10 March 2009

சந்தனமுல்லைக்கு போட்டியாக‌

சில பழைய தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் வீடியோக்களை நண்பர்களின் ஆர்குட் வீடியோக்களில் பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் சிலர் அதே போல உணரலாம். ஆக அந்த வீடியோக்கள் உங்களுக்காக‌

நீளமான பாடல். அப்போது திரையுலகில் பிரபலமாய் இருந்து பலரை ஒன்றாக காணக்கூடிய வாய்ப்பை தரும். இந்தியாவின் அனேக மொழிகளில் வரிகளை கொண்டிருக்கும். அடிக்கடி டி.டி யில் ஒளிபரப்படும்உள்நாட்டு அமைதி சற்று ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் இந்நாட்களில் தொலைகாட்சிகள் இப்பாடலை ஒளிபரப்பினால் தேவலை

இசைந்தால் நம் இருவரின் ஸ்வரமும் நமதாகும்
திசை வேறானாலும் ஆழிசேர் ஆறுகள் முகிலாய் மழையாய் பொழிவது போல்...


***


அடுத்த வீடியோ The Jungle Book தொடரின் முகப்புப் பாடல். கேட்க கேட்க திகட்டாத பாடல். இப்பாடலை கேட்கும் போது மீண்டும் பால்யத்திற்கே போய் விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.***


சந்தனமுல்லை அடிக்கடி நாஸ்டால்ஜிக் பதிவுகள் போட்டு பழைய நினைவுகளை கிண்டி விடுவாங்க. இந்த பதிவ எழுத ஆரம்பிச்சவுடனே அவுங்க பதிவுகள் தான் நினைவுக்கு வந்துச்சு. அதான் அப்படி ஒரு தலைப்பு

***


இலவச இணைப்பு : தீபாவளிக்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செய்த வீடியோ. பார்த்து ரசிங்க!

12 க‌ருத்துக்க‌ள்:

சந்தனமுல்லை said...

ஆகா..கிளம்பிட்டீங்களா?! அந்த முட்டை பாட்டு கிடைக்கலியா பிரேம்?
அப்புறம் இந்த முதல் பாடல்..நம்ம ஊர்க்காரங்களைப் பார்க்கவே ஒரு பரவசம் வருமே!! :-)

நட்புடன் ஜமால் said...

ஹையா!

ஜன்கில் புக்

எனக்கும் ரொம்ப பிடிக்கும் ...

பிரேம்குமார் said...

அட‌டே... நாஸ்டால்ஜியான்ன‌ உட‌னே முத‌ல்ல‌ ஆஜ‌ராகிட்டீங்க‌ளே முல்லை.

//நம்ம ஊர்க்காரங்களைப் பார்க்கவே ஒரு பரவசம் வருமே!! :-)//

அதே தாங்க‌. அந்த‌ 30 வினாடிக்காக‌ எத்த‌னை முறை ஆவ‌லுட‌ன் காத்திருந்திருப்போம் :)
இப்போ கூட‌ அந்த‌ப் பாட‌லை கேட்ட‌வுட‌ன் ஒரு ப‌ர‌வ‌ச‌ம் வ‌ந்துடுச்சு.

முட்டை பாட‌லை தேடிப் பாக்குறேங்க‌

பிரேம்குமார் said...

வாங்க‌ ஜ‌மால். என‌க்கும் அந்த‌ தொட‌ர் ரொம்ப‌ பிடித்த‌மான‌ ஒன்று

Karthik said...

//நீளமான பாடல்.

கமல் சூப்பர்ப்பா இருக்காருங்க. யாருங்க அந்த கிரிக்கெட்டர்???

//இப்பாடலை கேட்கும் போது மீண்டும் பால்யத்திற்கே போய் விட்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

ஆஹா, போய் பொழிலனை படிக்க வைங்க பிரேம். :P

//தீபாவளிக்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் செய்த வீடியோ.

ஹ்ம்ம், இந்த வீடியோவில் உங்க ஹேர் ஸ்டைல் சூப்பர்பா இருக்கு பிரேம். ;)

Karthik said...

e mail follow up.

Newspaanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

கார்த்திகைப் பாண்டியன் said...

இங்கே எனக்கு பாட்டு லோட் ஆகவில்லை நண்பா.. ஆனால் டிடியில் பாத்த அந்த பாடலை யாராலும் மறக்க முடியாது.. அருமையான பாடல்.. எல்லா இசைக் கலைஞர்களையும் ஒன்றாக பார்க்க ரொம்ப நன்றாக இருக்கும்..

ராம்.CM said...

ஹாய் ப்ரேம்! ஜங்கிள்புக் நானும் தொடர்ந்து பார்த்து வந்தேன்! மீண்டும் பார்த்த அனுபவம் மனதில் தோன்றியது.!

பிரேம்குமார் said...

Karthik, ஏனிந்த கொலவெறி.. ??

பிரேம்குமார் said...

லோட் ஆகலீயா? இணைய பிரச்சனையா இருக்கும். அப்போது இது ஒரு சூப்பர் ஹிட் பாட்டாச்சே :) கட்டாயம் எல்லோருக்கும் இது பிடித்தமான ஒன்று என்று நினைக்கிறேன்

நவநீதன் said...

எல்லாம் நல்லா தான் இருக்கும்.... ஆனா எங்க ஆபிசுல தடை செய்யப்பட்டிருப்பதால் பதிவை மட்டுமே படித்தேன்....