23 January 2009

அன்புள்ள அப்பாவுக்கு

தன் மகளின் அறையை கடந்தபோது ஏதோ ஒரு வித்தியாசம் தெரிய, சட்டென நின்றார் அருள். உற்று நோக்கிய போது, எப்போதும் இல்லாமல் அறை மிக சுத்தமாக இருந்தது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடங்களில் இருந்தன. ஏதோ நெருட அறைக்குள் சென்ற அருளின் கண்களில் தலையணை மீது இருந்த கடிதம் தென்பட்டது. 'அன்புள்ள அப்பாவுக்கு' என்று அதில் எழுதியிருந்தது. சற்றும் தாமதிக்காமல் கடிதத்தை பிரித்து படிக்கலானார்

அன்புள்ள அப்பா,
இதை மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன். உங்களை பிரிவதில் எனக்கு நிறைய வருத்தம் இருக்கிறது, ஆனால் வேறு வழியில்லை. நான் வீட்டை விட்டு போகிறேன். உங்களிடம் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கலாம், ஆனால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று தெரியவில்லை. ஆமாம்பா, நான் என் காதலன் வெற்றிசெல்வனுடன் இந்த ஊரை விட்டு போகிறேன்.

வெற்றியை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரும் என்னை மிகவும் காதலிக்கிறார். சந்திக்கும் போது உங்அளுக்கும் அவரைப் பிடிக்கும். கைலி கட்டிக்கொண்டு, அழுக்குச்சட்டையுடனும் முரட்டு தாடியுடனும் அவர் காட்சியளித்தாலும் மிகவும் பாசமானவர். அது மட்டும் இப்போ காரணமில்லை அப்பா, நான் இப்போது கருவுற்று இருக்கிறேன். வெற்றிக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், நான்கு குழந்தைகளும் இருந்தாலும், இந்த குழந்தையையும் கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். ஐம்பது வயதில் தன்னால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதில் பெருமிதம் அவருக்கு.

வெற்றி ஒரு காட்டில் தான் வாழ்கிறார். அதிகம் பணம் இல்லையென்றாலும் கஞ்சா வளர்த்து நிறைய செல்வம் சேர்க்கலாம் என்று அவர் உறுதியாக நம்புகிறார். எங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், சீக்கிரமே எய்ட்ஸீக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டால் அதை வெற்றிக்காக வாங்கவும் அந்த பணத்தை நாங்கள் பயன்படுத்திகொள்வோம்.

எனக்கு 16 வயதாகிறது அப்பா. என்னால் எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. கவலைக்கொள்ள வேண்டாம். சீக்கிரமே உங்கள் பேரக்குழந்தைகளுடன் உங்களை காண வருவேன்.

உங்கள் அன்பு மகள்,
இளவேனில்


படப்படப்புடன் படித்துக்கொண்டிருந்த கடிதத்தில் 'திருப்புக' என்று எழுதியிருந்ததையும் கவனித்தார் அருள். புரட்டிப்பார்த்த போது அதில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது

அப்பா,
நீங்கள் படித்தவற்றில் எதுவும் உண்மையில்லை. நான் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ மோசமான விசயங்கள் நடக்கலாம் என்று உங்களுக்கு நினைவுகூறவே அந்தக்கடிதத்தை எழுதினேன். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மேசை மீதிருக்கும் என் தேர்வு அறிக்கை எவ்வளவோ மேல் என்று தோன்றலாம். அதை பார்த்துவிட்டு, கையொப்பம் இடலாம் என்று தோன்றினால் என்னை அழைக்கவும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா

32 க‌ருத்துக்க‌ள்:

நட்புடன் ஜமால் said...

நல்ல மொழிபெயர்த்துள்ளீர்கள்.

கடிதமும் நல்லாயிருக்கு.

இப்படியும் இருக்காங்கப்பா.

கார்த்திகைப் பாண்டியன் said...

படிக்க தொடங்கியவுடனே இதுல ஏதோ திருகுனி வேலை இருக்குன்னு புரிஞ்சது.. நல்லா இருக்கு.. மொழிபெயர்ப்பின் மூலம் என்னன்னு சொல்லலாமே பிரேம்..

சந்தனமுல்லை said...

ஹை...மெயிலில் படித்திருந்தாலும்
இப்போ தமிழில் படிக்க இனிமையாயிருக்கிறது பிரேம்!! தொடரட்டும், மொழிபெயர்ப்பு பணி!

KARTHIK said...

அருமை தல
ரொம்ப நல்லாருக்கு
மிகவும் ரசிக்கும் படியான பதிவு

(எதுக்கும் பையன் கண்ணுல இது படாதா மாதிரி மறச்சு வைங்க)

Karthik said...

நல்ல ஐடியாவா இருக்கே?!
lolz.

//தொடரட்டும், மொழிபெயர்ப்பு பணி!

இதுவுமா?????????????????????

//அருள்..வெற்றிசெல்வன்..இளவேனில்

கௌதம் மேனன் பரவாயில்லை.
:)

ஆதவா said...

அந்த திடீர் திருப்பம் மிக அருமை.... இது உங்கள் கதையாக இருக்கும் பட்சத்தில் மிக அருமை... வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல மொழிபெயர்த்துள்ளீர்கள்.
கடிதமும் நல்லாயிருக்கு.
இப்படியும் இருக்காங்கப்பா.
//

நன்றி ஜமால். 'கொலவெறி'யோட யோசிப்பவர்கள் நிறைய பேர் இருக்காங்க

ச.பிரேம்குமார் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
படிக்க தொடங்கியவுடனே இதுல ஏதோ திருகுனி வேலை இருக்குன்னு புரிஞ்சது.. //

கிகிகி...நீங்க ரொம்ப புத்திசாலி ;-)

//நல்லா இருக்கு.. மொழிபெயர்ப்பின் மூலம் என்னன்னு சொல்லலாமே பிரேம்..//
மின்னஞ்சலில் வந்தது பாண்டியன் :-)

ச.பிரேம்குமார் said...

