17 November 2008

வன்முறை எதற்கும் தீர்வாகாது

சட்டக்கல்லூரியில் நடந்த கொடுமையை பற்றி நிறைய எழுதிவிட்டார்கள். பிரச்சனை குறித்து இன்னும் நிறைய படித்தும் ஆராய்ந்தும் தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இந்த சம்பவம் மட்டுமல்ல, அண்மையில் கேள்விப்பட்ட நிறைய சம்பவங்கள் எழுப்பும் ஒரு கேள்வி, "வன்முறை தான் எதற்கும் தீர்வு என்ற எண்ணம் ஏன் எல்லோருக்குள்ளும் வேரூண்ற தொடங்கிவிட்டது?"

எப்போதுமே இம்மாதிரியான செய்திகளால் பதைபதைக்கும் மனம், இம்முறை மிகுதியாகவே வேதனைப்பட்டது. காரணம் இம்முறை வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள். இந்த வயதிலேயே ஆயுதம் தூக்கத் தயங்காதவர்கள் வளர்ந்ததும் என்ன ஆவார்கள்?

இவர்களுக்கு ஆதரவாக கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் களம் இறங்கி கல்லூரி வளாகத்தில் கல் வீசியிருக்கிறார்கள்.

போராட்டம் என்றாலே பேருந்துகளை எரிப்பது, கட்டிடங்களை சேதப்படுத்துவது என்று ஏன் ஆகிவிட்டது? பொதுச்சொத்தை சேதப்படுத்தும் எந்த ஒரு போராட்டமும் மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கும் என்று இவர்கள் நினைக்க தவறுவது ஏன்? அறப்போராட்டங்கள் பற்றி யாரும் சிந்திக்க மறுப்பது ஏன்?

ஒரு விதத்தில் இந்த தவறுகளுக்கு எல்லாம் பெரியவர்கள் தான் காரணமோ என்று தோன்றுகிறது. போராட்டங்கள் என்ற பெயரில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தை தான் இந்த இளைஞர்களும் பின்பற்றுகிறார்கள். ஊடகங்களும் இப்போதெல்லாம் வன்முறைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இன்னும் சில காலத்தில் அமைதி, சகிப்புத்தன்மை போன்ற வார்த்தைகளையே மக்கள் மறந்து விடுவார்கள் போலும். அடுத்த தலைமுறைக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது

பிற்சேர்க்கை 1 : நிகழ்விடத்தில் கை கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்த காவல்துறை இப்போது சட்டக்கல்லூரி மாணவர்களை மும்முரமாய் கைது செய்வது வேதனை :(

பிற்சேர்க்கை 2 : இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக நேற்று (17.11.2008) டைடல் பார்க் முன்பு மனித சங்கிலியாக இணைந்து குரல் கொடுத்தனர் ஐ.டி. துறையினர். 'போரை நிறுத்து' என்ற வாசகம் தாங்கிய சட்டைகள் அணிந்து போருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
இந்த நிகழ்வை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்

4 க‌ருத்துக்க‌ள்:

கோபிநாத் said...

\\\இன்னும் சில காலத்தில் அமைதி, சகிப்புத்தன்மை போன்ற வார்த்தைகளையே மக்கள் மறந்து விடுவார்கள் போலும். அடுத்த தலைமுறைக்கு இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது
\\

;-(

Karthik said...

நமக்கு ஒரு ஒபாமா இந்த மாதிரி சட்டக் கல்லூரியிலிருந்தா கிடைக்க போகிறார்??

SHAME!

MSK / Saravana said...

இன்னுமா இந்த நாட்டை நீங்க புரிஞ்சிக்கல..???!!!!!!!!!

MSK / Saravana said...

இந்த மாதிரியான விஷயங்களை பேசி பேசி போரடிக்குது.. ஒவ்வொரு தனி மனிதனும் அரசாங்கமும், தலைவர்களும் திருந்தாத வரை.. ஒன்னும் நடக்காது..