6 May 2009

திறமை, ஜொள்ளு, காதல் மற்றும் இன்னபிற

சமீபத்தில் நண்பன் ஒருவன் மூலம் இந்த காணொளியை காண நேர்ந்தது. இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன். அத்தனை சிறப்பாக இருக்கிறது* சில இடங்களில் திரைப்படத்தில் இடம் பெற்றதை விட சிறப்பாக செய்திருக்கிறார்கள்

* காதல் சொட்ட சொட்ட ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கலாம். எந்த வித அலங்காரங்களுமில்லாமல் ஒரு அழகான காதல் பாடலை தர முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள்

* இப்போதெல்லாம் தொலைக்காட்சியில், மேடைகளில் கூட காதல் பாடலுக்கான நடனம் ஆபாசத்துடன் தான் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் இது எவ்வளவோ மேல்

* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்

* இதில் வரும் ஆண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். ஆக, அந்த பொறுப்பை தோழிகளிடம் விட்டுவிடலாம். ஆனால் முதலில் ஆடும் ஆணின் Grace மிகவும் அற்புதமாக இருந்தது. கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது

* பதிவு போட சிறப்பாக எதுவும் கிடைக்கவில்லையென்பதால் இப்படி ஒரு மொக்கைப் பதிவு. வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)

43 க‌ருத்துக்க‌ள்:

புதியவன் said...

//* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்//

உண்மையிலேயே அழகாக தான் இருக்கிறார்கள்...

நல்லதொரு காணொளி பகிர்ந்ததற்கு நன்றி பிரேம்குமார்...

ஆதவா said...

அய்யோ எனக்கு வீடியோ தெரியாது....!! இருந்தாலும்.. நல்லா இருக்கும் என்று நம்புகிறேன்

ஆ.முத்துராமலிங்கம் said...

எனக்கும் விடியோ தெரியவில்லை
பிரேம். நானும் ஆதவா போல் நம்புகிறேன்!!

டக்ளஸ்....... said...

பட்ம் காட்ரீகளா..!
காண்டோட காட்ரீகளா..?

சேரல் said...

நன்றாக இருக்கிறது பிரேம். அழகாகவே இருக்கிறார்கள் இருவரும். அதைவிட அழகாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

-ப்ரியமுடன்
சேரல்

வேத்தியன் said...

வீடியோ நன்றாக இருந்தது...

பகிர்தலுக்கு நன்றி நண்பரே...

கோபிநாத் said...

சூப்பர் மாப்பி..நல்லாயிருக்கு வீடியோ ;))

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கும் விடியோ தெரியவில்லை.:-(

சந்தனமுல்லை said...

இதே மாதிரி சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பாடலும் மெயிலில் வலம் வந்தது, சென்ற வருடம்! :-)

கார்த்திக் said...

தல வீடியோ ரொம்ப டிரையா இருக்குங்க :-))

DHANS said...

நம்ம ஆபிசுல ஆணி புடுங்கும்போது படம்லாம் பாக்க கூடாதுன்னு சொல்லிப்புட்டாங்க

என்னமோ படம் காட்டிருக்கீங்க, அப்புறமா பாத்துபுட்டு நம்ம மைக்க கைல எடுக்கறேன்

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க. பகிர்வுக்கு நன்றி பிரேம்

கதிரவன் said...

காணொளி நல்லா இருக்குது பிரேம் - ஆனா, நீங்க சொல்ற மாதிரி தினம் ஒரு தடவையாவது பார்த்திடற அளவுக்கு ரொம்ப சிறப்பா தெரியலியே எனக்கு...ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் அப்டித் தெரியுமோ ?? ;-)

ச.பிரேம்குமார் said...

//உண்மையிலேயே அழகாக தான் இருக்கிறார்கள்...//

அதே தானுங்க புதியவன் :)

ச.பிரேம்குமார் said...

//ஆதவா said...
அய்யோ எனக்கு வீடியோ தெரியாது....!!
//

என்ன கொடும ஆதவா இது?! உங்க நம்பிக்கை வீண் போகாதுன்னு நம்புறேன் ;)

ச.பிரேம்குமார் said...

முத்து
Why blood? same blood?!!

Thamizhmaangani said...

அண்ணா, எனக்கு பிடிச்சமாதிரி போட்ட பதிவு இது தானோ! :)

//காதல் சொட்ட சொட்ட ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றால் இதை பார்க்கலாம்.//

அப்படியா? என்ன அண்ணா.. கொஞ்சம் ஒகே தான் வீடியோ தான்.

//அந்த வகையில் இது எவ்வளவோ மேல்//

உண்மை தான் உண்மை தான்!

Thamizhmaangani said...

//இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன்//

அண்ணிகிட்ட சொல்ல ஒரு மேட்டர் கிடைச்சாச்சு!:)

//இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும்//

இதையும் சொல்றேன்:)

//வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)//

அண்ணா, வேண்டாம் அண்ணா, என் சின்ன தம்பிய சீண்டாதீங்க!!

ச.பிரேம்குமார் said...

//அப்படியா? என்ன அண்ணா.. கொஞ்சம் ஒகே தான் வீடியோ தான்.//

ஓ அப்படியா :(

இதுல இருக்கிற பையன்கள உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன்

ச.பிரேம்குமார் said...

மேலும் அவுங்க மலேசியாவ சேர்ந்தவுங்க தானாம் ;)

Thamizhmaangani said...

