இந்நேரம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும். வாக்குப் பதிய தகுதியுடைய அனைவரும் கட்டாயம் உங்கள் வாக்கினை பதிந்துவிடுங்கள். கொஞ்சம் யோசித்து வாக்கியளியுங்கள். பேய்க்கு வாக்கப்படுறதா இல்லை பிசாசுக்கு வாக்கப்படுறதாங்குற நிலைமையில் தான் நாம் இருக்கோம். ஆனாலும் இரண்டுல எது பரவாயில்லைங்குறத பொறுத்து தான் முடிவுகள் இருக்கும் என்று நம்புறேன். நான் அதிகம் எதிர்பார்ப்பது தென்சென்னையில் போட்டியிடும் சரத்பாபுவை தான். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்
***
இத பத்தி ரொம்ப காலமா எழுதனும்னு நினைச்சேன். ஆனா அப்படியே விட்டு போயிடுச்சு. இந்த பதிவு அதுக்கு சரியான இடம்தான். எல்லா தொலைகாட்சிகளிலும் ஏதாவது ஒரு போட்டி. சரி வச்சு தொலையட்டும்னா கடைசியில மக்கள குறுஞ்செய்திகள் மூலமா வாக்களிக்க சொல்லி ஒரே புலம்பல்கள். சரி சாதாரண மக்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. பிரபலங்கள் ஆடும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் விழுந்து புரண்டு வாக்கு கேக்குறாய்ங்க. நீங்க காசு வாங்கி ஆடுவீங்க, ஜெயிச்சாலும் சுளையா பணத்த அள்ளிக்கிட்டு போயிடுவீங்க. இதுக்கு மக்கள் வாக்களிக்கனுமா? அதெப்படிய்யா வாக்கு என்று வந்துவிட்டாலே மக்கள் ஏமாளிங்க தான்னு முடிவெடுத்துடுறீங்க?
****
இப்போது நம்ம பதிவுலகத்திலயும் இந்த வாக்கு ஜீரம் தீவிரமா பரவியிருக்கு. தமிழ்மணத்துலயும் தமிழிஷ்லயும் வாக்களியுங்கன்னு மக்கள் எல்லா வகையிலயும் கேக்குறாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க. நம் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் வலைப்பதிவெழுதும் எல்லோருடைய எண்ணமும். ஆனால் வாக்களியுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது சில சமயம் சிரிப்பை வரவழைக்கிறது. அதிலும் நிறைய குளறுபடிகள் இருப்பதாக படிக்கிறேன். அந்த வாக்களிப்பில் எனக்கு ஏனோ நம்பிக்கையும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வரும் அத்தனை நண்பர்களின் பதிவுகளையும் அவர்களின் எழுத்துக்களுக்காகவே படிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)
13 May 2009
நான் வாக்களிக்க மாட்டேன்
எழுத்து வகை: எண்ணங்கள், பதிவர் வட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
18 கருத்துக்கள்:
hi me the first
அய்யோ இப்பதானே (49 ஓ )வோட்டு போட்டுட்டு வந்தேன். தமிழ்மணத்த்தில இதுவரைக்கும் போட்டது இல்லை. தமிழிஷ்ல பிடிச்சு இருக்கறதுக்கு போட்டுகிட்டுதான் இருக்கேனே.
அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்துவரைக்கும் நம்ம கை காசை செலவழிச்சு வோட்டு போடற ஏமாளிங்களா வேற இருக்கோம். சிந்தியுங்க மகாஜனங்களே
குறுஞ்செய்தி மட்டுமல்ல போன் பண்ணி ஓட்டு கேட்கறாங்க
//ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)//
சூப்பர் தல எழுத்துகளுக்குள்ள எதுக்கு தேர்தல் போட்டி?
நீங்க எதுக்கு தொலைக்காட்சி எல்லாம் பாக்கறீங்க அதுவும் தமிழ் தொலைக்காட்சி ? நீங்களே உங்க தலைல மன்ன வாரி போட்டுக்கிட்டு அவங்கள குத்தம் வேற சொல்றீங்க. காசுன்னா எப்படி வேணும் என்றாலும் கூவுவாங்க அதுக்கு நம்ம எதுக்கு கவனிக்கணும்?
விடுங்க பாசு இதெல்லாம் அஞ்சு வருசத்துக்கு ஒருக்கா நமக்கு பழகிபோச்சு
All in the Business Game thala....
ஆமாண்ணே..!
இப்போ பதிவுலகத்துல ஓட்டு பிரச்சனைதான் ரொம்ப காமெடி..!
நான் ரெண்டு நாளா நல்லா படிச்சு படிச்சு சிரிச்சேன்..!
பிரேம் கடைசி பத்தி மனவெளிச்சம் உண்மையை எழுதிஇயிருக்கீங்க.
நானும் கூட சில சமயம் நல்ல பதிவை படித்து விட்டு ஒட்டு போடாமல் விட்டு விடுவேன் அது அவசரமா கூட இருக்கலாம்.
