18 March 2009

இத்த‌னை நாளாய் எங்கிருந்தாய்

சோம்ப‌லுட‌ன் விடிந்த‌ ம‌ற்றொரு ஞாயிறு காலையில் முகில‌னின் தொலைபேசி ஒலித்த‌து. எதிர்முனையில் அவ‌ன் காத‌லி க‌னிமொழி.

முகில், மாலை வீட்டுக்கு வரீயா?

நான் மாட்டேன்பா, உங்க வீட்டில ஒரே பெண்கள் கூட்டமா இருக்கும். எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் வரல‌

அட, யாரும் இல்ல. எல்லோரும் கடைத்தெருவுக்கு போறாங்க. தனியா இருக்க கடுப்பா இருக்கும். அதான் உன்னை கூப்பிட்டேன்

என்னது தனியா இருக்கீயா? இதோ, உடனே கிளம்பி வரேன்

தோடா, ரொம்ப ஆசையெல்லாம் வளத்துக்காதே. சும்மா பேசிக்கிட்டு இருக்கத்தான் கூப்பிட்டேன். சீக்கிரம் வந்து சேரு

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

என்னப்பா கிளம்பிட்டீயா இல்லையா?

இப்போ தான் கனி கிளம்பினேன். இன்னும் ஒரு பத்து நிமிசம் ஆகும் வர‌

வரும் போது ஒரு நாற்காலி வாங்கிட்டு வாயேன்.

எதுக்கு ? உன் தோழிகள் வர வரைக்கும் அது உங்க வீட்டு வாசல்ல போட்டு நான் உக்காந்து உனக்கு காவல் காக்கவா?

ரொம்பத்தான்... வாங்கிட்டு வா. சொல்றேன்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

யேய் கனி, இந்த கீபோர்டு எப்போ வாங்கினே?

நேத்து அண்ணா வந்த போது வாங்கினேன். எனக்காக என் சம்பளத்தில் நான் விரும்பி வாங்கிகிட்டது.

நான் இப்போ தான் வேலைக்கு சேர்ந்து இருக்கேன். நீ கொஞ்சம் நாள் பொறுத்திருந்தா நானே உனக்கு இத வாங்கி கொடுக்கனும்னு இருந்தேன்.

அதுக்கென்ன? இது பேசிக் மாடல் தான். இன்னுமொரு நல்ல மாடல் இருக்கு. விலை 2 லட்சம் தான். நீ சம்பாதிச்சு அதை எனக்கு வாங்கி கொடு

ஆகா, நீ ஆதாரத்துக்கே சேதாரம் விளைவிச்சுருவ போல. சரி சரி, உனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு வாசிச்சு காட்டேன்.

வாசிக்கிறேன். ஆனா நீ கூட‌வே பாட‌னும். ச‌ரியா?

உன‌க்கு ஏன் இந்த விப‌ரீத‌ ஆசை? ச‌ரி விடு. நான் பாடுற‌த‌ வேற‌ யாரு கேக்க‌ போறா? பாடுறேன்...

முதல்ல அந்த நாற்காலிய கொடு. நான் உட்காருறேன்

தோடா...இவ்வ‌ள‌வு தூர‌ம் சும‌ந்துகிட்டு வ‌ந்திருக்கேன். நான் தான் முத‌ல்ல‌ உக்காருவேன். நீ வேனும்னா என் ம‌டியில‌ உக்காந்துக்கோ

ஆள‌ விடு சாமி. நீயே அந்த‌ நாற்காலியில உட்காரு


வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்


எங்க‌ உன் இமையை திற‌ பார்ப்போம்... நானிருக்கேனான்னு?


விழிக‌ள் நான்கும் நெருங்க‌, இமைக‌ள் எல்லாம் ப‌ட‌ப‌ட‌த்துக்கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் கிற‌க்க‌த்தில் க‌விழ்ந்து கொண்ட‌ன. இரு க‌ண்க‌ள் க‌ல‌க்க‌த்தில் துடித்த‌ன.