//இதுல இருக்கிற பையன்கள உனக்கு பிடிக்கும்னு நினைச்சேன்//

எனக்கு பிடிக்கல!:(

//மேலும் அவுங்க மலேசியாவ சேர்ந்தவுங்க தானாம் ;)//

யாதும் ஊரே, யாவரும் கேளீர்! மலேசியா மட்டும் இல்ல எந்த ஊர பசங்களா இருந்தாலும், ஓகே!:)

Karthik said...

//இன்று வரை தினம் ஒரு முறையாவது அதை பார்த்து விடுகிறேன். அத்தனை சிறப்பாக இருக்கிறது

ஊப்ஸ், என்னால இங்க பார்க்க முடியல. அப்புறம் பார்த்துட்டு சொல்றேன்.

//இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்

இப்ப பிஸிக்கலா அடிபட வாய்ப்பிலையே! அக்காவுக்கு ஞாபகசக்தி ஜாஸ்தியோ? ;)

Karthik said...

//வானவில் வீதியில் மட்டும் தான் படங்காட்டுவாங்களா என்ன? நாங்களும் காட்டுவோம்ல ;-)

ஹா..ஹா. :))

//Thamizhmaangani said...
அண்ணா, வேண்டாம் அண்ணா, என் சின்ன தம்பிய சீண்டாதீங்க!!

அவ்வ்வ். :)))

Karthik said...

//"திறமை, ஜொள்ளு, காதல் மற்றும் இன்னபிற"

எங்கப்பா பிடிக்கிறீங்க இப்படி பலான பலான டைட்டில்லாம்??

பிரேம், நீங்க சொன்ன அந்த ஜோக்கை எப்ப போடட்டும்? ஹி..ஹி. ;)

Karthik said...

me the 25.

மெயிலுக்கு நன்றி. :)

ச.பிரேம்குமார் said...

டக்ளஸ் அண்ணே, ஏனிந்த கொலவெறி? ;-)

ச.பிரேம்குமார் said...

நீயாவது ஒத்துக்கிட்டுயே.. i have a company ;-)

ச.பிரேம்குமார் said...

வேத்தியன், மாப்பி நன்றி :)

ச.பிரேம்குமார் said...

என்ன கொடும பாண்டியா... உங்களுக்கும் வீடியா தெரியலையா :(

ச.பிரேம்குமார் said...

முல்லை, கண்கள் இரண்டால் பாட்டோட வேற வெர்ஷனா? ஆகா, எனக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலீயே :(

ச.பிரேம்குமார் said...

//கார்த்திக் said...
தல வீடியோ ரொம்ப டிரையா இருக்குங்க :-))
//

ராசா, உங்களையெல்லாம்.... ;-)

DHANS said...

super video thala, anaalum ippadi padam pottu engala thoondi vidakkoodathu

நிஜமா நல்லவன் said...

//* இதில் வரும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று சொன்னால் எனக்கு அடிவிழக்கூடும். ஆக மற்றவர்கள் அதை கூறலாம்//

அழகாக தான் இருக்கிறார்கள்..:)

ச.பிரேம்குமார் said...

நன்றி தாரணி பிரியா :)

ச.பிரேம்குமார் said...

//ஆனா, நீங்க சொல்ற மாதிரி தினம் ஒரு தடவையாவது பார்த்திடற அளவுக்கு ரொம்ப சிறப்பா தெரியலியே எனக்கு...ஒருவேளை கல்யாணத்துக்கப்புறம் அப்டித் தெரியுமோ ?? ;-)//

கதிரவன், அது ரொமாண்டிக்கா தெரிலயன்னா உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு அர்த்தம் ;-)))

ச.பிரேம்குமார் said...

//எங்கப்பா பிடிக்கிறீங்க இப்படி பலான பலான டைட்டில்லாம்??

பிரேம், நீங்க சொன்ன அந்த ஜோக்கை எப்ப போடட்டும்? ஹி..ஹி. ;)//

கார்த்திக், why this murder Rage?? :(

ச.பிரேம்குமார் said...

//DHANS said...
super video thala, anaalum ippadi padam pottu engala thoondi vidakkoodathu
//

ஹா ஹா ஹா :)

ச.பிரேம்குமார் said...

//அழகாக தான் இருக்கிறார்கள்..:)//

நீங்க நெஜமாவே ரொம்ப நல்லவருங்க :)

Anonymous said...

திரைப்படம் தோத்ததுச்சு. ரொம்ப அருமை. ஆனா என்ன நம்ம கிட்ட எவ்வளவு சரக்கு இருந்தாலும்(!!!) இப்படி எல்லாம் பண்ணித்தான் நம்ம வலைபூவுக்கும் ஆட்களை வரவழைக்க வேண்டி உள்ளது.என்ன பண்றது பூக்கடைக்கும் விளம்பரம் தேவையா இருக்கு.நானும் ஆரம்பிக்கிறேன்.

என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

vinoth gowtham said...

Hi Prem ..

R u from Pondicheery..
Me too yaar..

Iam from New saram.

DHANS said...

பொண்ணு அழகா இருக்கு பையன்தான் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி மூஞ்சிய வசுகிற்றுகான்

நானே நடித்திருக்கலாம் போல இதுக்கு

ச.பிரேம்குமார் said...

எந்த பையன (ஆள???) சொல்றீங்க தனா? முதலாமவர் ரொமாண்டிக்கா முகத்தை வச்சிருக்காராம். இரண்டாமவர் எக்ஸ்ப்ரஷன்கு முக்கியத்துவம் கொடுக்குறாராம் :)

ச.பிரேம்குமார் said...

//நானே நடித்திருக்கலாம் போல இதுக்கு//

இப்போவும் ஒன்னும் ஆயிடலை. உங்கள வச்சு ஒரு பாட்டு எடுத்துருவோம் ;-)