// சந்தனமுல்லை said...
ஹை...மெயிலில் படித்திருந்தாலும்
இப்போ தமிழில் படிக்க இனிமையாயிருக்கிறது பிரேம்!! தொடரட்டும், மொழிபெயர்ப்பு பணி!
//
நன்றி முல்லை. ரொம்ப சுவாரசியமாக இருந்ததால நம்ம ஊர்மணத்தோட மொழிபெயர்க்க ஆசைபட்டேன் :)

ச.பிரேம்குமார் said...

//கார்த்திக் said...
அருமை தல
ரொம்ப நல்லாருக்கு
மிகவும் ரசிக்கும் படியான பதிவு //

நன்றி கார்த்திக் :)

(எதுக்கும் பையன் கண்ணுல இது படாதா மாதிரி மறச்சு வைங்க)

ம்கும்... இதெல்லாம் படாம வச்சா மட்டும் அப்படி யோசிக்க மாட்டங்களா என்ன? அடுத்த தலைமுறை ரொம்பவும் கெட்டிக்காரர்கள் :)

ச.பிரேம்குமார் said...

//நல்ல ஐடியாவா இருக்கே?!
lolz//

நீயும் வீட்டில முயற்சி செய்து பார்க்க போறீயா கார்த்திக் ;-)

//அருள்..வெற்றிசெல்வன்..இளவேனில்
கௌதம் மேனன் பரவாயில்லை.//
நிசத்தில தான் யாரும் நல்ல தமிழ்ல பேர் வைக்கிறதில்ல. கதையிலயாவது வைப்போமே ;-)

ச.பிரேம்குமார் said...

//அந்த திடீர் திருப்பம் மிக அருமை.... இது உங்கள் கதையாக இருக்கும் பட்சத்தில் மிக அருமை... வாழ்த்துக்கள்//

ஹி ஹி ஹி... இல்லீங்க! இது மொழிபெயர்ப்பு. பதிவு வகையிலேயே இருக்கே. இருங்க, எதுக்கும் ஒரு குறிப்பும் போட்டுருவோம்

anbudan vaalu said...

நல்லா இருக்கு.....

Anonymous said...

ஹிஹிஹி........ அருமை

Anonymous said...

முதல்ல வாசிக்கிறப்போ பயந்திட்டம் இப்படு ஒரு பென்னா... ஆனலூம் ரொம்பத்தான் புத்திசாலி

சொல்லரசன் said...

அதீத கற்பனை

தேவன் மாயம் said...

அதுக்காக
இப்படி ஒரு
அதிர்ச்சியா
கொடுப்பது?

தேவா...

ச.பிரேம்குமார் said...

//anbudan vaalu said...
நல்லா இருக்கு.....
//

நன்றி வாலு :)

ச.பிரேம்குமார் said...

//கவின் said...
முதல்ல வாசிக்கிறப்போ பயந்திட்டம் இப்படு ஒரு பென்னா... ஆனலூம் ரொம்பத்தான் புத்திசாலி
//

என்ன செய்றதுங்க... இப்படியும் கொலவெறியோட யோசிக்கிறவுங்க இருக்குறாங்களே :)

ச.பிரேம்குமார் said...

//sollarasan said...
அதீத கற்பனை
//

கிகிகி.... :)

சொல்லரசன்... அழகான பெயர்

ச.பிரேம்குமார் said...

//thevanmayam said...
அதுக்காக
இப்படி ஒரு
அதிர்ச்சியா
கொடுப்பது?
//

கிகிகி... வாழ்க்கையில் ஒரு த்ரில் வேணாங்களா??? ;-)

MSK / Saravana said...

ஹிஹிஹி........ அருமை...

மெயிலில் படித்திருந்தாலும்
இப்போ தமிழில் படிக்க இனிமையாயிருக்கிறது பிரேம் அண்ணா..

தாரணி பிரியா said...

வாழ்க்கையில திரில் வேணும்தான். ஆனா அப்பாவுக்கு இப்படியா அதிர்ச்சி தர்றது.

கோபிநாத் said...

நல்லாயிருக்கு மாப்பி ;)

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

ராம்.CM said...

அழகாக உள்ளது.அருமையாக எழுதியுள்ளீர்கள். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

வாழ்த்துக்கள் ப்ரேம்!,

A N A N T H E N said...

உங்களுக்கு ஏதும் இதுபோல அனுபவம் இல்லையே?

புதியவன் said...

அருமையான கற்பனை...நல்லா இருக்கு...

மேவி... said...

நல்ல இருக்கு........
த்ரில்லை கிரில் மாதிரி கதைல உஸ் பண்ணிஇருக்கிங்க

priyamudanprabu said...

ஏன் இப்படி???????

butterfly Surya said...

தங்கள் வலை அருமை..

வாழ்த்துக்கள்..

உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?

அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.


உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்


http://butterflysurya.blogspot.com


தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும்

நன்றி

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்பின் பிரேம்.. சில நாட்களாக வலைப்பக்கம் ஆளைக் காணோமே? வேலைப்பளு அதிகமா? take care...