ச‌ரி க‌னி, நான் கிள‌ம்புறேன்

ம்ம்ம்

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

முகில் கிள‌ம்பி இர‌ண்டே நிமிட‌த்தில் அவ‌ன் செல்பேசி குறுகுறுத்த‌து. க‌னி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தாள்


எதுக்கு திடீர்னு கிள‌ம்பி போனே?

இல்ல‌, உன்னை முத்த‌மிட்டுடுவேனோன்னு தோனுச்சு. அதான் கிள‌ம்பிட்டேன்

ஏன்? கொடுத்தா தான் என்ன‌வாம்?

நீதானே ரொம்ப‌ ஆசையெல்லாம் வ‌ள‌த்துக்க‌ கூடாதுன்னு சொன்ன‌....

அட‌ப்பாவீ.. அதெல்லாம் சொல்ற‌து தான். இன்னும் இர‌ண்டு மாச‌த்துல ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம். உன்னை க‌ட்டிக்கிட்டு என்ன‌ தான் செய்வேனோ?

YOU ARE SUCH AN UNROMANTIC PERSON MUGHIL...


17 க‌ருத்துக்க‌ள்:

DHANS said...

nice one prem :)

me the first :))

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு..இது உங்க உண்மை கதையா?! :-)

Unknown said...

அருமை ப்ரேம்

நல்ல நடையில் சொல்லியிருக்கீங்க

ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! உங்கள் க‌தையை பெயர் மாற்றம் செய்து போட்டிவிட்டீர்களா?

Unknown said...

// எழுத்து வகை: காத‌ல்//

தல எல்லாம் சரிதான்

ஆனா வகைல அனுபவம்னு இருந்திருக்கனும்.

அருமையா இருக்கு

Anonymous said...

நன்றாக இருக்கிறது. சொந்த அனுபவம் தானே???

கார்த்திகைப் பாண்டியன் said...

பிரேம்.. நடை அருமை... நீங்கள் தெரிவு செய்துள்ள காதல் பாட்டும் அருமை.. கிட்டக்க இருந்து பாக்குற மாதிரி.. மலரும் நினைவுகளா? வாழ்த்துக்கள்..

ச.பிரேம்குமார் said...

ஒரு குரூப்பா தான்யா கெள‌ம்பியிருக்காங்க‌.... !!!!

Anonymous said...

நல்லா இருக்கு ப்ரேம்...

anbudan vaalu said...

:)))
சொந்த கதையா??!!

சொல்லரசன் said...

நீங்களோட பிரேம்மாம் சூப்பர்

Karthik said...

short..simple..sweet.

nice one prem. :)

Karthik said...

அனுபவம் நன்றாக வந்திருக்கிறது பிரேம். ஆனால் அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு தானே சொன்னீங்க? அதுவும் தவிர நீங்க வாங்கிட்டு போனது நாற்காலி அல்லவே?
;)

Karthik said...

முதல் காதல் எப்பவுமே மனதில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் என்பது தெரிகிறது. பின்றீங்க பிரேம். :)

"உழவன்" "Uzhavan" said...

//வரும் போது ஒரு நாற்காலி வாங்கிட்டு வாயேன்//

கொய்யால.. வாங்கி குடுத்தே நம்ம அழிஞ்சிருவோம் போல.. :-) வீட்டுல ஒரு நாற்காலி கூடவா இல்ல? கீ போர்டு சொந்தமா வாங்கின மாதிரி தெரியலயே..
நல்ல கதை.. வாழ்த்துக்கள்!

மஞ்சூர் ராசா said...

கதையோ அனுபவமோ... நல்லா இருக்கு.... ஆனா நாற்காலி கொஞ்சம் நெருடுது.....

Anonymous said...

வசீகரிக்கும் எழுத்துக்கள்! வாழ்த்துக்கள்!