25 March 2009

யாதும் ஊரே, யாவரும் கேளிர் !

யாதும் ஊரே
பிரேம்குமார் சண்முகமணி





மும்பையெங்கும் இந்தி பேசுபவர்களை
முரட்டுத்தனமாய் தாக்குங்கள்;
பூனே நகரத்துள்
கன்னடப் படம் ஓடும்
கொட்டகை கொளுத்தப்படட்டும்;

பெங்களூரில் வாழும்
தமிழர்கள் எல்லாம் பாவிகள்தாம்!
பலியிடுங்கள் அவர்களை.

பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

நன்றி : கீற்று

24 க‌ருத்துக்க‌ள்:

DHANS said...

superappu....

சந்தனமுல்லை said...

என்ன ஒரு முரண் !!நல்லாருக்கு பிரேம்!

நட்புடன் ஜமால் said...

அருமையச்சொன்னீங்க

பாண்டித்துரை said...

பாடிக்கொண்டிருக்கட்டும்

ஆ.சுதா said...

உண்மையாக சொன்னீங்க

na.jothi said...

நல்லா இருக்கு ப்ரேம்

Karthik said...

really nice one bro!
:)

FunScribbler said...

நெத்தியடி!

கவிதை அருமை!

கார்த்திகைப் பாண்டியன் said...

நிதர்சனம் கவிதையாய்.. வருத்தப்பட வேண்டிய விஷயம் பிரேம்..

கோபிநாத் said...

கவிதை எழுதிய உனக்கு ஒரு சூப்பர். ;)

பட் கவிதை கருத்தை பார்க்கும் போது ;( வருது

ராம்.CM said...

பள்ளிகளில் மட்டும் பிள்ளைகள்
பாடிக்கொண்டிருக்கட்டும்
'யாதும் ஊரே யாவரும் கேளீர்'///


நிச‌ப்த‌மான‌ உண்மை! எல்லோரும் வெட்க‌ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று.

ச.பிரேம்குமார் said...

நன்றி தனா :)

ச.பிரேம்குமார் said...

ஆமாங்க முல்லை. பெரியவங்க! இதுக்கு மேல ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு’ சொல்லியிருக்காங்க

உள்ளூருக்கே இந்த நிலை ;)

ச.பிரேம்குமார் said...

நன்றிங்க ஜமால் :)

ச.பிரேம்குமார் said...

ஆகா! கவிஞரே.. வாங்க வாங்க. கருத்துக்கு மிக்க நன்றி :)

ச.பிரேம்குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முத்துராமலிங்கம் :)

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி புன்னகை :)

ச.பிரேம்குமார் said...

நன்றி கார்த்திக் ;)

ச.பிரேம்குமார் said...

மிக்க நன்றி தமிழ் :)

ச.பிரேம்குமார் said...

வருத்தம் மட்டும் பட்டா போதுமா பாண்டியன். ஏதாவது செய்யனுங்க :(

selventhiran said...

இதனாலதாம்யா ஒன்ன பிறவிக்கவிஞன்னு சொல்லுதேங்...

ஜியா said...

தல.... கலக்கிருக்கீங்க...

Raju said...

கவிதை சூப்பர் பிரேம் அண்ணே...

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல கவிதை!

நண்பரே! ஒரு விஷயம் சொல்லட்டுமா?

கிட்டத்தட்ட இதே வரிகளோடு இதே சிந்தனையை நான் எழுதி, பின் கீற்று இதழில் உங்கள் கவிதையைப் படித்த பின் (நல்ல வேளை. படித்தேன் :)) சிரித்துக் கொண்டு அமைதியாகி விட்டேன். கடைசி வரிகள் மட்டும் இப்படி எழுதி இருந்தேன், ' இந்தியா என் தாய் நாடு. இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதரிகள்' :)

-ப்ரியமுடன்
சேரல்