சமூகத்தின் மேல் அக்கறை கொள்வது ஒரு சாரார் தான். சில குறிப்பிட்ட பிரிவனர்களை சுட்டிக்காட்டி இவர்களுக்கு எல்லாம் சமூகத்தின் மேல் அக்கறையே கிடையாது என்று சொல்வதுண்டு. பிரிவினைவாதம் என்பது ஒரு கொடிய வியாதி தான்.
மேலே உள்ள படம் மடிப்பாக்கம் AXIS வங்கி அருகே இருக்கும் சந்திப்பில் ஒரு ஞாயிறு மாலையில் எடுக்கப்பட்டது. அந்த சந்திப்பில் போக்குவரத்து காவலர்கள் உண்டு எனினும், அவர்கள் எல்லா நாட்களிலும் எல்லாம் நேரங்களில் இருப்பது இல்லை
அப்படி காவலர் இல்லாத ஒரு நேரத்தில், நெரிசல் ஏற்படம் அபாயம் இருக்கும் ஒரு தருணத்தில் தாமாக முன்வந்து போக்குவரத்தை சீர்படுத்துகிறார் ஒரு இளம் தானி ஓட்டுனர். இந்த பதிவின் மூலம் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வோம். சமூக சிக்கல்கள் வருகையில் வேறு யாரேனும் வருவார்கள் என்று காத்திராமல் நாமே களத்தில் இறங்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல முன்னுதாரணம்
அவசரத்தில் அவர் முகத்தை எடுக்க முடியவில்லை :(
**********
நாளைய உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள் மாணவர்கள். அவர்களில் ஒரு சிலர் செய்திருக்கும் செயலைத்தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள். பொதுச்சொத்தை மதிக்க அவர்கள் இன்னும் பழகிக்கொள்ள வேண்டும். பல சமயம் பெரியவர்களே இதை செய்வதில்லை.
19 கருத்துக்கள்:
என்ன இது, பதிவு போட்டு ஒரு மறுமொழி கூட வரலையேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். பாத்தா பின்னூட்ட பெட்டியே திறக்கலேன்னு தெரிந்துசுது.....
அதான் விசயமா இல்ல நெசமாவே யாருமே எட்டிப் பாக்கலீயா ;)
இப்போ தான் சரவணகுமார் கிட்ட இருந்து ஒரு மடல் வந்திருந்தது... மறுமொழிகள் இட முடியலன்னு
ஸ்ஸ்ஸ், யப்பா! இப்போ தான் நிம்மதியா இருக்கு. நம்ம பதிவுகளையும் மக்கள்ஸ் வாசிக்கிறாங்க ;)
சே! இதுக்கு தான் பின்னூட்ட கயமைத்தனம் எல்லாம் செய்யனும் போல ;)
அப்புறம் மக்களே, Comment Form placement : Embedded below post அப்படீங்கிற optionஅ தேர்வு செய்தா, எல்லாம் ஊத்திக்குதே... அது ஏன்? தெரிஞ்சவுங்க யாராவது சொல்லுங்களேன்
பின்னூட்டப்பெட்டி சரியாச்சா?
படிச்சிட்டேன்....நானும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிகிறேன். ;)
//பின்னூட்டப்பெட்டி சரியாச்சா?//
ஒரு வழியா சரி ஆகிடுச்சுங்க அக்கா :)
பழையபடியே வச்சிட்டேன்
வருகைக்கு நன்றி :)
//படிச்சிட்டேன்....நானும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிகிறேன். ;)//
நன்றி மாப்பி ;)
நல்ல பதிவு அண்ணா.. கலக்றீங்க போங்க..
நன்றி சரவணா.. கலக்குனது அந்த தானி ஓட்டுனர் தான் :)
//சமூக சிக்கல்கள் வருகையில் வேறு யாரேனும் வருவார்கள் என்று காத்திராமல் நாமே களத்தில் இறங்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல முன்னுதாரணம்
//
// ஒரு இளம் தானி ஓட்டுனர்//
அவருக்கு வாழ்த்துக்கள்..
நன்றி பூர்ணிமா வருகைக்கு.
கலக்கிய அந்த தானி(?) ஓட்டுனருக்கும், படம் பிடித்து வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.
//அவசரத்தில் அவர் முகத்தை எடுக்க முடியவில்லை :(
என்ன அவசரம்?? சரி..சரி..
:)
/பொதுச்சொத்தை மதிக்க அவர்கள் இன்னும் பழகிக்கொள்ள வேண்டும். பல சமயம் பெரியவர்களே இதை செய்வதில்லை.
:(
பேருந்துக்காக காத்திருக்கும் போது கண்ட காட்சி இது கார்த்திக். பேருந்து வந்துவிட கிளம்ப வேண்டியதாயிற்று :(
நல்ல விசயம்..
எழுதி வைக்கிறது பள்ளிக்கூடத்துல பெஞ்சுல ஆரம்பிச்சு பஸ் , கோயில் ன்னு இடம் பொருள் பேதமே இல்லையே..
//எழுதி வைக்கிறது பள்ளிக்கூடத்துல பெஞ்சுல ஆரம்பிச்சு பஸ் , கோயில் ன்னு இடம் பொருள் பேதமே இல்லையே..//
சரியா சொன்னீங்க அக்கா.... :(
நம்ம பெயர பதிவு செய்யுற மாதிரி எதாவது செய்யனுங்குறத மக்கள் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல :(
அவர் போல் நாமும் பிறருக்கு உதவி செய்தால் அது அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வது போல தான்.
அன்ன சத்திரம் பாடலை ரொம்ப நாளா வலை வீசி தேடிக்கிட்டு இருந்தேன்.
உங்க வலையில கிடைச்சிருச்சு (வல வீசுனா வலையில கிடைக்காம, வேற எங்க கிடைக்கும்?). அதற்க்கு நன்றி....
இதே மாதிரியான ஒரு நல்ல இயக்கத்தை பற்றிய பதிவுக்காக தேவைப் பட்டது.
நவநீதன், நீங்க சொன்னதும் சரிதான் :)
//இதே மாதிரியான ஒரு நல்ல இயக்கத்தை பற்றிய பதிவுக்காக தேவைப் பட்டது.//
சீக்கிரம் பதிவிடுங்கள். படிக்க காத்திருக்கிறோம்
Post a Comment