப்படம் பார்த்தேன். ஓரளவு மொக்கை என்றாலும் சலிப்பு தட்டவும் இல்லை
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அரங்கிலன்றி தொலைக்காட்சியில் படம் பார்ப்பதே இல்லை. விளம்பரங்களுக்கு இடையே எப்போதேனும் காட்டப்படும் படம் பெரும் சலிப்பை தரும். ஏதேதோ காரணங்களால் அரங்கில் பார்க்க முடியாமல் போன 'சரோஜா' படத்தை குறுந்தகடு உதவியுடன் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கதை கருத்து என்று ஒன்று இல்லாவிட்டாலும் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் அசத்தியிருக்கிறார் வெங்கட் பிரபு.
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
கல்லூரி காலத்தில் பார்த்த "அலைபாயுதே". என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை ;)
5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தாக்கும் அளவுக்கு எதுவும் நடந்ததாய் நினைவில்லை
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ம்ஹீம்.... இதுக்கெல்லாம் பதில் சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாதுங்க :)
6. தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வார இதழ்கள், வலைதளங்கள் எதை புரட்டினாலும் திரைப்படங்கள் குறித்து ஏதேனும் ஒன்று இருந்துவிடுகிறதே. அதனால் வாசிக்க நேர்ந்துவிடுகிறது. ம்ம்ம், வாசிப்பை ஒழுங்குப்படுத்த வேண்டும்
7.தமிழ் சினிமா இசை?
ரகுமான் இசையில் மூழ்கித்தான் கழிந்தது பதின்ம காலம். இப்போதெல்லாம் எப்போதோ ஒரு முறை தான் இசையமைக்கிறார். தமிழ் திரையிசையை இப்போது நிறைய குத்துப்பாட்டுகளும் அதிரடி ரீமிக்ஸ்களும் தான் ஆக்ரமித்து உள்ளன. சீக்கிரமே பழையபடி நிறைய மெல்லிசை பாடல்கள் வரவேண்டும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நான் பார்த்த வேற்று மொழி படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். மிகவும் பாதித்தவை DILWALE DULHANIA LE JAYENGE, KUCH KUCH HOTA HAI, JURASIC PARK, HONEY, I SHRUNK THE KIDS
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சத்தியமா இல்லை :)
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால் பல சமயம் அவர்கள் செய்துக்கொள்ளும் compromise கள் தான் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. முழுச் சுதந்திரத்துடன் இயங்கும் படைப்பாளிகள் கிடைத்தால் தமிழ்சினிமாவின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்
நான் நிம்மதியாய் இருப்பேன். இப்போதே எனக்கும் திரைப்படங்களுக்குமான தூரம் அதிகரித்துவிட்டது. தொலைக்காட்சி தான் கொஞ்சம் நேரத்தை விழுங்குகிறது.
தமிழர்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. வேறு நல்ல விசயங்களில் கவனம் செலுத்துவார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு காலத்தில் திரைப்படங்களும் ஒரு நல்ல ஊடகமாக இருந்தன. பல அரசியல் சம்பவங்களை, நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டின. வெளிநாட்டினையெல்லாம் சுத்திக் காட்டினார்கள்.
இப்போது இவற்றையெல்லாம் சொல்ல தொலைக்காட்சி வந்துவிட்டது. மேலும் திரைப்படங்களும் இப்போது வெறும் பொழுதுப்போக்காக மட்டுமே இருக்கிறது. கலாச்சாரத்தையும் இவர்கள் சீரழத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். (ஏகன் படத்தில் கல்லூரி விரிவுரையாளராக வரும் நயன் தாராவின் உடையை பார்த்தாலே புரியும் இவர்கள் ரசனை)
தமிழ்சினிமா ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டால் கூட நன்றாகத்தான் இருக்கும்.