பாத்தீங்களா ஓட்டு எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுதுன்னு. நல்ல கருத்தான பதிவு பிரேம்.
//அப்புறம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பொறுத்துவரைக்கும் நம்ம கை காசை செலவழிச்சு வோட்டு போடற ஏமாளிங்களா வேற இருக்கோம். சிந்தியுங்க மகாஜனங்களே//
அதே தாங்க... சிந்தியுங்க மக்களே
//அவங்கள குத்தம் வேற சொல்றீங்க. காசுன்னா எப்படி வேணும் என்றாலும் கூவுவாங்க அதுக்கு நம்ம எதுக்கு கவனிக்கணும்?
//
அதெல்லாம் போகிற போக்குல பாக்குறது தான் தனா. ஆனா பாக்கும் போது கடுப்பா இருக்கும் :(
//ஜியா said...
All in the Business Game thala....
//
நம்மள தானே கேனயனா ஆக்கிடுறாங்க தல :(
//நான் ரெண்டு நாளா நல்லா படிச்சு படிச்சு சிரிச்சேன்..!//
டக்ளஸ் அண்ணே, வொய் பிளட், சேம் பிளட்
// நல்ல பதிவை படித்து விட்டு ஒட்டு போடாமல் விட்டு விடுவேன் அது அவசரமா கூட இருக்கலாம்.//
அதாதே முத்து. பதிவ அனுபவிக்கறத விட்டுட்டு வாக்களித்துக்கொண்டிருக்க முடியுமா?
\\அவர்கள் எழுத்துக்கள் ரசிகன் நான். \\
நிஜமாதான் சொல்றியா!!!!!!
இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டுக்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை குறித்தும் அதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் துணை போவதை விளக்கியும் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் குறுவட்டு ஒன்று தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த குறுவட்டை வெளியிடக்கூடாது என்று காவல்துறையினர் தடை விதித்தனர்.
இதை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சி.பி.செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சோதிமணி, சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, குறுவட்டுக்களை தயாரிக்கும்போது, அதில் அதை தயாரித்தவர் மற்றும் வெளியிடுவோரின் பெயர் இடம்பெற வேண்டும்.
அவ்வாறு இருந்தால் அதை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே இலங்கை இனப்பிரச்சினை குறித்த குறுவட்டை வெளியிட அனுமதியளிக்க வேண்டும் என்று செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறுவட்டை வெளியிட அனுமதியளித்தனர். இந்த தீர்ப்பை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள்
வரவேற்றிருக்கின்றனர்.
இதேவேளையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு 9:00 மணிக்கு பின்னர் திடீரென மின்தடையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.
பெரியார் திராவிடர் கழகம் தயாரித்துள்ள குறுவட்டை ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததையடுத்து அந்த குறுவட்டு ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இதனை பொதுமக்கள் பார்ப்பதைத் தடுப்பதற்காக சென்னை இராயபுரம், புரசைவாக்கம், பெரம்பூர் உட்பட வட சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.
மாநில காவல்துறையால் தடை செய்யப்பட்டிருந்த இந்த குறுவட்டு இன்று ‘மக்கள்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்ததும் மின்தடையும் நீங்கிவிட்டது
//சென்னை முழுவதும் இன்று இரவு 9:00 மணிக்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்தடை நீடித்தது.//
கரண்டு கம்பிய எலக்காரங்க துண்டிச்சிட்டாங்கன்னு வேற ஒரு கூட்டம் சொல்லிகிட்டுத் திரியுதே:(
நான் மிகவும் எத்ர்பார்ப்பது மத்திய சென்னைதான். தயாநிதி மாறனும், ஸ்டாலினும் என்கிட்ட கூட ஓட்டு கேட்டாங்க. 'எனக்கு ஓட்டு இல்லை.. இருந்தாலும் இங்கு இல்லை'னு சொல்றதுக்குள்ள போய்ட்டாங்க. :((
நோ ஐடியா.. :)
நான் என் பதிவில் ஓட்டெல்லாம் கேட்பதில்லை. ஓட்டாம இருங்கனு தான் கேட்கிறேன். அவ்வ்..!!
/நான் என் பதிவில் ஓட்டெல்லாம் கேட்பதில்லை. ஓட்டாம இருங்கனு தான் கேட்கிறேன். அவ்வ்..!! //
அவனவன் பிரச்சனை அவனவனுக்கு..... ஆனா கார்த்திக், உன்னை ஓட்டக்கூடாதுன்னு சொல்றத கண்டிப்பா கேட்பேன்னு என்னால உத்திரவாதம் தர முடியாது ;)
//ச.பிரேம்குமார் said...
பெயர் மாத்திட்டீங்க. நியுமராலஜி???
நான் கூட பிரேம் கோபத்துல நம்ம ஜனநாயகக் கடமை ஆற்ற மறுத்துட்டாரோன்னு பயந்து போயிட்டேன்.. :-)
Post a Comment