***
எனக்கு அழைப்பு வந்து வெகு நாட்கள் ஆயிற்று. ஆகையால் அதற்குள் எல்லோரும் எழுதி முடித்திருப்பார்கள் என்பதால் யாரையும் அழைக்கவில்லை :)
பி.கு : தமிழ்ச்சினிமா என்று எழுதியிருப்பதை பார்த்துவிட்டு வீட்டில் சொன்னது. அதென்ன தமிழ்ச்சினிமா ? தமிழ் திரைப்படங்கள் என்று எழுதலாமே.... அப்புறம் சினிமா என்றே எழுதினாலும் அதில் என்ன ஒற்று ? தமிழ் சினிமா என்று தானே இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துட்டுப் போயிட்டாங்க :)
13 கருத்துக்கள்:
//நான் வலைப்பூவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது
முதல் வரியே தப்பு. ரொம்ப நாட்கள் அல்லது சில மாதங்கள்.
//என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை
உண்மைதான்.
:)
//இதுக்கெல்லாம் பதில் சொல்ற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாதுங்க
மிகவும் நேர்மையான பதில்.
:)
//தமிழ் சினிமா என்று தானே இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துட்டுப் போயிட்டாங்க :)
So i'm NOT the first?
me the second.
:)
//முதல் வரியே தப்பு. ரொம்ப நாட்கள் அல்லது சில மாதங்கள்.//
ஆகா, என்னமா நோட் பண்றாங்கப்பா.... ஒரு மாசம் தானே கண்ணு ப்ரேக் விட்டேன் ;)
//me the second.//
எழுதும் போதே படித்து சொல்லிட்டாங்கப்பா... பதிவு போட்டதுக்கு அப்புறம் நீ தான் FIRST ;)
தங்கமணி கூட பார்த்த படம் எதுனு யாருமே கேக்கல சே..சே என்ன (வலை)உலகம் இது! :)
//Karthik said...
//நான் வலைப்பூவுலகம் பக்கம் வந்து கொஞ்சம் நாட்கள் ஆகிவிட்டது
முதல் வரியே தப்பு. ரொம்ப நாட்கள் அல்லது சில மாதங்கள்.
//
ரிப்பீட்டு..
//ஆகாய நதி said...
தங்கமணி கூட பார்த்த படம் எதுனு யாருமே கேக்கல சே..சே என்ன (வலை)உலகம் இது! :)//
ஹி ஹி ஹி.. ரிப்பீட்டு..
//கல்லூரி காலத்தில் பார்த்த "அலைபாயுதே". என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை ;)//
புரியுது.. புரியுது..
//பி.கு : தமிழ்ச்சினிமா என்று எழுதியிருப்பதை பார்த்துவிட்டு வீட்டில் சொன்னது. அதென்ன தமிழ்ச்சினிமா ? தமிழ் திரைப்படங்கள் என்று எழுதலாமே.... அப்புறம் சினிமா என்றே எழுதினாலும் அதில் என்ன ஒற்று ? தமிழ் சினிமா என்று தானே இருக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துட்டுப் போயிட்டாங்க :)//
அண்ணி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு....
கரெக்ட்டு தானே...???
ஆகா சரவணா! ஒரே ஜாலி மூட்ல இருக்கே போல...
இப்படி அடிச்சு ஆடுற
\\மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?கல்லூரி காலத்தில் பார்த்த "அலைபாயுதே". என்ன காரணம் என்று சொல்ல தேவையில்லை ;)\\
நான் இன்னும் உன்கிட்ட இருந்து எதிர்பார்கிறேன்....(தனியாக சொல்லு என்ன)) ;))
சாரி பிரேம் இந்த போஸ்டை மிஸ் பண்ணிட்டேன்! அப்புறம், நச்-னு இருக்கு பதில்கள்!
//ஆனால் பல சமயம் அவர்கள் செய்துக்கொள்ளும் compromise கள் தான் அவர்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. முழுச் சுதந்திரத்துடன் இயங்கும் படைப்பாளிகள் கிடைத்தால் தமிழ்சினிமாவின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்//
சூப்பர்!
மாப்பி, உனக்கு நக்கல் ரொம்ப அதிகம் தான்
வாங்க முல்லை, உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
Post a Comment